பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

264 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அச்சந்தேகத்தை மரணமடைந்தபின் சகலமுமடிந்து வினைபோகத்துக் கீடாய் மறுதேகத் தோற்றலைக் காண்பான். அக்காட்சியால் துற்கன்ம நற்கன்மச் செயல்களின் பலன்களை உணர்ந்து சந்தேகமற தன்தேக நற்கன்ம பலன்களைப் பெருக்கி சதானந்தமும் நித்திய சுகமும் மரணத்தை ஜெயித்தவிடமாம் சந்தேகமற்ற சதா விழிப்பினிடத்திலுள்ள தென்று உணர்ந்து சந்தேகத்தினின்று விலகி சதா விடுபட்டவனாகின்றான்.

இவ்வகையாக சந்தேகங்களை அகற்றி தன் தேக அந்தரங்கத் தோற்றங்களையும் அதன் களைகளையும் வேரறக் களைந்து தோற்றுங் களைகளெழாது சிந்திப்பான்.

இவ்வகைச் சிந்தனா தியாகம் எவ்விடத்துதித்ததென்னில் இடைவிடா நுட்ப விசாரிணையாலும் சத்திய தரிசனையாலுந் தன்னை உணர்ந்து வெறுப்படைந்த புண்ணியத்தாலும் ஆழ்ந்த சிந்தனையாலும் உலகபந்தத்தில் சிக்குண்ணா ஜாக்கிரதையாலும் உண்டாகும் நல்லிச்சையின் நடுநிலையாம் சுபயிச்சை விசாரணை தியானமென்னப்படும்.

இத்தகைய நல்லிச்சை விசாரிணை தியானமாகிய பஞ்சஸ்கந்த தம்மேய வென்னும் ஐந்து மூலதத்துவங்களை விசாரிக்கின்றான்.

1. ரூபம் எவ்விதமாகத் தோன்றி எவ்விதமாக மறைகிறதென்றும் 2. உணர்ச்சி எங்கிருந்து தோன்றி எங்கு மறைகிறதென்றும், 3. குறிப்பு எவ்விடத்தினின்று தோன்றி எவ்விடத்தில் மறைகிறதென்றும், 4. பாவனை எவ்வகை ஆதரவால் தோன்றி எவ்வாதரவால் மறைகிறதென்றும், 5. அறிவு எவ்வகை சுகத்தால் தோன்றி எவ்வகை அசுகத்தால் மறைகிறதென்றும் உசாவுகின்றான்.

பஞ்சஸ்கந்த தோற்றமாகும் அறுவகை சம்பந்த விஷயமாகுங் கருமத் தொகுதியைப் பற்றியுங் கரும உற்பவங்களைப் பற்றியுஞ் சிந்திப்பான்.

அதாவது ஆயதன தம்மேயவென்னப்படும். விஷயசம்பந்த கருமத்தொகுதியைப் பற்றியுங் கரும உற்பவங்களைப் பற்றியுஞ் சிந்திப்பான்.

அதாவது ஆயதன தம்மேயவென்னப்படும். விஷயசம்பந்த கருமத்தொகுதிகளுக்கு ஆதாரம் அறுவகைப் பீடங்களாகும்.

1. சக்கு. 2. சோத. 3. மாஹன. 4. ஜீவ்ஹ. 5. காய. 6. மனோ . இதுவே 1. கண், 2. செவி, 3. மூக்கு, 4. வாய், 5. மெய், 6. மனம்.

இதிற்றோன்றும் அறுவகைக் கருமத்தொகுதிகளின் தோற்றங்கள் யாதெனில்

1. சப்த, 2. பரிச, 3. ரூப, 4. ரஸ, 5. கந்த, 6. மனோ கருமங்களாகும். இவ்வறுவகைக் கருமத்தொகுதியாம் விஷயசம்மந்தமாகும் உள்ளுணர்ச்சியின் தோற்றங்களை யாராய்வான்.

அதாவது, அவன் கதி ஈதென்றுங் கண்ட ரூபங்கள் இஃதென்றும் அதினின்றெழும் பற்றுக்கள் இவையென்றும் அப்பற்றுக்களின் எழுச்சி எவ்விதமாய் எழும்புகிறதென்றும் எவ்வகையால் மடிகிறதென்றும் எவ்விதத்தால் மேற்கொள்ளுகிற தென்றும் எவ்விதத்தால் அதினினின்று மீண்டு சதா விடுபட்டோமென்பதையும் அறிகின்றான்.

இவ்வகை விசாரிணையால் 1. கண்ணையும் பார்வையையும், 2. செவியையும் சப்தத்தையும், 3. மூக்கையுங் கந்தத்தையும், 4. வாயையும் உருசியையும், 5. மெய்யையும் உணர்ச்சியையும், 6. மனதையும் எண்ணங்களையும், அதனதன் கட்டுகளையும் ஒன்றைக்கொண்டு ஒன்று தாவியிருப்பதையும் அதனதன் பற்றுக்களையுந் தோற்றங்களையும் மறைவுகளையும் அழிவுகளையும் அவ்வகைத் தோற்றங்களுக்கும் பற்றுக்களுக்கும் இடங்கொடாது சதா விழிப்பில் நின்று விடும் பற்றற்ற நிலைகளை அறிகின்றான்.

அவ்வகைப் பற்றறுக்கும் ஆயுதங்களாகும் சத்த போஜங்கய தன்மேயவென்னு அறிவைத்துலக்கும் அந்தரங்க எழுவகையான மூலங்களை ஆராய்வான்.

அதாவது 1. சதிசம்போஜங்காய, 2. தம்மவிசய சம்போஜங்காய, 3. வீரியசம்போஜங்காய, 4. பிரீதிசம்போஜங்காய, 5. பஸ்ஸதத்தி சம்போஜங்காய, 5. சமாதி சம்போஜங்காய, 7. உபேய சம்போஜங்காய எனப்படும்.