பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 307

அங்ஙனமின்றி மனதின்கண் இராகத்துவேஷ மோகக் களங்கங்களாம் விஷம் கிஞ்சித்திருக்குமாயின் சாந்தம், ஈகை, அன்பென்னும் அமுதமும் விஷமாகிப்போம்.

அமுதத்தைப் பெருக்கி அருட்பெறவேண்டுமாயின் காம வெகுளி மயக்கங்களால் எழும் பாசபந்த பற்றுக்களை அறுத்து இதயத்தை சுத்தி செய்தல் வேண்டும். இதயசுத்தி உண்டாய் மனமணிப்பிரகாசிக்குமாயின் நித்திறையை ஜெயித்து இரவுபகலற்ற நிருவாணம் பெறுவாய். அக்கால் உம்மெக்காணும் சருவ விவேகிகளும் நான்கு தன்மபாதத்தால் நடக்கும் தருமதேவதை எனக் கொண்டாடுவார்கள். விவேக பெருக்கை நாடும் மேலோர் சத்தியதன்ம மார்க்கத்தை நான்கு தன்மபாதத்தால் நடந்து அவர்களும் பிறவி சமுத்திரத்தைக் கடப்பார்களென்று ஓதி அம்மன் அஞ்ஞான இருளை அகற்றிவிட்டு தனது சங்கத்தோருடன் கலந்து பிச்சாபாத்திரம் ஏந்தி அரசன் வட்டித்த அன்னத்தைப் புசித்து அங்கோர் சோலையில் தங்கினார்.

அசோதரையம்மை அண்ணல்பால் உபநயனமாம் ஞானவிழிப்பெற்றும் சக்கிரவர்த்தி மருமகளென்னும் மமதையும், சக்கிரவர்த்தித் திருமகன் மனைவி என்னுஞ் செருக்குந் தன்னைவிட்டகலாமல் இருந்தது கொண்டு நிதானித்து தனதேகமைந்தன் இராகுலனை உப்பரிகை மீதழைத்துப் போய் சன்னலின் வழியாய் பகவன் வீற்றிருக்குஞ் சோலையைக் காண்பித்து அப்பா உனதரிய தந்தையாகிய நாரசிம்மம் அதோவீற்றிருக்கின்றது பார். நீ அவரிடஞ்சென்று அவர் சேகரித்து வைத்திருக்கும் அழியா நிதியில் உனக்கு சேரவேண்டிய பாகத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அனுப்பிவிட்டு தான் அணைந்துள்ள ஆடையுடன் பிச்சாபாத்திரங்கையிலேந்தி அரண்மனை வீதியில் சென்று அன்னமேற்றுப் புசித்து ஆனந்தசாதனத்திலிருந்தாள்.

சீவக சிந்தாமணி

அதேநிலைபெற்ற பிக்குணிகள் செயல்.

அம்பொற் கலத்துளடு பாலமர்ந் துண்ணு மரிவையந்தோ
வெம்பிப்பசி நலிய வெவ்வினையின் வேறாயோரகல் கையேந்தி
கொம்பிற்கொள வொசிந்து பிச்சை எனக் கூறி நிற்பாட் கண்டு
நம்பன் மின் செல்வ நமரங்கா ணல்லறமே நினைமின் கண்டீர்.

சோலையில் தங்கியிருந்த பகவன் அசோதரைத் தன்னைப்போல் அகம்பாவமற்று ஓடேந்தி வெளிவந்த சங்கதியை அறிந்தானந்தமுற்று அவ்விடத்துக் காட்டிற்கும் நாட்டிற்கும் மத்தியில் பெண்களாம் பிக்குணிகளுக்கென்று ஓர் வியாரமும், புருஷர்களாம் பிக்க்ஷக்களுக்கோர் வியாரமுங் கட்டும்படிச் செய்து சங்கத்தின் ஞானசாதகர்களுக்கு வேண்டிய உதவி புரியத்தக்க ஏதுக்களையுஞ் செய்து வைத்தார்.

மாதுரு வாக்ஞையின்படி இராகுலன் தனது பிதுருவாகிய ஓடேந்தும் பிஞ்சகனிடஞ்சென்று அவர் கரத்தை இருகப் பற்றிக்கொண்டு நாயனே! நீவிர் எமக்கு சேரவேண்டிய பாகத்தை அருளல்வேண்டும் என்றான்.

சங்கங்களுக்கு அறத்தை நிறப்புஞ் சங்கறன் தனது கரத்தை விடாமல் பற்றியுள்ள சிறுவனின் அதி தீவர பக்குவத்தை உணர்ந்து இவன் நம்மெ விடாகண்டனென்றறிந்து சிரரோமங் கழித்து மரவுரியாம் மஞ்சளாடை ஈய்ந்து வற்றாத ஓடு கரத்தளித்து தனது சங்கத்தில் சேர்த்து கண்டுபடிக்குஞ் கல்வியாம் கலை நூல் விருத்தியில் விடுத்தார்.

அசோதரை யம்மனோ இராகத்துவேஷ மோகங்களால் எழும் உள்ளக் களங்கங்கள் யாவையும் பற்றறுத்து புறவிழி பார்வைபோக்கி உள்விழி பார்வையை நோக்கி தூங்காமற்றூங்கி இந்திரியத்தை வென்று நிருவாணநிலை பெற்றாள்.

"இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோ டாரம்ப
முந்தி துறந்தான் முநி."

என்பதாம் ஐயிந்திரியங்களை வென்ற வல்லபஞ்கொண்டு சித்தார்த்தரை ஐந்திரர், இந்திரரென்று வழங்கிவந்தது போல் அவர் மனைவி