பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 277

ஐயனே, உமது மெய்யறப் பாதை மாட்சிபெற்றது. உமதுமெய்ப்பொருள் விளக்கம் உலகம் அறியாதது. உமது மெய்யின்பப் பேறுதான் தானே உணர்வதென்னும் முயற்சியில் நிலைத்தது. இவ்வரும் பெருந்தானத்தை உலகோர்க்கீயும் ஈசனாம் புத்தரே எமதாசான். ஒழுங்கற்றிருக்கும் நீதிகளை ஒழுங்கடையச்செய்கின்றார். மறைந்திருக்கும் நீதிகளை வெளிப்படுத்துகின்றார். திசை தப்பி நடப்போருக்கு வழி காட்டுகின்றார். அஞ்ஞானிகளாங் குருடர்களுக்கு மெஞ்ஞானத்தின் விழியை அளிக்கின்றார். இருளிலிருக்கும் அறிவீனர்களுக்கு வெளிச்சமாம் அறிவின் விருத்தி செய்கின்றார். ஆதலின் புத்தரிடம் யான் அடைக்கலம். அவர் தெரியச்செய்த சத்தியதருமத்தில் யான் அடைக்கலம். அம் மெய்யறத்தை தெரிந்துய்த்த சத்திய சங்கத்தில் அடைக்கலம். அடைக்கலம் புகுந்தவென்னை இன்று முதல் யான் உலகிற் தோன்றும் வரையில் என்னை ஓர் சிஷியனாக ஏற்றுக்கொள்ள வேண்டு மென்றடிபணிந்தான்.

இல்லற வாழ்க்கையிலிருந்து புத்த சங்கத்துள் சேர்ந்தவர்களுள் முதலானவன் யட்சனின் பிதா ஒருவனேயாம்.

இங்ஙனம் புத்தசங்கஞ்சார்ந்து காஷாயம் பெற்றுக்கொண்ட வர்த்தகன் தன்னைப்போல் தன்மகனுங் காஷாயந்தரித்து முகமலர்ந்திருப்பதைக்கண்டு குதூகலித்து மைந்தனைநோக்கி குழந்தாய்! உனது தாய் உன்னைக்காணாது வருந்தி பிரலாபித்திருக்கின்றாள் நீ வீடுசென்று உன் தாயாருக்குத் தேறுதற் சொல்லுமென்றான்.

இதைக்கேட்டயட்சன் பகவனைப் பார்க்கவும் பகவன் வர்த்தகனை நோக்கி இப்போது தெளிந்த மனதுடனிருக்கும் யட்சன் மாதாவுடன் சென்று உலகப்பற்றை அடைந்து கலங்கிய மனத்தனாகுவானாயின் யாது செய்வீரென்றார்.

யட்சன்பிதா அதற்கு மாறுத்திரமாக மைந்தன் உம்மிடந் தங்கியிருத்தல் நலமெனக் கருதுவானாயின் தங்கியிருக்கட்டும். அவன் உலகப்பற்றை ஒழித்த புநிதனாகுவானென்றான்.

அக்கால் பகவன் ஒடுக்கத்தால் அமையுஞ் சுகத்தையும் விரிவாலுண்டாகுங் கேட்டையும் விளக்கி நீதியையும், நெறியையும், வாய்மெயையும் போதித்து அவ்விருவரையும் ஆற்றலடையச் செய்யுங்கால் அவர்கள் குதூகலித்து பகவனை வணங்கி மாதவனே! தாமும் யட்சனும் மனைக்குவந்து புசிப்பெடுத்துக்கொண்டு எனதில்லாளுக்கும் நல்லறத்தை நவிலவேண்டுமென்று விண்ணப்பித்தான்.

அவனன்பின் மிகுதியை உணர்ந்த குருநாதன் எழுந்து காஷாயத்தால் உடல் முழுவதும் மூடிக்கொண்டு பிச்சாபாத்திரங் கையிலேந்தி யட்சன் வீட்டிற்குச் சென்றார்.

இவர்கள் வரவை அறிந்த யட்சனுடைய தாயும் அவன் மனைவியும் எதிர்நோக்கிவந்து பகவனை வணங்கி ஆசனமளித்து உட்காரச்செய்து வர்த்தகன் உத்திரவின்படி அன்னமளித்து அவர் புசித்து தீர்ந்தவுடன் மற்றுமுள்ள யாவரும் புசித்து அருகனைச்சுற்றி வணக்கவழியில் உட்கார்ந்து ஐயனே! உமது அளவுபடா சத்தியதன்மத்தை எங்களுக்கும் அளிக்கலாகாதோ என்று விண்ணப்பித்தார்கள்.

அதைக்கேட்ட விமலன் யட்சன் மாதாவைநோக்கி அம்மா! உம்முடைய கணவனும், மைந்தனுங் காஷாயம் பெற்றுக்கொண்டதுபோல் நீங்களும் பெற்றுக்கொள்ள விருப்பங்கொண்டீர்களோ என்றார்.

ஆம் ஐயனே என்றடிபணிந்தார்கள்.

அவ்வகை அடிபணிந்தோர் உள்ளங்களை உணர்ந்த வள்ளல் அவர்களை நோக்கி அம்மே! உங்கள் கோறிக்கை ஈடேறும். ஆயினும் ஆண்மெய்யிற்கும், பெண்மெயிற்கும் உள்ள பேதாபேதங்களை முதலாவது விளக்குகின்றேன். அதாவது :-

ஆண்மெய் என்பது சகலரையும் ஆண்டு இரட்சிக்கும் புருஷனென்னப் படுவான். பெண்மெய் என்பது சகலராலும் இச்சிக்கக்கூடிய இஸ்திரீ