பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 251

செவி, மனம் இவைகள் மூலமாக உண்டாகும் சப்த, பரிச, ரூப, ரச கந்த எண்ணங்களாகிய ஆறும் ஒழியும்.

சடாயதனங்கள் ஒழியின் அதனினின்றெழும் பதோ என்னும் பரிசம் அல்லது ஊறு ஒழியும்.

பதோ என்னும் பரிசம் ஒழியின் அதனினின்றெழும் வேதனா நுகர்ச்சி ஒழியும்.

வேதனா என்னும் நுகர்ச்சி ஒழியின் அதனினின்றெழும் தன்ஹா வேட் கை ஒழியும். தன்ஹா என்னும் வேட்கை ஒழியின் அதனினின் றெழும் உபாதானா பற்று ஒழியும்.

உபாதனா என்னும் பற்றுக்கள் ஒழியின் அதனினின்றெழும் பவோ பிறப்புக்கு மூலமாகுங் கருமக்கூட்டங்கள் ஒழியும்.

பவோ என்னும் பிறப்புக்கு மூலமாகும் கருமக்கூட்டங்கள் ஒழியின் அதனினின்றெழும் ஜாத்தி மறுபிறப்பொழியும்.

ஜாத்தி என்னும் பிறப்பொழியின் பிணி, மூப்பு, மரணம், அழுகை, துன்பம், கவலை, ஏக்கம் என்னும் துக்கம் நிவாரணமாம்.

ஓ! சகோதிரர்களே! ஜீவர்கள் அறியாமெயில் மூழ்கி அவாவால் கட்டுண்டு அங்குமிங்கும் ஓடி கண்டதை நாடி புதியவானந்தத்தை அனுபவிக்க விரும்புவதினால் புதிய புதிய பிறப்புகள் மாறி மாறி தோன்றி சுழன்றுவருகின்றது.

லோபா - பேராசையாலும், தோஷா - கோபத்தாலும், மோஹா - அறியாமெயினாலும் உதித்த சீவர்களது கருமமானது பேராசையிலிருந்தேனும், கோபத்திலிருந்தேனும், அறியாமெயிலிருந்தேனும் உற்பத்தியாகி; பேராசை யிலாவது, கோபத்திலாவது, அறியாமெயிலாவது விருத்தியடைந்து; பேராசையைக் கொண்டும், கோபத்தைக்கொண்டும், அறியாமெயைக் கொண்டும் சீவர்கள் எங்கெங்கிருக் கின்றனவோ அங்கங்கு பரவி உள்ள சீவர்கள் செய்த கருமத்தின் பிரகாரம் இப்போதோ மறுபிறப்பிலோ அந்தந்த கருமத்திற்குத் தக்க பலனை அனுபவிக்கின்றனர்.

சீவர்கள் அறியாமெயினின்று விலகுவதாலும், விவேகவிருத்தியினாலும், பேரவாவை நாசஞ் செய்வதாலும் மறுபிறப்பிற்காம் ஏதுக்கள் யாதுமில்லாமற் போம்.

எவ்வகையிலென்னில், சீவர்களது கருமமானது பேராசையாலாவது , கோபத்தாலாவது, அறியாமெயாலாவது நேர்ந்ததல்ல.
பேராசையிலிருந்தாவது, கோபத்திலிருந்தாவது, அறியாமெயிலிருந்தாவது உற்பத்தியாயதல்ல.

பேராசையாகவே இருந்தேனும், கோபமாகவே இருந்தேனும், அறியாமெயாகவே இருந்தேனும் அக்கருமம் விருத்தியடைந்ததல்லவென்று எப்போது ஏற்படுகின்றதோ அப்போதே பேராசையும், கோபமும், அறியாமெயும் ஒழிந்து கருமமும் அழிந்துபோமென்பது திண்ணம்.

அதாவது ஓர்பனைமரத்தை வேரோடு வெட்டி எறிந்துவிட்டபின் மறுபடியுந் துளிர்க்காமல் எப்படி மடிந்துவிடுகின்றதோ அதுபோல் மேற்கண்ட கருமங்களை எப்போது வேருடன் களைந்துவிடப்படுகின்றதோ அப்போதே கருமக்கூட் டோற்பவம் மடிந்துபோமென்பதாம்.

பேராசையை நாசஞ்செய்யவேண்டுமென்றும், கோபத்தை நாசஞ் செய்யவேண்டுமென்றும், அறியாமெயை நாசஞ்செய்யவேண்டுமென்றும், துர்நடத்தையை நாசஞ்செய்யவேண்டும் என்றும், மனதிற்கு சுகயீனமான வைகளை நாசஞ்செய்யவேண்டும் என்றும் போதித்து வருகின்றபடியால் பேராசை, கோபம், அறியாமெய் நிறைந்த சீவர்கள் என்னை சூன்யக் கோட்பாட்டை உடையவரென்றும்; பேராசை, கோபம், அறியாமெயற்ற சீவர்கள் என்னை அசூன்யக் கோட்பாட்டை உடையவரென்றுங் கூறுவர்.

தேகவிருத்திக்குத் தக்க புசிப்பும், பருமனும், உணர்வும், சிற்றின்பமுந் தோன்றுவதுபோல்; விவேகவிருத்திக்குத்தக்க சுகமும் ஆனந்தமும் பேரின்பமுந் தோன்றும்.