பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/327

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 317

பகலற்றவிடமெங்குளது அதனைச் சேரவேண்டிய வழி எவை அவற்றை விளக்கி ஆட்கொள்ளவேண்டு மென்றடிபணிந்தான்.

மச்சமுனி எண்ணூறு

செய்வதற்கு செப்புகிறேன் கருவைக்கேளு
ஜெகந்தழைக்க உண்டான செடி பூண்டெல்லாங் கொய்வதற்கு
வேளைகண்டு - பிடுங்கிவந்து, குருவருளால் மந்திரத்தால் கொடுத்துப்பாரு
நெய்வதற்கு ஓடமிட்ட வயணம்போலே
நெறி நின்றால் சகலசித்தும் நிலைக்கும்பாரு
உய்வதற்கு வழிபாரு பொய் பேசாதே
ஒருநாளுங் குருமொழியை மறந்திடாதே
மறந்திடா மறைகுலத்தில் உபயத்தந்திரம்
மச்சனென போதற்கு முன் புயாகும்
பிறந்திருந்த வென்தேசம் மச்சதேசம்
பிரமனுக்கு தொண்டு செய்து பிறகு தானும்
அறந்தழைக்க ஓதிவைத்தார் வித்தை எல்லாம்
அவருடைய புண்ணியத்தால் வரையிலேறி
நிறைந்த சித்தா ஆச்சிர மந் தன்னில் சேர்ந்து
நிட்டையிலேயிருந்துருகு நிலைகண்டேனே.

அவலோகிதர் அவனது விசாரிணைக்கு அன்புகூர்ந்து. மச்சனே! நீவிருலகத்தோடு உருண்டு வருகின்றீர். அதாவது உலகம் சனியால் இருளும் போது தாமும் இருண்டு நித்தியால் மூடிக்கொள்ளுகின்றீர். உலகம் பகலவனாம் சூரியனால் பிரகாசிக்கும்போது தாமும் நித்திறையை நீக்கி விழிக்கின்றீர்.

இத்தகைய இறப்பும் பிறப்புமாகும் விழிப்பும் நித்திறையும் பெருகி பெருநித்திறை அடைந்துவிடுவீராயின் மாறா பிறப்பிறப்பிற்கு ஆளாகி மங்கா துக்கத்தை அனுபவிப்பீர்.

ஆதலின் உம்மெய்க்கு அப்புறப்பட்ட வஸ்து ஏதோவொன்றிருக்கின்ற தென்றும், உம்மாற் காணாதவஸ்து ஒன்றிருக்கின்றதென்றும், உள்ளங்கலங்காது உம்மெய்யாம் நிலம், நீர், தீ, காற்றலாய உருவமும் உணர்ச்சி எண்ணமென்னும் நாமமுமாகிய இரண்டுமே உம்மெய்யாட்டுவதும் ஓட்டுவதும், கார்ப்பதும், தூர்ப்பதும், போஷிப்பதுமாய் இருக்கின்றபடியால் எண்ணத்தாலாயப் பேராசையின் கேடுகளையும், உணர்ச்சியினாலய இன்பத்தின் கேடுகளையும் நன்காராய்ந்து பார்ப்பீரானால் இம்மெய், மறுமெய் என்னுந் தோற்றங்களும், சுகம் துக்கமென்னும் நுகர்வுகளும், வேண்டுதல் வேண்டாமெனும் அவாக்களும், இரவு பகலென்னுங் காலங்களும் எளிதில் விளங்கும்.

அதாவது:- இருளவன் மறைக்குங்கால் நித்திறை சுகத்தை நாடுதலும், பகலவனுதிக்குங்கால் புசிப்பின் சுகத்தை நாடுதலுமாகியச் செயலினின்று விடுபட்டு சதாவிழிப்பாம் ஜாக்கிரதையினின்று உலக வாழ்க்கையின் சுகத்தால் உண்டாகுங் கேடுகள் யாவையும் கண்டறிந்து எண்ணும் பீடத்தில் தீங்கான எண்ணங்களைத் தங்கவிடாமல் அகற்றியும், சிற்றின்ப உணர்ச்சியில் சுகிக்காமல் அகன்றும் இரவு தோன்றியதென்னும் எண்ணமும், பகல்தோன்றியதென்னும் உணர்ச்சியும் அற்று நிற்பீராயின் இரவுபகலற்றவிடந்தோன்றும். உமது இதயமாகிய கண்ணாடியில் பதிந்திருந்த காமவெகுளி மயக்கங்களாகும் அழுக்குகள் யாவும் அகன்று இதய கண்ணாடி பளிங்குபோல் பிரகாசிக்கும். அப்பிரகாச நிலையில் பலதேசங்களுக்குள் தோற்றுவதன்றி பற்பல சீவராசிகளின் எண்ணங்களும் உமக்குள் விளங்கும்.

அன்று முதல் நன்றாய்த் தூங்கினேன், நன்றாய் விழித்தேனென்னும் - சுகசொற்களுமற்று தூக்கமில்லாது வாதை அடைந்தேன், விழிக்கக்கூடாத மயக்கத்தில் ஆழ்ந்தேனென்னுந் துக்கசொற்களுமற்று இரவுபகலென்னுங் காலனைச் செயித்துகொள்ளுவீர். மரணகால ஜெயமுண்டானபோது இறப்பு பிறப் பென்னும் இரண்டற்ற நிருவாணம் பெறுவீரென்று போதித்து அந்த மச்சநாட்டுள் வியாரமொன்று கட்டுவித்து மச்சமுநிவரையும் தன்மப் பிரியர்களாம் சமணமுநிவர்களையும் அவற்றுள் நிலைக்கச்செய்து அவரவர்கள் இதயங்களிலுள்ள சங்கைகள் யாவையும் நிவர்த்திச் செய்துக்கொண்டிருந்தார்.