பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

310 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அன்பர்களே! இதோ வெழுந்தருளிய பகவன்,

“எல்லா முணர்ந்தவர், எண்குண மமைந்தவர்
அருளாழி பயந்தவர், அறவாழி யளித்தவர்
மருளாழி துறந்தவர், மறையாழி புரிந்தவர்
மாதவருள் மாதவர், வானவரில் வானவர்
போதனரிற் போதனர், புண்ணியரில் புண்ணியர்
ஆதியு மிவவே, அமலனு மிவரே.
நீதியு மிவரே, நிறந்தர ரிவரே
சோதியு மிவரே, துல்லிய ரிவரே
இறைவனு மிவரே, துறைவனு மிவரே
கிருவுரு மிவரே, செல்வனு மிவரே
என வேற்றுங்கள் போற்றுங்கள்
என்றென்றும் வாழ்த்துங்கள்.”

என்று சொல்லிக்கொண்டே அரண்மனைக்குச்சென்று ஐயனுக்கு ஆசனமளித்து மனையோரை வணங்கச்செய்து புசிப்பளித்து பகவன் புசித்தபின் அவரருகில் உட்கார்ந்த விம்பாசாரன் போதிநாதனை வணங்கி ஐயனே துறவிகளாகும் சங்கத்தோர் வசிக்கத்தக்கதும், சுத்தமானதும், பகவன் சிலநாள் தங்கியிருக்கக்கூடியதும், பகலில் ஜனசஞ்சாரம் அதிகமில்லாததும், கூச்சலற்றதும், மிக்க வமைதிபெற்றதும்;

பகவனை தெரிசனஞ்செய்ய வருத்துப்போக்கா இருப்பவர்களுக்கு வழி சுகமானதும், நாட்டிற்கும், நகரத்திற்கும் மத்தியிலுள்ள துமாகிய வேணுவன மென்னும் மூங்கில் தோப்பை வியாரத்திற்கு அளிக்கின்றேன் தேவர் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வணங்கினான்.

அரசன் திரிகரண சுத்தியால் அளிக்குந் தானத்தை அருகனேற்று அவ்விடத்தில் வேணுவனவியாரமென்னும் ஓர் மடம் கட்டுவித்து சங்கத்தோருக்கு அளிக்கச்செய்து தானும் அம்மூங்கிற் தோப்பிற் சிலகாலந் தங்கியிருந்தார். அதனை வேணுவன வியாரமென் றழைக்கலானார்கள்.

பரத்துவாசனென்னும் பெரியோன் ஒருவர் மகதபிரான் வேணுவன வியாரத்தில் தங்கியுள்ளாரென்று கேழ்வியுற்று அவ்விடஞ்சென்று அருகனை வணங்கி துலவில் உட்கார்ந்துகொண்டு நமக்குத் தோன்றியுள்ள வியாதியின்னதென்றும், அஃது நீங்கும்வழி ஈதென்றும் ஏதோர் தன்மங் கூறுவரோ கூறாரோவென்று எண்ணிக்கொண்டிருந்தார்.

12.பரத்துவாசருக்குப் பிணிக்குத்தக்க ஓடதிகள்
போதித்த காதை

பிணியாளன் எண்ணத்தை ஞானக்கண்ணினால் அறிந்த ஆரூடர் பரத்துவாசரை நோக்கி அன்பனே, நீவிர் அதிதுன்ப வியாதியின் அனுபாதையால் அனந்தநாள் அவத்தைப்படுகின்றீர்போலும் என்றார்.

அருகன் அருள்மொழியைக் கேட்ட பரத்துவாசர் திடுக்கிட்டு ஐயிந்திரியங்களை வென்று அந்தரங்கமுணர்ந்த இந்திரரே எனதுள்ளத்தில் எண்ணிய எண்ணங்களை உமது களங்கமற்ற உள்ளக்கண்ணாடியில் கண்டு கொண்ட செவ்வியக் கண்ணனே, சிறந்த செல்வனே எனக்குற்ற வியாதியை எவ்வகையால் தெரிந்து கொண்டீரோ அதன் நிவர்த்தியும் உமக்குத் தெரிந்தேயிருக்கும். தேவரீர் அதன் உற்பவத்தையும், மடிவையும் விளக்கி ஆட்கொள்ள வேண்டுமென்று வணங்கினான்.

பகவன் பரத்துவாசரை நோக்கி அன்பனே! உமக்குள் எழும் ரசோகுண, தமோகுண, சத்துவகுணமென்னு முக்குணத்திரய காம, வெகுளி, மயக்கங்களைக் காரணமாகக் கொண்டேழூஉம் முக் குற்றங்களே வாத, பித்த, சிலேத்தும் மென்னுங் மூவியாதி பீடமாகி வாதத்தால் ஆயிரத்தியைந்நூறுவகைத் தோற்றங் களும், பித்தத்தால் ஆயிரத்தி ஐந்நூற்றி நார்ப்பது வகைத் தோற்றங்களும், சிலேத்துமத்தால் ஆயிரத்தி நானூற்றி எட்டுவகைத் தோற்றங்களையும் உண்டு செய்து மக்களை மாளா துக்கத்திற்கு ஆளாக்கி மடித்து வருகின்றது.

இத்தியாதி வியாதிகளின் தோற்றத்திற்கும், உபாதைக்கும் மக்கள் அவாக்களே காரணமாகும். அவற்றுள் காம அவாபெருக்கம், வெகுளி பெருக்கம், மயக்க