பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இத்தகைய ஜடாபாரத்தில் தோன்றிய கங்கை என்னும் மகத்துவத்தைக்கொண்டு சகலதேசத்தோர்களும் அவற்றை தரிசிப்பதுடன் தன்ம சங்கத்தோர்களும் பூரணச்சந்திர நாள்நோக்கி அவ்விடம் சென்று தங்கள் தவத்தையும் முடிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

ஆதிநாள் அறக்கதிர் விளக்கிய ஒப்பிலா அப்பன் அருமொழியை அநுசரித்தே பின் அறிவுரைச் சந்ததியாரும் திரிமந்திராலோசனை விளக்கி இருக்கின்றார்கள்.

சிலப்பதிகாரம்

தெய்வந் தெளிமின் றெளிந்தோர் பேணுமின்
பொய்யுரை யஞ்சுமின் புறஞ்சொற் கூறன் மின்
ஊனூன் அகற்றுமின் உயிர்கொலை யஞ்சு மின்
தானஞ் செய்மின் றவம்பல தாங்குமின்
செய்நன்றி மறவன்மின் றீனட் பிகழ்மின்
பொய்க்கரி போகன் மின் பொருண்மொரு நீங்கன்மின்
அறவோ ரவைக்கள மகலா தணுகுமின்
பிறவோ ரவைக்களம் பிழைத்துப் பெயர்மின்
பிறர் மனை யஞ்சுமின் பிழையுயி ரகலு மின்
அறமனை காமி பொல்லவை கடி மின்
கள்ளுங் களவுங் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியம் விரகினி லொழிமின்
இளமெயுஞ் செல்வமும் யாக்கையு நிலையா
வுள்ள நாள் வரையீ தொல்ல லொழியாது
செல்லுந் தே அத்துக் குறுதுணை தேடு மின்
மல்லன்மா ஞாலத்து வாழ்வீ ரீங்கென.

மலைமீதேறி போதித்த தன்மபாத அன்பின் மிகுதியும், அளவு படா நீதியும், ஆற்றலளிக்கு நெறியும், கல்லுறுகப் பதிந்தக் கமலபாதத்தால் விளங்கியது மன்றி அவர் கருணைமிகுதியால் பொழிந்த சடாபார நீரின் பெருக்குமே கங்கை நதிக்கு ஆதாரமானதும், நீரருவிக்குத் திறந்தவழியே அறித்துவாரம் என்னும் பெயர்பெற்றதுமாகிய நித்தியதன்மத்தை நிலைக்கச்செய்து மலையின் சிகரத்திற்கும் அடிவாரத்திற்கும் மத்தியில் பொதியை வியாரம் நிருமித்து அகஸ்தியரைப் பிரதம குருவாக வகித்து மெய்யறத்தை வளர்க்கச்செய்தார்.

பாலி பாஷையில் பொதியை என்பது மலையைத் துளைத்து போதிய அறைகள் நிருமிப்பதேயாம்.

மலையினின்றிழியும் சலதாரையாம் அறித்துவாரம் ஏற்பட்டதும் அழியா கங்கை நதி உண்டாயதும் கற்பாறையில் கமலபாதம் பதிந்ததுமாகிய அறச்செயல்கள் தேசமெங்கும் பரவி பகவன் தந்தையாகிய சுத்தோதயன் அல்லது மண்முகவாகென்னுஞ் சக்கிரவர்த்திக்கு எட்டியவுடன் முத்திரைமோதிரம் ஈய்ந்து வேவுகர்களை விடுத்து மைந்தனை அழைத்துவரும்படி ஆவல்கொண்டான்.

சக்கிரவர்த்தி வார்த்தையை சிரமேற்கொண்ட வேவுகர்கள் பல நாடு நகரங்களையும் நதிகளையுங் கடந்து பொதியசாரலை அடைந்து கங்காதரனை அணுகி கமலபாதத்தை வணங்கி ஐயனே! நமது சக்கிரவர்த்தியார் தம்மெய்க் காணவேண்டும் என்னும் அவாவின் மிகுதியால் எங்களை அனுப்பியிருக்கின்றார் தாம் வந்து தந்தைக்குத் தரிசனந்தரவேண்டும் என்று வேண்டி நின்றார்கள்.

அவற்றை வினவிய கோபாலன் ஆனந்தமுற்று நமது சக்கிரவர்த்தியார் எம்மெய்க் காணவேண்டிய ஆவலிலிருக்கின்றபடியால் ததாகதன் தடையின்றி வருவேன் என்று எழுந்து பிச்சாபாத்திரத்தைக் கையில் ஏந்தி வேவுகர்களைப் பின்தொடர்ந்தார்.

வேவுகர்கள் சக்கிரவர்த்தித் திருமகன் யாதொரு வாகனமுமின்றி கால்நடையில் வருவதைக்கண்டு கண்கலங்கி கமலாசனனே, கருணாகரனே கங்கை ஆதாரனே உமது கமல பாதம் புழுதியில் நடக்கவும் அதனை யாங்களை காணவும் என்ன கன்மஞ் செய்தோமோ என்று கலங்கினார்கள்.

கங்கை ஆதாரன் வேவுகர்களை நோக்கி அன்பர்களே! கலங்காதீர்கள். ஒருகால் ஓடத்தை வண்டி ஏற்றிக்கொண்டு செல்லுவதைக் கண்டிருக்கின்றீர்கள்.