பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 337

பேரில் அவா, எண்ணங்களின் பேரில் அவா இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும் ஹிதத்தையும் தரும். அங்கங்கே அவாக்கள் உதித்து விருத்தியாகி அவ்வவ்விடத்திலேயே அவைகள் நிலைத்து வேரூன்றுகின்றன.

(அறுவகை யூகைகள்) ரூபங்களைப்பற்றி யூகித்தல், சப்தங்களைப் பற்றி யூகித்தல், கந்தங்களைப் பற்றி யூகித்தல், ரசங்களைப் பற்றி யூகித்தல், பரிசங்களைப் பற்றி யூகித்தல், எண்ணங்களைப்பற்றி யூகித்தல் இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தரும். அங்கங்கே அவாக்கள் உதித்து விருத்தியாகி அவ்வவ்விடத்திலேயே நிலைத்து வேரூன்றுகின்றன.

ஓ ! சகோதிரர்களே ! துக்கோற்பத்தி என்னும் தூய்மெயான சத்தியம் இஃதே.

ஓ ! சகோதிரர்களே ! துக்கநிவாரண தூய்மெயான சத்தியம் யாது?

ஓ ! சகோதிரர்களே ! அவாவை முற்றும் ஒழித்துவிட வேண்டும். ஆனால் ஓ ! சகோதிரர்களே ! இந்த அவாவானது எவ்விடத்தில் குறைந்து மறைந்து எவ்விடத்தில் இது கலைந்து மடிகிறது. ஓ! சகோதிரர்களே ! ஜீவர்களுக்கு எங்கு இன்பத்தையும் ஹிதத்தையும் தருமோ அவ்விடத்தில் அவாவானது குறைந்து மறைகிறது. அது அவ்விடத்தில் கலைந்து மடிகிறது. ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தருவதெது. எவ்விடத்தில் அவாவானது குறைந்து மறைகிறது. அது எவ்விடத்தில் கலைந்து மடிகிறது. ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தருவது கண். அவ்விடத்தில் அவாவானது குறைந்து மறைகிறது. அது அவ்விடத்தில் கலைந்து மடிகிறது. செவி, நாசி, நா, தேகம் மனம் இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தரும். அவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மறைகின்றது. அது அவ்விடத்தில் கலைந்து மடிகிறது. ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தருவதுகண். அவ்விடத்தில் அவாவானது குறைந்து மறைகிறது. அது அவ்விடத்தில் கலைந்து மடிகிறது. செவி, நாசி, நா, தேகம் மனம் இவைகள் ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தரும். அவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மறைகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன. ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தருவது (அறுவித இந்திய கோசமான வஸ்துக்கள் ) ரூபங்கள், சப்தங்கள், கந்தங்கள், பரிசங்கள், எண்ணங்கள் அவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மறைகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன. ஜீவர்களுக்கு இன்பத்தையும் ஹிதத்தையும் தருவது (அறுவித விக்ஞானங்கள்) கண்-சித்தம், செவி-சித்தம், மனோ-சித்தம் அவ்வவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மறைகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன. ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தருவது (அறுவித பரிசங்கள்) கண்ணில் பரிசம்,செவியின் பரிசம், நாசியின் பரிசம், நாவின் பரிசம், தேகத்தின் பரிசம், மனோ பரிசம், அவ்வவ்விடதில் அவாக்களானது குறைந்து மறைகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன. ஜீவர்களுக்கு இன்பத்தையும் ஹிதத்தையும் தருவது (அறுவித உணர்ச்சிகள் ) அவ்வவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மறைகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன. ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தருவது (அறுவித குறிப்புகள்) அவ்வவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மறைகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன. ஜீவர்களுக்கு இன்பத்தையும், ஹிதத்தையும் தருவது (அறுவித நினைவுகள் ) அவ்வவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மறைகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன. ஜீவர்களுக்கு இன்பத்யுைம் ஹிதத்தையும் தருவது (அறுவித அவாக்கள்) அவ்வவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மறைகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன. ஜீவர்களுக்கு இன்பத்தையும் ஹிதத்தையும் தருவது (அறுவித யூகைகள் ) அவ்வவ்விடத்தில் அவாக்களானது குறைந்து மடிகின்றன. அவைகள் அவ்வவ்விடத்தில் கலைந்து மடிகின்றன.

ஓ! சகோதிரர்களே! துக்க நிவாரணமார்க்கமென்னும் தூய்மெயான சத்தியம் யாது?

ஓ! சகோதிரர்களே! துக்கநிவாரணமார்க்கமாகிய தூய்மெயான சத்தியம் இதுவே. மிக்க பரிசுத்தமுடைய அரிய அஷ்டாங்க மார்க்கம் இதுதான்,