பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயம் / 27

பின்னடியார்களுக்கும் இக் கடவுள் என்னும் பெயருண்டோ என்று ஆராயுங்கால்,

சீவகசிந்தாமணி - முத்தியிலம்பகம்

தணக்குறப்பறித்த போதுந்தானனை விடுத்தல் செல்லா
நிணப்புடையுடும்பனாரை யாதனானீக்கலாகு
மணப்புடைமாலைமார்ப னொரு சொலே யேதுவாகக்

கணைக்க வினழித்த கண்ணார்துறந்துபோய்க் கடவுளானான்.

எனக் கூறியிருக்கின்றது. நன்மெய்க்கடைபிடி என்னும் ஒரு சொல்லே ஏதுவாக இல்லந் துறந்து கடவுளானானென்னும் மொழியின் ஆதரவால் நன்மெய்க் கடைபிடித்த மகாஞானிகள் ஒவ்வொருவருக்கும் கடவுள் என்னும் பெயர் பொருந்தி நிற்கின்றன. இவ்வகை பொருத்தமுறும் கடவுள் என்னும் நன்மெயாஞ் செயலை புத்தசங்கத்தார் இல்லை என கூறுகின்றார்கள் என்று அதன் பொருளறியா மற்ற சங்கத்தோர்க் குழறுவது வியப்பேயாம். அவ்வியப்புக்குக் காரணம் - சகஸ்திரநாமபகவனென்று கமல சூத்திரத்திலும், ஆயிர நாமத்தாழியன் திருவடி என்று மணிமேகலையிலும் கூறியுள்ள பெயர்களாகும் பிரமம், கடவுள், ஈசன், பகவன், பரமன் என்னும் புத்தருக்குரியப் பெயர்களை திவாகரம், நிகண்டு, சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, சூளாமணி, கமலசூத்திரம் முதலிய நூற்களை நோக்காமெயேயாம். - 1:1; சூன் 19, 1907

நூற்களை நோக்கினும் நுட்பமறியாது ஆகாயத்தில் சகோரபட்சி உண்டோ இல்லையோ என உசாவுவதுபோல நிர்மலம் உண்டா இல்லையா நிற்குணம் உண்டா இல்லையா என உசாவுவோர்க்கு மாற்றம் மவுனமேயாம்.

அதாவது காணாத பொருளுக்குக் கடவுள் என்றும் ஈசன் என்றும் பகவன் என்றும் பரமன் என்றும் பிரமன் என்றும் கூறியுள்ளப் பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்களா அன்றேல் காணும் பொருளுக்கே இவ்வகைப் பெயர்களைக் கொடுத்திருக்கின்றார்களா என உசாவுங்கால், எழுவகைத் தோற்றங்களுள் மனுக்கள் ஆறாவது தோற்ற நல்வாய்மை - நற்காட்சி - நற்கடைபிடி - நல்லுணர்ச்சி - நல்லீகை - நன்னியதியமைந்த செயல்களுக்கிட்ட பெயர்கள் என்றே விளங்கும்.

இத்தகைய செயலின் மகத்துவம் அறியாதோர் ஓர் கடவுளில்லாமல் உலகம் உண்டாச்சுதா, குயவனில்லாமல் பாண்டம் உண்டாச்சுதா என வினவுவதும் உண்டு.

அங்ஙனம் வினவுவோர் குயவனுக்கு மண் காரணமாயிருந்தது போல் கடவுளுக்குக் காரணம் எதுவெனக் கண்டறிவாரேல் சிருட்டிகள் உண்டா இல்லையா என்பது செவ்வனே விளங்கும்.

அல்லது கடவுள் என்னும் மொழிக்கும் சிருட்டிகள் என்னும் மொழிக்கும் பொருள் பொருந்துமா என உசாவுவரேல் பொருந்தாது, பொருந்தாதென்பதும் சிறந்து விளங்கும்.

சிறந்த விசாரணையற்று சருவமதத்திலும் உண்மெயுண்டென்று பரக்கக் கூறுவாறுமுண்டு. அங்ஙனம் கூறுவது மதத்துள் உண்மெய் உண்டா மக்களுள் உண்மெய் உண்டா என்னும் தன்மெய் உணரா தற்போதக் கூற்றேயாம். தற்போதக் கூற்றில் சருவமதஸ்தரும் தத்தங்கடவுளை தொழுது கொண்டிருக்க ஓர் கடவுள் இல்லை என்னலாமோ என வினவுவாரும் உண்டு.

ஒரு கடவுள் இல்லாமெயினால்தான் பலமதஸ்தர் பல கடவுளைத் தொழுது வருகின்றார்கள். பல கடவுள் செய்கையும் பதிகுலைந்துள்ளமெயால் அவர்கள் தொழுகையும் பயனில்லை என்பது பரக்க விளங்கும்.

அதாவது, சாதிதேசத்தை ஆளும் கூட்டை கலைப்பான் என்னும் ஓரரசனுக்கு குடி கெடுப்பான் என்னும் ஓர் மந்திரி இருந்தான். அத்தேசக் குடிகள் யாவரும் மந்திரியைக் கவனிக்காமல் அரசனுக்குக் கட்டவேண்டிய கப்பங்களைச்