பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 285

இறைவனுங் கானகங்களைக் கடந்து கராடர் நாடடைந்து ஓர் மரத்தடியில் உட்கார்ந்து மக்களுக்கு தன்மோபதேசஞ் செய்ய ஆரம்பித்தார். மான் கன்றும் அவரருகில் உட்கார்ந்து கொண்டது. அவ்விடம் இரும்பூதிக்கொண்டிருந்தக் கன்னான் பகவனைநோக்கிப் பெரியோய்! சருவத்தையும் விட்டு வெளியேறியத் தாங்கள் இம்மான் கன்றை விடாதக் காரணம் என்னை என்றான்.

அதை வினவிய பகவன் கன்னானை நோக்கி மக்களுக்கு மிருகசீவர்கள் மீது அன்பில்லாவிடினும் மிருகசீவனாகிய இதற்கு மக்கள்மீது அன்பு பொருந்தி தொடர்ந்து நிற்கின்றதென்றார். கன்னான் பகவனை நோக்கி மிருகராசிகளிடத்தும் அன்புண்டோ என்றான். பகவன் கன்னானை நோக்கி சருவசீவர்களிடத்தும் அன்பில்லாமற்போமாயின் ஒவ்வோர் சீவராசிகளும் சீவிப்பதரிதென்று அறியாயோ என்றார்.

கருணாகரக் கடவுள் வாக்கையும் அவர் செயலையும் அறியாத கன்னான் ஊதுலையில் மழுகக் காய்ந்திருந்த இரும்பு குண்டை இறைவன் முன்னுருட்டி இதனினும் அன்புண்டோ என்று பரிகசித்தான்.

அருகக்கடவுளோ அவனறியாமெய்க் கிரங்கி அக்காய்ந் துருகு மழுவை தன் கரத்திலேந்தி கன்னானை நோக்கியபோது அத்தழலானது ததாகதர் கரத்திற்றாவாது மேனோக்கி வீசிற்று. அதைக் கண்ணுற்ற கன்னான் அச்சுவாலை மேனோக்கி வீசுவதையும் அதன் தான்டவத்தையும் உணர்ந்து திகைத்து நின்றான்.

வீரசோழியம்

பூதலத்தில் எவ்வுயிர்க்கும் பொதுவாய திருமேனி
மாதவநீ என்பதற்கு ஓர் மறுதலையாக் காட்டதோ
கழலடைந்த உலக்கணத்துக் காயுலைவா உருமழுவா
மழலெழுந்த கரத்தொடு மற்றன்றருளை ஏற்றினையே.

திருமூலர் திரிமந்திரம்

உருகிய மழுவை உள்ளங்கையேந்தி / அருளொடு வாய்மெய் ஆற்றலருளி
கருவில் அமைந்த காட்சி அமைப்பை / திருவையினுள்ள செயலிதென்றானே.

காசிக்கலம்பகம்

கண்ணிருக்குந் திருநுதலுங் கனலிருக்குந் திருகரமுங் கலந்தோருள்ளத்
துண்ணிருக்கு மின்னமுதும் பிறைமுடியும் உடைவாளும் அகற்றி கானில்
வெண்ணிறைந்த கணத்தோடு மனந்தவனத் திருப்பாரை எங்கே காண்பேன்
பண்ணிருந்த மறைபுகழ்முக் கண்ணனை அண்ணலர் அமரர் பரனைத் தானே.

இறைவனோ, தன்கரத்தேந்தியமழுவை எறிந்துவிடாது இன்னும் மேலேற்றி கன்னானை நோக்கி அன்பரே! உன்னிடத்துள்ள காமாக்கினியின் சுடுகையை உணராமலும், கோபாக்கினியின் சுடுகையை உணராமலும், பசியாக்கினியின் சுடுகையை உணராமலும் இம்மழுவன் சுடுகையை மட்டும் உணர்ந்து மகிழ்ச்சி கொண்டதென்னோ என்றார்.

கன்னான் திகைத்து கருணாகரன் அடியில் வீழ்ந்து ஐயனே, காமாக்கினி, பசியாக்கினி இவைகளின் சுடுகைகளை அறியாது இவ்வுலையிற் காய்ந்த மழுவின் சுடுகையை மட்டும் அறிந்தவனாதலின் தங்கள் தண்மெய் நோக்கின்றி தரிதலையானேன் பிழை பொருத்து புண்ணியபலனைப் பகரல் வேண்டும் என்றான்.

கருணாகரர் கன்னானை நோக்கி அன்பரே! உலையில் காய்ந்த மழூவு உம்மெச்சுடுமென்றறிந்த நீவிர்மற்றவரை சுட்டு உபத்திரவம் அடையட்டுமென்று எண்ணலாமோ என்றார். கன்னான் கமலநாயகனை வணங்கி - ஐயனே! இம்மழுவைத் தமது கரத்தில் எடுக்கமாட்டீரென்று உரைத்தேனன்றி உம்மெய் உபத்திரவத்தில் ஆழ்த்தக் கருதினேனில்லை. ஆதலின் எனதுன்மத்தச்செயலை க்ஷமித்து ரட்சிப்பதுடன் எனக்குள் உள்ள அக்கினியை விவரிக்க வேண்டும் என்று வருந்தினான்.

பகவன் கன்னானை நோக்கி அன்பரே! உமக்குள்ளெழும் பசியாக்கினியின் வெப்பத்தை அறிந்திருப்பீர். அவ்வெப்பத்தைத் தணிக்கும் புசிப்பை உட்கொண்டவுடன் தணிந்து ஆயாசம் நீங்கும். அன்னம் புசிப்பின்றி இருப்பீராயின்