பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அசோதரையம்மனும் ஐயிந்திரியங்களை அடக்கிய வல்லபங்கண்டு இந்திரர் அணி இந்திராணி என்று அழைக்கலானார்கள்.

சித்தார்த்தரது சித்திரகூடத்தில் அசோதரையாம் இந்திராணிக்குத் தோழிப்பெண்களாயிருந்த அரம்பை, ஊர்வசி, மேனகை, திலோர்தமை என்னும் நால்வருள் அரம்பையும், ஊர்வசியும் இல்லற தன்மத்தை நாடி புத்திரசந்தானவிருத்தியில் ஆழ்ந்துவிட்டார்கள். மேனகையும், திலோர்தமையும் துறவற தன்மத்தை நாடி பிக்குணிகள் சங்கத்திற் சேர்ந்து இந்திராணிக்கு அங்குந் தோழிகளாய் ஆனந்த சாதனத்தில் இருந்துவிட்டார்கள்.

அருங்கலைச்செப்பு

இந்திரர்க்கரணியா ஏற்ற அசோதரையாள்
சிந்தைத் தெளிந்தாள் சிவம்
முந்தியார் தோழிகள் முநிந்தார் இருவர்
பிந்தியோர் இல்லறத்தானார்
மேனகையோடு முற்றத்திலோர்தமை, போனக வம்மையானார்
ஆயவரம்பையும் ஊர்வசியே இவர், தோயுமில் ஆழ்ந்தனர் பால்

நிகழ்காலத்திரங்கல்

தானடைந்த பேற்றை தந்தைக்கருளியலால்
மானனையாட் கீய்ந்த மோன அதிசயமே
மாமனையாளோடு மைந்தன் வழிசிறப்ப
கோமனையோர் யாவுங் குளிர்ந்த ததிசயமே
தலத்தோர் தார்வேந்தன் தலமும் விடுத்து தென்,
புலத்தாரோடோடு தரித்தது அதிசயமே.

ததாகதர் தனது தந்தைக்கே குருவாகத் தோன்றி ஞானோபதேசஞ் செய்ததுமன்றி மனைவி மைந்தனுக்கும் அருளூட்டி தங்களை விட்டுத் துறந்தனரே என்னுந் துக்கத்தை ஓட்டி சதானந்த நிலையில் நிறுத்திவிட்டார்.

இத்தகைய காலத்தில் ஓர்நாள் அவ்விடமுள்ள நூதன வியாரத்துள்ள சங்கத்தோருக்கு சற்குருநாதனானவர் சத்திய தன்மத்தை விளக்கி வருங்கால் மனைவி மைந்தர் இருவரும் அவ்விடம் வந்து நின்றார்கள்.

அவர்கள் அந்தர அங்கமறியா சங்கத்தோர்கள் குமாரதேவனுக்கும் குமரதேவிக்கும் இன்பமில்லாமல் போமோவென்று தங்களுக்குள் தாங்களே சிந்தித்துக்கொண்டார்கள்.

சங்கத்தோர் அந்தரங்க எண்ணத்தை இந்திராணி அறிந்துகொண்டு தகப்பன் மடியில் தனது பெண்குழந்தை சென்று உட்கார்ந்துகொள்ளுவதுபோல் யாதொரு மனக்களங்கமின்றி நெறுங்கி இந்திரராம் புத்தபிரான் துடைமீது உட்கார்ந்துகொண்டாள்.

சங்கத்தோர் அழுக்காறு எண்ணத்தையும் அவற்றை அகமுகத்தறிந்த அசோதரையானவள் தனது துடைமீதுவந்து உட்கார்ந்த களங்கமற்றச் செயலையுமுணர்ந்த நமதையன் குதூகலித்து உச்சமுருகி அம்மே! சுகமோ என்றார்.

அருங்கலைச்செப்பு

துணைவியாள் தன்னை துடைமீ திறுத்தி கணஞானமூட்டுங் கதிர்.
சங்கத்தோர் உள்ளச் சழக்கையறிந்தா ளெங்கடாய் வீற்றாள் மேற்கால்.

அவற்றை வினவியதாய் அருகனை நோக்கி தாதா உமது கருணையால் ஞானவழித் திறந்தது முதல் துக்கமென்பது ஈதென்றும், சுகமென்பது ஈதென்றும் அடியாள் அறியேனே என்றாள்.

ததாகதர் சங்கத்தோரை நோக்கி அன்பர்களே! உங்கள் சங்கத்தாள் சுகதுக்கம் இரண்டும் அறியேனென்கிறாளே இஃது நியாயமோ என்றார்.

சங்கத்தோருள் தலைமெயான ஆனந்தனென்பவர் பகவனை நோக்கி ஜகத்திரட்சக! எமதம்மனின் அந்தர அங்கமாம் உண்மெய்ச்செயலும், பயிர அங்கமாம் புறமெய்ச்செயலும் யாங்களறியோம். எங்கள் பேதை எண்ணத்தால் குமரக்கடவுளுக்கும், குமாரதேவிக்கும் இன்பமில்லாமல் போகுமாவென்று எண்ணினோம். அவ்வெண்ணத்தை அறிந்துக்கொண்ட எமது தாய் அவ்வின்பமற்றவளென்பதை ரூபிக்க தந்தை மடியில் மகள் வந்து