பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320 / அயோத்திதாசர் சிந்தனைகள்

தனபதி சாகித நகரவாசியாகும் தனஞ்சய தனபதியிடம் வந்து சேர்ந்து தனது மருமகளை அழைத்துப்போகும்படி ஆரம்பித்தான்.

அக்கால் தனஞ்சய தனபதி தனது மகளை திவ்யாபரணங்களால் அலங்கரித்து தேர், ஒட்டகம், குதிரை, யானை முதலிய ஸ்ரீதனங்களளித்து தனது மகளை அருகிலழைத்து குழந்தாய்! உனது கணவன் வீட்டிற்குச் சென்றவுடன் நீ நடந்துகொள்ள வேண்டிய ஒழுக்கங்கள் சிலதுண்டு.

அவை யாதெனில்:- உன் மாமனார் வீட்டிலிருக்கும் வரையில் வீட்டின் நெருப்பு வெளியில் போகலாகாது, வெளி நெருப்பு வீட்டிற்கு வரலாகாது. கொடுப்பவனுக்குக் கொடு, கொடாதவனுக்குக் கொடாதே, கொடுத்தவனுக்குங் கொடாதவனுக்குங் கொடு, சுகத்துடன் உழ்க்காரு, சுகத்துடன் உண்ணு, சுகத்துடன் நித்திறை செய், அக்கினியைக் கவனி, வீட்டு தேவதைகளை விசுவாசி என்று பத்து தனமதிகளையும் அளித்தான்.

விசாகா இத்தியாதி சம்பத்துகளையும் பெற்றக்கொண்டு தனது மாமனார் மிகாரா தனபதியும் மற்றுமுள்ளோரும் புடைசூழ ஷ்ராவஸ்தி நகரத்தை நோக்கிச் சென்றார்கள்.

மிகாரா தனபதி தனது பின்னால் வருங் கூட்டங்களைக்கண்டு இவர்க ளெல்லோரும் யாரென்று வினவினான்.

"உமது மருமகளின் தோழிப்பெண்களும் ஏவலாளருமென்றார்கள்”.

அதனை வினவிய மிகாரா தனபதி மறுண்டு இத்தனை ஆட்களை வைத் துக்கொண்டு யாரால் போஷிக்கக்கூடும்? இவர்கள் யாவரையும் அடித்துத் துறத்தி விடுங்கோளென்று ஆக்கியாபித்தான்.

அவர்களுடைய வேவுகர்கள் துறத்துங்கால் விசாகா தடுத்தும் அதனைக் கவனியாது துறத்தியதால் ஓடியவர்கள் போக சிலர் பின்தொடர்ந்து வந்தார்கள்.

விசாகா தனது மாமனார் இல்லஞ் சேர்ந்தவுடன் தனக்களித்திருந்த இஸ்திரீதனங்கள் யாவற்றையும் பங்கிட்டு தனது சுற்றத்தாருக்கு வந்தனத்துடன் அநுப்பிவிட்டாள்.

காரணம் அந்த ஸ்திரீதனங்கள் யாவும் தனதேவலாளர் போஷிப்புக் கென்றே கொண்டுவந்ததாதலின் அவர்கள் யாவருந் துறத்தப்பட்டபோது இனி யாரைப் போஷிப்போமெனக் கருதி தனதில்லத்திற்கே திருப்பிவிட்டு தன்மாமனார் குணாகுணங்களைக் கேட்டப் பணிப்பெண்களுக்கு விஷயங்களை விளங்கப்போதித்தாள்.

அதாவது தோழிகளா! எனது மாமனார் தனத்தை சேகரிக்குந் தொழிலாளரே அன்றி அநுபவிக்குஞ் சுகவாளறன்றென்று விளங்குகின்றது.

எவ்வகையில் என்பீரேல், பூர்வபுண்ணியபலத்தால் தனவிருத்தியடைவது இயல்பாகும். அத்தகைய தனத்தால் தானும் சுகித்து தன்னை அடுத்தோரையுஞ் சுகிக்கச்செய்தல் தனாதிபதிகளின் இயல்பாம். அங்ஙனமின்றி குப்பையைக் கொல்லையில் சேர்ப்பதுபோல் செல்வத்தை இல்லத்தில் சேர்த்து வைப்பவர்களை தனபதிகளென்றுங் குணபதிகளென்றுங் கூறலாகாது. ஆதலின் எனது இஸ்திரீதனத்தையும் மாமனாற் குப்பையில் சேர்க்காது சகலருக்கும் உபகாரியாக விளங்குந் தனபதிகளிடமே அநுப்பிவிட்டேனென்றாள்.

மணமகளில்லஞ் சேர்ந்து நிமித்தகர்களால் வதுவை நிறைவேறியவன்றிரவு தனக்கு இஸ்திரீதனமாக வந்தப் பெண்குதிரை குட்டி ஈன்றதை வேவுகர்களால் அறிந்து அவ்விடஞ்சென்று கொட்டாரத்திலுள்ளக் குதிரையையும் அதன் குட்டியையும் பார்வையிட்டு வேவுகர்களால் வேண உபசரிப்புச் செய்து ஆகாரமளித்து வந்தாள்.

சிலகாலங்களுக்குப்பின் காலைநேரத்தில் சமண முனிவர் ஒருவர் பிச்சாபாத்திரம் ஏந்தியிருந்த பெரியோரை கவனியாமலும், அன்னமளிக்கும்படி உத்தரவுகொடாமலும் இருந்த தனது மாமனாரின் லோபத்துவமுணர்ந்த விசாகா மனவருத்தமுற்று தென்புலத்தோர்க்கு ஈயாதனமிருந்தென்ன போயென்ன குறைந்தென்ன மிகுந்தென்ன என்று சொல்லிக்கொண்டே மனைக்குள் போய்விட்டாள்.