பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/325

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 315

கொண்டேன், எனக்கு உதவி புரியீரா, என் கவலையை ஒழிக்கமாட்டீரா, என்மரண பயத்தை நீக்கமாட்டீரா, மரணத்திற்கு என் செய்வேன் என் செய்வேன் என அலறினான்.

அவற்றை வினவிய தன்மந்திரியார் அவனை அருகில் உட்காரவைத்து அப்பா மரணபயத்தோனே! பிறர்மேற் பரிதாபமுடையோனுக்கு உதவி உண்டு. தன்மேல் அவாவுடையவனுக்கு உதவிகிடையாது. பிறர் துக்கத்தைப்பார்த்து சகியாதவனுக்கு உதவியுண்டு. தன் துக்கத்தைப்பார்த்து சகியாதவனுக்கு உதவி கிடையாது.

கஷ்டகாலமே மக்கள் உள்ளத்தை சோதிக்கும், கஷ்டகாலமே மக்களை தன்மவழியிலும் நீதிமார்க்கத்திலும் செல்லவைக்கும்.

இக்காலத்தில் மக்கள் படும் துக்கக் காட்சியைக் கண்ணில் கண்டும் உமது பேராசை ஒழியவில்லையல்லவா. தானென்னும் அகம்பாவம் நீங்க வில்லையா, உமது தாய் தங்கையர் பந்துமித்திரர்கள் படுந் துக்கக்காட்சிகளைக் கண்டிருந்தும் உனது அற்பசுகம் ஒழியவில்லை அல்லவா. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள துக்கங்களை நீக்குவதற்கு உதவி புரியாது உம்முடைய துக்கத்தை நீக்கிக்கொள்ள முயல்வதால் யாவர் உம்மை ஆதரிப்பார்கள்.

நீர் மற்றவர்களுக்குச் செய்த உபகாரத்தினாலேயே கார்க்கப்பட வேண்டியவராயிருக்கின்றீர். உமது அபகாரம் உம்மெய்க்கார்க்காது.

உட்கார்ந்திருந்தவனைப் பிணமாக நான்குபெயர் தூக்கிச்செல்லு வதையும், படுத்திருந்தவனைப் பிணமாக நான்குபெயர் தூக்கிச்செல்லுவதையும், நடந்திருந்தவனை பிணமாக நான்கு பெயர் தூக்கிச்செல்லுவதையும் கண்டிருந்தும் நீர் கொண்டிருக்கும் அவாக்கள் உம்மெய் விட்டு நீங்கவில்லை அல்லவா.

உன் மனை மாளிகைகளைப் பெருக்கிக்கொண்டதுபோல் உமது ஆயுளைப் பெருக்கிக்கொண்டீரோ. உமது செல்வங்களைப் பெருக்கிக் கொண்டதுபோல் நீடிய வாழ்க்கையைப் பெருக்கிக்கொண்டீரா.

உமக்குள்ள அன்பை நீடிக்கச்செய்தும், உமக்குள்ள சாந்தத்தை நீடிக்கச்செய்தும், உமக்குள்ள ஈகையை நீடிக்கச்செய்தும் இருப்பீராயின் உமக்குற்ற தீங்குகள் உம்மெய் அறியாமல் நீங்கும்.

அங்ஙனமின்றி மோகத்தைப் பெருக்கிக்கொண்டும், கோபத்தைப் பெருக்கிக்கொண்டும், உலோபத்தைப் பெருக்கிக்கொண்டும் உள்ள நீவிர் உமக்கு நேரிட்ட தீங்குகளை குறுக்க வேண்டுமென்று அலைவதினால் ஒருக்காலும் அத்தீங்குகள் அகலமாட்டாது.

துஷ்டனோடே துஷ்டனும், சுராபானப் பிரியனோடே சுராபானப் பிரியனும், வேசிக்கள்ளர்களுடன் வேசிக்கள்ளர்களும் சேர்ந்துக்கொண்டு தங்கள் தங்கள் கூட்டுரவைப் பெருக்கிக்கொள்ளுவதுபோல் இராகத்துவேஷ மோகங்களைப் பெருக்கிக்கொண்டுள்ளவன் மேலும் மேலும் அக்கூட்டுரவைச் சேர்த்துக்கொண்டு தினேதினே துக்கத்தில் ஆழ்ந்திருப்பான்.

அத்துக்கங்களை அகற்றுவதற்கு ஒருவராலும் முடியாது. அந்த துக்கங்களை அகற்றிக்கொள்ள வேண்டியவன் முன்பு தனக்குள்ள கோபமோக லோபங்களை அகற்றிக்கொண்டே வந்திருப்பானாயின் தனக்குத் தெரிந்துந் தெரியாமலும் நேரிட்ட துக்கம் தெரிந்துந் தெரியாமலும் அகன்றுபோம்.

ததாகதர் உமக்கருளிய திவ்யபோதகத்தின்படி ஒவ்வொரு மனிதனின் தோற்றமும், ஒடுக்கமும், ஏதுவும், நிகழ்ச்சியும், சுகமும், துக்கமும், செல்வமும், தாரித்திரமும், நீடியவாயுளும், குறுகிய ஆயுளும், அவனவன் கருமத்திற்கு ஈடாய் தேருருளைபோற் சுழன்றுவரும். அவர்கள் கன்மத்துக்கீடாய் ஓர் குடும்பமும் சுழன்று வருகின்றது. ஓர் கிராமவாசிகளும் சுழன்று வருகின்றார்கள். ஓர் தேசவாசிகளும் சுழன்று வருகின்றார்கள் நான்கு பூதகன்மங்களின் செயலால் தேசங்களும் மாறுதல் அடைகின்றவாதலின் நீர் உமது துக்கத்தை அகற்றவேண்டுமென்று கோறுவது வீண்கோறிக்கையேயாகும்.