பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 313

செயல்களென்னுங் கருமங்களே ஒரு காலத்தில் மண்ணாகவும், மரங்களாகவும், புழுக்களாகவும், விலங்குகளாகவும், மட்சம், பட்சிகளாகவுந் தோன்றுகின்றன. அந்த கர்ம்மங்களென்னும் செயல்களே அநேக நற்செயல் தோற்றங்களுருண்டு முடிவில் புத்தராகின்றன. ஆதலின் சீவர்களின் செய்கைகளையே கருமமென்று கூறப்படும். அக்கருமங்களின் பயனே சீவர்களாகின்றார்கள். முன் ஜெநநத்தின் கருமங்களே சீவர்களாக இருப்பதால் நமது கருமத்தின் பயனே இந்த ஜெநநத்தில் சீவர்களாகத் தோன்றியுள்ளோம்.

அநேக ஜெநநங்கள் தோருந் தோன்றிய சீவர்கள் மனித உருவத்தைப்பெற்று பகுத்தறிதலாகிய விவேகத்தை அடைந்து வருகின்றார்கள்.

இத்தகையப் பகுத்தறிவைப்பெற்ற அரிய மானிட ஜெநநத்திற்கு துக்க நிவர்த்தியாகிய ஞானத்தைப் பெற அநேக ஜெநநங்கள் தோரும் நற்கருமங்களை புரிந்திருக்கவேண்டியதாதலின் சத்கருமங்களே துக்கநிவர்த்திக்குக் காரணமாகும்.

இந்த திவ்விய மானிடதேகத்தைப்பெற்ற ததாகதன் துக்க நிவர்த்திக்குக் கொண்டுபோகும் மார்க்கத்தை கண்டுதெளிந்தேன். நீங்களும் நம்மேறை சாந்தமும், சமாதானமும் அடையும்படியாக அந்த திவ்வியமார்க்கத்தைத் தெரிவித்தேன்.

தாகவிடாய்கொண்ட உங்களுக்கு அமுர்தமாகும் சத்தியமார்க்கத்தைக் கொடுத்தேன். அதை அருந்தினவன் கொலை, களவு, காமாதிகளினின்று நீங்கி சுகமடைவான். இராகத்துவேஷ மோகங்களாகிய வெள்ளத்தினின்று மீண்டு நிருவாணக்கரைச் சேர்ந்தவனுடைய துக்கமற்றச் செயலைக்காண்போர் யாவருந் திகைத்து நிற்பார்கள்.

அவ்வகை சத்தியமார்க்க அமுதை அருந்தினவன் உலகில் வாழ்ந்தும் நீரிலிருக்குந் தாமரைபோல் பற்றற்று வாழ்வான்.

சத்தியமார்க்கத்தில் நடப்பவன் உலகத்தோருடன் ஒக்கவாழினும் ஆசாபாசங்களில் பற்றற்றிருப்பான்.

தன்னுயிரைப்பார்க்கினும் தன் யேகபுத்திரன் உயிரைக்காக்குந் தாயைப்போல் மன்னுயிர்களின்பேரில் தன் அளவுபடா அன்பை செலுத்துவான்.

ஆதலின் ஒவ்வொரு மனுமகனும் நிற்கும் போதும், உலாவும்போதும், நித்திறைக்குப் போகும் போதும், விழிக்கும்போதும், மரணகாலத்தும் அன்பின்மயமாய் இருக்கக்கடவன்.

இந்த மெய்மொழிகளை உணராதவன் பகுத்தறிவற்றவனாவான். பகுத்தறிவில்லாதவன் அநேக ஜெநநங்களாய்ப் பிறந்திருந்து மாளா துக்கத்தில் ஆழ்வான். அறியாமெயாம் அந்தகாரத்தில் மூழ்குவான்.

பெரும்பொருள் விளக்கம்

இளையர் முதியரென விருபால்பற்றி
விளையும் அறிவென்ன வேண்டாம் - இளைஞனாய்த்
தன்றாதைகான நுகர்தற்குத் தன்கான
மொன்றாது நீத்தா னுளம்.

ஆனால் நாம் நமது பகுத்தறிவால் மெய்ம்மொழிகளைக் கண்டறிந்தோம். ஜெநநமரணத்தினின்று நீங்கினோம். நானென்னும் அகங்காரத்தை நசித்தோம். உண்மெய் அறிந்தோம். இதுதான் சத்தியதன்ம பலன், இதுதான் சத்தியமுத்தி, இதுதான் சத்தியலோகம், இதுதான் சத்தியவாழ்க்கை என்று முடித்தார்.

அருங்கலைச்செப்பு - தன்மந்திரியார்பத்து

பரத்துவாசன்றன் மந்திரியாய் நின்றான், திரத்த சுஞ்ஞானமுநி
உரபிடகமோதி உலகநாதன் பால், சரகமுந்தான் கற்றநேர்
கற்றமருந்துங் கனவொழுக்கமுற்றுப், பற்றுங் குடிக்களித்தான் பார்
வியாரங்கள் பக்கும் வியாதித்தருக்கும், நியாயங்கள் ஈய்ந்தா நெறி
முன்னறன்பாற் கண்ட மொழியை விளித்தான், பின்னறன் கைகண்ட நேர்
மனச்சுத்தமுற்ற மக்கட் கணுகா, கனப்பித்த நோயின் குணம்
உள்ளக் களங்க முட்டங்கி நிற்றல், விள்ளத் தொடரும் வினை