பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/369

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 359

மற்றொருவன் என் அறிய நேயனே நற்குணநேயனே என எதிரில் நேசித்து மறைந்தவுடன் நிந்தைகூறி தூஷிப்பான்.
இன்னொருவன் திரவியம் இருக்குமளவும் நேயம் பாராட்டுவான். திரவியமற்றபோது அவனும் விட்டொழிவான்.
2.சூரியன் உதயமாகுமளவும் நித்திறை செய்தல், காமிகளுடன் பழகல், துற்குண மிகுத்தோருடன் சாவகாசஞ்செய்தல், பாம்பைக் கோபத்துடன் கோலாலடிக்க முயலுவோருக்கு ஒப்பானவனிடம் நேசித்தல், மிக்க கோபிகளுடன் சாவகாசஞ் செய்தல், அபகீர்த்தி உள்ளோருடன் பழகுதல் ஆகிய அறுவகை நேயம் பாராட்டுவதால் குடும்பி அதிதுக்கத்திற்கு ஆளாவான்.
3.கட்டுக்கடங்கா சிற்றின்ப நேயர்களுடன் பழகுதல், மதுபானப் பிரியர்களுடன் செல்லுதல், பாட்டுக்கச்சேரிக்காரரை பின்பற்றுதல், பகல்கால நித்திறையை அதி விரும்பல், அகால நேரங்களில் வீணே தெருத்திரிதல், உலோபமே உருவாக நிற்றல் ஆகிய அறுவகைப் பற்றுக்களே குடும்பியை அல்லற்படுத்தி அதிதுக்கத்திற்காளாக்கும்.
4.அவமானத்தை உண்டு செய்யுங் கூட்டத்திற் சேருவோனும், பிறர் விருத்தியைக் கண்டு மனஞ்சகியாதவனும், பாவங்களை விருத்திசெய்வோர் கூட்டத்திற் சேருபவனும், இம்மெயில நுபவிக்குந் துக்கத்தினும் மறுமெயில் அதி துக்கத்தை அனுபவிப்பான்.
5.சூதாட்டத்தை சிந்திக்காதவனும், சூதாடுவோர் சேர்க்கையில் அணுகாதவனும், மதுபானத்தைக் கையிற்றொடாதவனும், மதுவையருந்து வோர்பால் நெருங்காதவனும், விபசார எண்ணங் கொள்ளதவனும், விபச்சாரம் புரிவோரை அணுகாதவனும், வஞ்சினம், பொறாமெய், குடிகெடுப்பு முதலிய கீழ்மக்கட்செயலை விரும்பாதவனும், அத்தகைய குணமிகுத்த கீழ்மக்களை அணுகாதவனும், அன்னியர் பொருளை அபகரிக்க எண்ணங்கொள்ளாதவனும், அத்தகையக் களவு மிகுத்தோர்பால் சேராதவனும், சீவர்களை இம்சிக்கா எண்ணமுள்ளவனும், அத்தகைய சீவயிம்சையோரை அணுகாதவனும், இம்மெயில் அதி சுகம் பெறுவதுடன் மறுமெயில் அதிதீவர நிருவாண நிலையை அடைவான்.
6.குடும்பத்தில் குடிகள் மீது சினங்கொள்ளாமலும், சினங்கொள்ளு வோருக்கு இதமொழி கூறலும், பெண்பிள்ளைகளின் போஷணையை விரும்புதலும், பெரியோரை வணங்கி அனுபவங்கேட்டலும், சிறியோர் கலையில் கலை நூல் பயிற்றலும், செய்தொழில் விருத்தியை சிறியோர்க் கூட்டலும், வித்தியாவிருத்தியை உலகில் பரப்பலும், தான் சுகம்பெறுவது போல் ஏனையோர் சுகம் பெறவேண்டுமெனக் கருதுதலும், ஏனைய சீவர்களுக்கு வந்த துன்பம் தனக்கு வந்த துன்பம் போல் கருதி அவற்றை நீக்க முயலுதலும் ஆகிய செயற்கள் யாவும் குடும்பியின் சுக வாதாரங்கள் என்னப்படும்.
7.கள்ளருந்தும் அவாவையும், காமியயிச்சையையும் ஒழித்தவன் எவனோ அவன் குடும்ப துக்கத்தில் அரைபாகம் ஒழிந்தவனாவான்.
8.மேற்கூறியவைகளுடன் அதியவாக்கொண்டு அன்னியர் பொருளை அபகரிக்காதவனும், மாமிஷப்புசிப்பின் இச்சையால் சீவயிம்சை செய்யாதவனும் குடும்பத் துக்கத்தில் முக்கால் பாகம் ஒழிந்தவனாவான்.
9.இவைகளுள் தன்னாவிற் பொய்யெழாமற் காக்கவேண்டியவன் சகல துற்செயல்களையும் மறுக்கும் சத்தியவாளேந்தியுள்ளவனாதலின் குடும்ப துக்கமற்று ஒழிந்தவனாவான்.
10.குடும்பி என்னும் இல்லறத்தோன் தொல்லறம் யாவையுமொழித்து நல்லற நிலை நிற்பானாயின் அவனையே இல்வாழீசனென்றெல்லோரும் புகழ்வார்கள்.

குடும்பியே! கள்ளசிநேகருள் மற்றும் நன்குவகையோருண்டு.

1.அவர்கள் யாரென்பீரேல், ஒரு சிநேகிதன் மிக்க நேயமுடன் கூட்டுறவாடி எவ்விதத்திலும் உமது பொருளை அபகரித்துச் செல்லவேண்டிய விழிப்பிலிருந்து வவ்விச்செல்லுவான்.