பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/30

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அந்தசாக்கைய வகுப்பார்கள் அரசர், வணிகர், வேளாளரென்ற மூன்று தொழிலாளர்களுக்கும் கருமத் தலைவர்களாயிருந்ததும் அல்லாமல், சக்கிரவர்த்திகளாகவும் இருந்தார்கள்.

வள்ளுவர் சாக்கையரெனும் பெயர் - மன்னர்க்குள் படுகருமத்தலைவர்க் கொக்குமென்று - திவாகரத்திலும் - வருநிமித்தகன் பேர்சாக்கை வள்ளுவ னென்றுமாகும் - என்று நிகண்டிலும்.

கூறியிருப்பதற்கு ஆதரவாக, நமது ஒப்பிலா அப்பன் புத்தரவர்கள் சாத்கைய குலசக்கிரவர்த்தி வம்மிச வரிசையில் பிறந்து சாக்கைய முநி என்னும் ஓர் பெயரையும் பெற்று சாக்கையருக்கு குலகுருவாகவும் விளங்கியிருந்தார். சாக்கையர் ஆளுந்தலைத்தார் வெந்தனாக்கையுற்று தித்தனனாங்கவன் றானென - லென்று - மணிமேகலையிலும் - விரவு சாக்கையனேசை நன் விநாயகன் சினந்தவிர்ந்தோனென்று நிகண்டிலும், சாக்கையர் குருவின் மாயன் ஆங்கவர் புறத்தில் சாந்து - என்று கூர்ம புராணத்திலும், மற்றுமுள்ள புத்தர் சரித்திரங்களிலுங் காண்க.

பூர்வ புத்தக் கியானிகளாகவும் புத்தருடைய குடும்பத்தோர்களாகவும் விளங்கிய சாக்கையர், வள்ளுவரென்பவர்களை, பறையரென்றும் ஈனரென்றும் வழங்கி வருகிறார்கள்.

சபைதனிலுள்ளவர்கள் சாக்கையனெனை, சாதியிலீனனெனசாற்றுகிறீர் உபையோகமில்லாமலும் அங்க சுத்தி உடலறியா செபங்களோதுகிறீர்
வபைய மதாகிய நூல் வீண்பிலுக்கு வாசியறியாமலும் மயங்குகிறீர்
அவையார் குலத்தில் வந்த வள்ளுவனெனும் ஆதி பீடமும் நாண்காணும்

என்று ஞானவெட்டியிலும்.

வேதமொழியர் வெண்ணீற்றர் செம்மேனியர்
நாதப்பறையினர் - என்னே - என்னும்
நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கு

நாதரின்னாதனா ரன்னே என்னும் - நான்முகனென்பது புத்தருடைய பெயர் என்று திருவாசகத்திலும்,

அறுவகை சமயத்தறையு மெய்ப்பொருளு மறுபத்து நாலு நற்கலையுல்
மறுவறப்பயின்று மாசறத்திகழும் மதிஞராமவர்களே எனினுங்
குறைவறத் தன்னைக் கொடுத்திடுங் குரவன் குரைகழல் புனைந்தவரன்றேல்
பறையர் மற்றவரை பறையரே எனினு மருள் உடையவர் பரம்பரரே.

என்று அவிரோத உந்தியாரிலும் - மற்றுமுள்ள ஞான நூற்களிலுங் காண்க.

புருசீகர்களென்று கூறியிருப்பது யாவரென்றால் சிலகாலங்களுக்குமுன் அக்கினியை தெய்வமாகத் தொழும்படியான ஓர் சாதியார் சண்டையில் முறியடிப்பட்டு இவ்விடம் வந்து குடியேறி யாசக சீவனத்தால் சிலகாலம் பிழைத்து இத்தேசத்தோரின் நடையுடை பாவனைகளையும் ஒழுக்கங்களையும் உணர்ந்து குடிகளும் அரசர்களும் மடாதிபதிகளுக்கு பயந்து நடந்து வருவதை நாளுக்கு நாள் பார்த்து சிற்றரசர்களையும் பெருங் குடிகளையும் தங்கள் மாய்கையால் வசப்படுத்திக் கொண்டு மடாதிபதிகளைப் போல் பூனூலணிந்து தங்களை அந்தணர்களென்று சொல்லிக் கொண்டு சிற்றரசர்களில் ஒருவர் இறந்துபோனால் அவர்கள் பெயரால் ஒவ்வோர் ஆலயங்களை கட்டிவிட்டு அவர்களுடைய சொத்துக்களையும் பூமிகளையும் அதற்கு ஆதரவாக வைத்துக்கொண்டு அந்த சீவனத்தினால் தங்கள் பெண்சாதி பிள்ளைகளுடன் சுகமாக வாழ்வதற்கு அவர்களால் உண்டு செய்துக்கொண்ட சுவாமிகளுக்கு இரண்டு பெண்சாதி, மூன்று பெண்சாதிகள் உண்டென்னும் கதைகளை ஏற்படுத்திவிட்டு இத்தேசத்தில் அவரவர் தொழில்களுக்கென்று ஏற்படுத்தியிருந்த பெயர்களை,

கீழ்ச்சாதி மேற்சாதி என்று மாறுபடுத்திவிட்டு அதில் தங்களை எல்லோருக்கும் மேலான பிராமண சாதி என வகுத்துக் கொண்டு புத்தமதக் கியானிகளை எல்லோருக்குந் தாழ்ந்தசாதி பறையர்களென்று இழிவு கூறி வந்தார்கள்.

இவ்வகையாக புருசீகர்களென்று வகுக்கப்பட்டிருக்கும் இதன் விவரங்களை அஷ்வகோசர் போதித்துள்ள "நாராதிய புராண சங்கைத் தெளி"வென்னும் சரித்திரத்தில் தெரிந்துக்கொள்ளலாம்.