பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 327

உட்காருகின்றேன், நான் படுக்கின்றேன் என்பவை உலக வழக்கச்சொல்லேயன்றி வேறன்று.

கப்பல்கள் எப்படி காற்றல் நடத்தப்படுகின்றதோ, அம்பு எப்படி வின்னாண்பலத்தால் எய்யப்படுகின்றதோ அதுபோல் இந்ததேகமும் எண்ணுதலினாலும், வாயுதாதுவாலும் நடத்தப்படுகின்றது.

சூத்திரங்களின் கருவிகள் எப்படி கயிற்றால் அசைக்கப்படுகின்றதோ அதுபோல் இந்த தேகசூத்திரத்தின் கருவிகள் மனக்கயிற்றால் நடக்கவும், நிற்கவும் செய்கிறது. இவ்விடத்தில் ஓருதவியுமின்றி ஒரு ஸத்து நடக்கவும் நிற்கவும் செய்யவிருக்கின்றதோ?

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதை உடையவனாய் இருப்பதோடு ஏனையோருடைய தேகவிஷயத்திலும், ஜாக்கிரதையுடனிருப்பன். தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் தோன்றி அல்லல்பட்டு அழியுமெனவும், தன்தேகம் போல் ஏனையோர் தேகமும் விழுந்துவிடுமெனவும் நிதானித்து தியானிக்கும்போது தேகமட்டும் இவனுக்குத் தோன்றுமன்றி ஜீவஸத்தி என்றும், பெண் இதென்றும், ஆண் இதென்றும், நான் எனதென்று ஆட்டும் பொருளென்றும், மனிதரூபமென்றுந் தோற்றாது.

இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடன் அறிவை விருத்தி செய்துவர தியானசக்தி அதிகரித்து தனிபுருஷனாகி உலகபற்றற்று நிற்பன். ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக ஒரு சகோதிரன் தேக விஷயத்தில் ஜாக்கிரதையுடையவனாயிருப்பான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் சாதாரணமாய்ப் பார்க்கும் போதும், உற்றுநோக்கும்போதும், தான் எதைப் பார்க்கின்றானெனவும், எதை உற்றுநோக்குகின்றானெனவும் ஊன்றி ஆராய்ந்து ஜாக்கிரதையும் அடக்கமு முள்ளவனாயும் இருப்பன். கைகளை நீட்டும்போதும், மடக்கும் போதும் யாதுபற்றி நீட்டுகின்றோம், யாதுபற்றி மடக்குகின்றோமென ஊன்றிய மனத்துடன் ஜாக்கிரதையும், அடக்கமுமுள்ளவனாயுமிருப்பான். சீவரமணிந்து பிட்சாபாத்திரத்தை கையிலேந்தும் போது யாதுபற்றி சீவரமணிந்தோம், யாதுபற்றி பிட்சாபாத்திரத்தை கையிலேந்தினோமென ஆழ்ந்து சிந்தித்து ஜாக்கிரதையும், அடக்கமுமுள்ளவனாயிருப்பான். உண்ணும்போதும், அருந்தும் போதும், மெல்லும் போதும், ருசிக்கும் போதும் யாதுபற்றி உண்கின்றோம், அருந்துகின்றோம், மெல்லுகின்றோம், ருசிக்கின்றோமென தெளிந்து ஜாக்கிரதையும், அடக்கமுமுள்ளவனாயும் இருப்பான்.

நடக்கும்போதும், நிற்கும்போதும், உட்காரும்போதும், உறங்கும் போதும், விழிக்கும் போதும், பேசும்போதும், அமைதியாயிருக்கும் போதும் யாதுபற்றி நடக்கின்றோம், யாதுபற்றி நிற்கின்றோம் , யாதுபற்றி உட்காரு கின்றோம், யாதுபற்றி உறங்குகின்றோம், யாதுபற்றி விழிக்கின்றோம், யாதுபற்றி பேசுகின்றோம், யாதுபற்றி அமைதியாயிருக்கின்றோம் என விழித்து ஜாக்கிரதையும் அடக்கமுமுள்ளவனாய் இருப்பான்.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதை யுடையவனாய் இருப்பதோடு ஏனையோருடைய தேகவிஷயத்திலும் ஜாக்கிரதையுடனிருப்பான். தன் தேகம்போல் ஏனையோர் தேகமும் விழுந்து விடுமெனவும் நிதானித்து தியானிக்கும்போது தேகமட்டும் இவனுக்குத் தோன்றுமன்றி ஜீவஸத்தி என்றும், பெண் இதென்றும், ஆண் இதென்றும், நான் எனதென்றும், ஆட்டும் பொருளென்றும், மனிதரூபமென்றுந் தோன்றாது இவ்விதமாக தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடன் அடக்கத்தை விருத்தி செய்துவர தியானசக்தி அதிகரித்து தனிபுருஷனாகி உலக பற்றற்று நிற்பான்.

ஓ! சகோதிரர்களே! இவ்விதமாக ஒரு சகோதிரன் தேகவிஷயத்தில் ஜாக்கிரதையுடையவனாயிருப்பான்.

காயாசமாதி

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் இத்தேகம் உச்சி முதல் உள்ளங்கால் வரையிலும் அருவறுக்கத்தக்க பல அசுத்தங்கள் பொருந்தி தோலால்