பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 347

வெளிச்சத்தினின்று இருளிற்குப் போகும் வழியுண்டு. இருளினின்று வெளிச்சத்திற்குப் போகும் வழியுண்டு. மாலையினின்று பேரிருளுக்குப் போகும் வழியுண்டு. வைகரையினின்று பெருவெளிச்சத்திற்குப்போகும் வழியுண்டு. ஆதலின் அறிவை நிதானித்தவன் இருளினின்று வெளிச்சத்திற்கேகுவான், சிற்றறிவினின்று பேரறிவாளனாவான்.

தேறவிசாரிக்கும் பகுத்தறிவாலும், நற்செயலாலும் உன்னுடைய தண்மெயாம் சாந்தநிலையினின்று உலகவஸ்துக்களின் மீதுள்ள அவாவை ஆழ்ந்து கவனி, நிலையில்லா வாழ்வை நிதானித்துப்பார்.

உன்னுடைய அறிவை விருத்தி செய்து அதிவூக்கத்துடன் சன்மார்க்கத்தை நாடும் அரசனுக்குரிய செயல்களில் அதி ஜாக்கிரதையிலிருந்து வெளி தோற்றங்களில் உன்னுடைய சுகத்தை நாடாதே. மிக்க வல்லமெய்ப்பெற்றவ னென்றும் அதி தீரனென்றும் உன்னைக் காட்டிக்கொள்ளாதே.நன்மெய்க்கடை பிடித்து உனக்குள்ள சுகத்தை நாடு. வேற்றரசர்மேல் வெகுளி கொள்ளாதே. உனக்குள்ள சாந்தத்தை உன் உப்பரிகைமீது நாட்டும். வெண்கொடியாம் மௌனப்பிரகாசத்தால் காட்டு. உனது குடிகள் யாவருக்கும் செவ்வியக் கோலை நீட்டி நீதிமார்க்கத்தையூட்டு. அவர்கள் நிறைந்த நீதிமார்க்கத்தில் நிற்பார்களாயின் அவர்கள் ஒழுக்கமே உமது சுகத்துக்கோர் வழியை ஈந்து சகல பற்றுக்களுமற்று மாளாப்பிறவியில் உண்டாகும் துக்கங்களும் ஒழிந்து நிருவாணநிலை அடைவாயென்று கூறினார்.

ஐயன் அமுதவாக்கை உணர்ந்த அரசன் அருகன தடிபணிந்து தேவாதிதேவா! உமது அளவுபடா சத்தியதன்மத்தின் நிலையைக் கிஞ்சித்தறிந்து கொண்டபோதிலும் பிறவி என்னும் வார்த்தையின் பொருளும், அதன் செயலும் விளங்காதவனாயிருக்கின்றேன் அவற்றை விளங்கக்கூறி அப்பிறவியினின்று விடுவிக்கவேண்டுமென்று வணங்கினான்.

அவலோகிதர் அரசனை நோக்கி பிறவியின் தோற்றத்திற்கும் காரணம் நீயே, அதன் மடிவுக்கும் காரணம் நீயே, தோற்றம் மடிவு இரண்டுமற்று நிற்பதற்கும் காரணம் நீயேயன்றி வேறொருவரும் உன்னைப் பிறவியினின்று விடுவிக்க மாட்டார்களென்று கூறினார்.

அவற்றை வினவிய அரசன் அண்ணலைநோக்கி ஐயே! பிறவி என்னும் விவரமே அடிமைக்கு விளங்காததால் அவற்றைத் தெள்ளற விளக்கி என் தீவினையை ஒழிக்கவேண்டுமென்றான்.

அரசனது வேண்டுகோளை வினவிய விநாயகன் பிறவியின் தோற்றங்களையும் அதன் மறைவுகளையும் விளக்க ஆரம்பித்தார்.

அரசே! உன் உள்ளத்தினின்று ஓர் விஷயத்தை எண்ணும் எண்ணமானது தோற்றி எண்ணிய எண்ணம் மறந்துவிடுவதை உணர்கின்றாய். அவ்வகை எண்ணும் எண்ணங்களின் தோற்றமே ஓர் பிறப்பாகவும், எண்ணங்களின் மறதியே அதன் இறப்பாகவும் உணரல் வேண்டும்.

நித்திறையினின்று விழித்தலே ஓர்பிறப்பாகவும், விழிப்பினின்று நித்திறை அடைதலே ஓர் இறப்பாகவும் உணரல் வேண்டும்.

மாதுரு கருப்பையினின்று வெளிக்குத் தோற்றுதலே ஓர் பிறப்பென்றும், அத்தோற்றம் மறைதலேயோரிறப்பென்றும் உணரல் வேண்டும்.

இம்மூவகை இறப்பு பிறப்பினுள் உலகத்தில் தோற்றும் பொருட்களை நாடி உன் உள்ளத்தில் எழும் அவாவின் பற்றானது மண், பெண், பொன்னென்னும் முப்பொருளையேனும், முப்பொருட்களில் ஒன்றையேனும் பற்றி அதனலுப்பால் அயர்ந்த நித்திறை உண்டாய் அந்நித்திறா பழக்கத்தால் பெருநித்திறையாம் மரணமுண்டாகி முன் பேதமெயால் திரண்ட வினையாம் அவாவின் பற்று வியர்வையாகவாயினும், விதையாகவாயினும், முட்டையாக வாயினும், கருவாகவாயினும் உருண்டு உருவாகத் தோன்றி பிறப்பென்னும் பெயரேற்று துக்கத்திற் சுழன்று திரிகின்றது.

எவ்வகையிலென்னில் காற்றானது உருவமற்றிருத்தலால் அதன் சுயநிலை ஒருவருக்குந் தோன்றாது. அவ்வருவுருவமற்றக்காற்று யாவருக்கும் உணர்ச்சியாகி