பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 243

நிவாரண மூலமாகும். இந்த அவா எவ்விதமாக வந்து தோன்றுகிறதென்றும், மறைகிறதென்றும் உங்களுக்குத் தெரியுமா. எவ்விதமாகக் கசிந்து உருகுகிறதென்றும் உங்களுக்குத் தெரியுமா. இவ்வுலகிலுள்ள மக்களை எவ்வெவ்விடங்களில் சந்தோஷிப்பிக்கச்செய்வதும் இன்ப சுகந்தருவதுமாய் இருக்கின்றனவோ அவ்வவ்விடங்களில் எல்லாம் இவ்வாசையானது தோன்றி மறைகிறதும் கசிந்து உருகுகிறதுமாய் இருக்கின்றது. இவ்வகையால் அவாவை ஒழிக்க ஒருவன் காமதன்ஹா என்னும் புலன்களால் உண்டாகும் அவாவிலிருந்து விடுதலைப்பட்டாலும் பவாதன்ஹா என்னும் உயிர்வாழ்க்கையின் பேரில் உண்டாகும் அவாவிலிருந்து விடுதலைப்பட்டாலும் முழுபற்றை ஒழிக்கமுடியாது. ஏனெனில் இவ்விரண்டுவித அவா முற்றும் ஒழிந்தால் உபாதானாவாகும் பற்றொழியும். அப்பற்றொழிய பிறப்புக்கு மூலமாகும் கருமக் கூட்டங்கள் ஒழியும். கருமக் கூட்டங்கள் ஒழியப் பிறப்பொழியும். பிறப்பொழிய மூப்பொழியும். மூப்பொழிய மரணமொழியும். மரணமொழிய அதனவத்தை ஒழியும். அவத்தை ஒழிய அழுகை ஒழியும். அழுகை ஒழிய கவலையும் ஏக்கமும் ஒழியும். துன்பமென்னும் இராட்சியத்திற்கெல்லாம் இதுதான் நிவர்த்தி இதுதான் துக்கநிவாரணமென்னுந் தூய்மெயான சத்தியம்.

நான்காவது துக்க நிவாரணமார்க்க சத்யம்

ஓ! சகோதிரர்களே! துக்கநிவாரணமென்னும் தூய்மெயான சத்தியம் யாதென்பீரேல், அவைதான் பரிசுத்த அஷ்டாங்கமார்க்கமென்னப்படும்.


1. சம்மாதித்தி நற்காட்சி
1. பிரஞ்ஞை ஞானம்
2. சம்மா சங்கப்போ நற்சிந்தை
3. சம்மா வாசா நல்வசனம்  2. சீலம் நீதி
4. சம்மா கம்மந்தோ நற்செய்கை
5. சம்மா அஜீவோ நல் வாழ்க்கை
6. சம்மா வாயமோ நல்ஊக்கம்
7. சம்மா சத்தி நற்கருத்து  3. சமாதி சலனமற்ற மனம் மன ஆறுதல்.
8. சம்மா சமாதி நல் அமைதி

ஓ ! சகோதிரர்களே! இப்பரிசுத்தமும் நெருக்கமுமாகிய பாதையைக் கண்டுபிடிப்பதற்கே என். சக்கிரவர்த்திப் பீடத்தைத் துறந்தேன், என் மனைவி மைந்தனை விடுத்தேன், உற்றார் உரவினரை மறந்தேன், சுகபுசிப்பைத் தவிர்த்தேன், சுகநித்திரை அகன்றேன், இத்தகைய இன்பசுகங்கள் யாவும் தோன்றுவதும், மறைவதும், சிற்றின்பத்தைக்காட்டுவதும், பெருந்துக்கத்தில் ஆழ்த்துவதும், நித்தியம் போலாளுவதும், அநித்தியத்தில் மாளுவதுமாகிய செயல்களில் துக்கமே சுகத்திற்கு வழியாகவும் அநித்தியமே நித்திய நடையாகவும், துவிதமென்னும் நாமரூபமே அத்துவித நிருவாணமாகுந் ததாகதமுற்றேன். இதனை நீங்கள் ஒவ்வொருவரும் ஆழ்ந்து சிந்தித்து அதனினின்று சாந்தத்துள் ஐக்கியப்பட்டு பகுத்தறிவுண்டாகி தெளிவடைந்து மனவமைதி உண்டானவுடன் துக்கமற்று வாதனை அற்று அழுகையற்று தோன்றி தோன்றி மறையும் பிறப்பற்று சகல துன்பங்களுமற்று ததாகதமென்னுஞ் சலனமற்றநிலையை அடைவீர்கள். இதற்குச் சமதையான வழி வேறொன்றுங் கிடையாது.

ஓ! சகோதிரர்களே! இப்பரிசுத்த மார்க்கத்தில் நடப்பீர்களாகில் துக்கத்தின் முடிவைக் காணுவீர்கள். இத்துக்கத்தை நீக்குவதற்கு இன்னொரு வரைத் தேடவேண்டாம். அவரவர்களுடைய துக்கம் அவரவர்களைத் தொடர்ந்துக்கொண்டே நிற்கின்றது. ததாகதரோ வழிகாட்டியாவேன் நீங்கள் ஒவ்வொருவரும் அவ்வழியில் நடந்து சோம்பலின்றி யாத்திரையை முடிப்பீர்களாக.

ஓ! சகோதிரர்களே! என் வாய்மெய்ப் பொக்கிஷத்தை செவிகளில் நிறப்புங்கள். ஏனெனில் அழிவற்றதைக் கண்டுபிடித்துள்ளேன் என்னால் கூறுவது சத்தியம். தாதாகதர்கூறியபடி நடப்பீர்களாகில் இல்வாழ்க்கையிலும் பரிசுத்த சுகவாழ்க்கையை அடைவீர்கள். இப்பரிசுத்தவாழ்க்கையை