பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 351

ஸீஹங் வஸ்தேஸு அஸந்தஸந்தங் / வாங்வ ஜாலம்ஹி அஸஜ்ஜமானங்
பதுமங் தோயேன அளிப்பமானங் / நேதார மணஞேன மனஞ்ஞஞைய்வ
தஞ்சா பிஹிரா முனிங்வேதயந்தி.

ஏகாந்தமாயும், வைராக்கியமாயும், புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் இடந்தராமலும், சத்தத்திற்கு பயப்படாத சிம்மம்போலும், வலையிலகப்படா காற்றுபோலும், ஜலத்தில் படாத தாமரைபோலும் ஏனைய சகோதிரர்கள் இவருக்குப் போதிக்காது இவர் ஏனைய சகோதிரர்களுக்கு ஆசானுமா யிருப்பாராயின் அவரையே முனி என்றழைக்கலாம்.

8. யோகா ஹணே தம்போரிவாபிஜாயதி / யஸ்மிங் பரவேடா பரியந்தங் வதந்தி
தங்வதராக ஸுஸமாஹி இந்திரியங் / தஞ்சாபி திஹிரா முனிங்வேத யந்தி.

சகோதிரர்களில் யாவரேனும் அசையா கம்பம்போல் உறுதியான சித்தமும் நேர்மையான வாக்கையுடையவும், காமமற்றும், புலன்கள் ஒடுக்கமுள்ளவராய் இருப்பரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.

9. யோவே டி தத்தோ ஸரஸ்வ உத்ஜி கங் / ஜிகுச்சத்தி கம்மேஹி பாய கேஹி
வபஸ் ஸமானோ விஸமஸ்ஸ மஞ்ச / தஞ்சாபி திஹிரா முனிங்வேத யந்தி.

சகோதிரர்களில் யாவரேனும் நேரான நூலேணிபோலொத்த சித்தமும், பாபகன்மத்தினின்று விலகியும், எது நீதி எது அநீதியென தன்னிற்றானே பகுத்தறியவுங் கூடியவராய் இருப்பரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.

10. யோஸஞ்ஞ தத்தோ நகரோதி பாபங் / தாரோ சமஜ்ஜோச முனிய தத்தோ
அரோஸநெய்யுங்ஸோனரோ ஸேதிகந்தி / தஞ்சாபி திஹிரா முனிங்வேதயந்தி.

சகோதிரர்களில் யாவரேனும் தன்னடக்கமும், குமரபருவமுள்ளவராகி தன்னிச்சையை வென்றவராகவும், ஏனையோர்களால் கோபமூட்டப்படாதும் தான் ஏனையோரை கோபமூட்டாமலும் இருப்பரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.

11. யதக்கதோ மஜ்ஜதோ ஸேஸ தோவா / பிண்டங் விபேத பரதத்துப ஜீவி
நாளஸ் துதிங் ரோபி நிபச்சவாதி / தஞ்சாபி திஹிரா முனிங்வேதயந்தி

சகோதிரர்களில் யாவரேனும் ஏனையோரால் அளித்ததை புசித்து பிச்சாபாத்திரத்தில் அன்னம் நிறைந்திருந்தாலும் குறைந்திருந்தாலும் அதனைக் கவனியாதும், அன்னமிட்டவர்களை புகழாதும் இகழாதும் கொடுத்ததை உண்டு ஆனந்தத்திலிருப்பரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.

12. முனிங்காந்தங் விரதங் மேதுனஸமாயோ / ஜோயப்பனே உபநு வஜ்ஜதே
கௌசிமதப்ப மாதாவிரதங் விப்பமுத்தங் / தஞ்சாபி திஹிரா முனிங்வேதயந்தி

சகோதிரர்களில் ஒருவர் விபசாரஞ் செய்யாதும், குமரப்பருவத்தில் பாசபந்த வலையில் சிக்காதும், டம்பத்தினின்று விலகியும், துறந்தவராகியும் இருப்பரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.

13. அஞ்ஞாய லோகங் பரமத்த தஸ்ஸிங் / ஒகஸ்ஸ முத்தங் அதிகரி யதாதிங்
பதஞ்சின்ன கந்தங் அளிதங் அனாஸவங் / தஞ்சாபி திஹிரா முனிங்வேதயந்தி

சகோதிரர்கள் ஒருவர் வாழ்க்கை என்னும் சமுத்திரத்தையும், நதியையும் கடந்து மேலான சத்தியதரிசனம் பெற்று உலகத்தை துறந்தும், சகலபற்றுக்களை அற்றும், ஏகாந்தமாயும் சுகவாரிபோல் இருப்பரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.

கோபமற்றும், பயமற்றும், டம்பமற்றும் துன்னடையற்றும் சதா ஞானத்தையே பேசவும், சித்தியால் சிந்தை பூரிக்காமலும் ஒருவர் இருப்பரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.

பற்றற்றும், வஞ்சகமற்றும், பொறாமெயற்றும், விவேகியாயும், நிந்திக்காதும், பின்புறணி கூறாமலும் ஒருவர் இருப்பரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.

லாபத்தை அடையவேண்டிஇச்சைகொண்டு கற்காமலும், பிறர்புகழ்ச்சிக்காக துறவியாகாமலும், கோபாவேசங்கொண்டு அதனால் துறவி ஆகாமலும், இச்சித்த மண்ணோ பெண்ணோ பொன்னோ கிடைக்காவிடில் துறவியாக போகாமலும், தான் எடுத்த தேகம் பிறருக்கே நன்மெய்செய்ய வேண்டுமென்றும், பிறர் துக்கத்தையும் தன் துக்கத்தையும் நிவர்த்திப்பான் வேண்டி ஒருவர் துறவியாவரேல் அவரையே முனி என்றழைக்கலாம்.