பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/371

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 361

குடும்பிகளுக்குள்ளாகவே வெருங்ககையுடன் வந்து மற்றவர்கள் பொருளை அபகரிப்போரும், வீண்வார்த்தைகளைப் பேசிக் குடும்பத்தைக் கலைத்து வைப்பவர்களும், நல்ல வார்த்தைகளைப் பேசிக்கொண்டே குடிகெடுக்க ஆரம்பிப்போர்களும், தங்களைப் போல் கூழுக்கும், கஞ்சிக்கும் அலையாமல் சுகபுசிப்பில் இருக்கின்றார்களே இவர்களைக் கெடுக்கவேண்டு மென்று வழிதேடுகிறவர்களும் உண்டு.

இத்தியாதி குடிகேடர்களையும், வஞ்சகர்களையும் உய்த்தறிந்து அவர்களுடன் சேராமலும், அவர்கள் தங்குமிடங்களிற் செல்லாமலும், அவர்கள் உட்காருமிடங்களில் உட்காராமலும், அவர்கள் நேசத்தைக் கனவிலும், விரும்பாமல் இருக்கவேண்டுமென்று கூறி குடும்பியானவன் அடுத்துப் பழகவேண்டியவர்களையும், நேசிக்க வேண்டியவர்களையும் புகலவாரம்பித்தார்.

குடும்பியே! சிநேகிக்கக் கூடியவர்களுள் நல்லுள்ளத்தோர் நான்கு வகைப்படுவர்.

1.நல்லுள்ள நேயன் பிறர்நயமும், பிறருதவியுங் கருதாது தன்னாலியன்ற உதவி புரிவான்.
2.நல்லுள்ளநேயன் உனக்கு மிக்க திரவியமுள்ள காலத்தில் உன்னுடன் சுகித்ததுபோல் உன்னுடைய திரவியங்கள் யாவும், அற்ற துக்கத்தை அனுபவிக்குங் காலத்தும் உடந்தையாகவே துக்கத்தை அனுபவிப்பான்.
3.நல்லுள்ள நேயன் உன்னை நேசிக்குங்கால் உனது திரவியம் விருத்தி அடையவேண்டிய முயற்சியிற் கூடவே இருந்து விருத்தி செய்து சுகம் பெறுவான்.
4.நல்லுள்ள நேயன் உன்மீது மிக்க அன்பு பாராட்டி உன் நிழல் போல் நிற்பான்.

குடும்பியே! நல்லுள்ளத்தோன் ஒருவன் உனக்கு நான்குவகை உதவியைப் புரிவான்.

 
1.ஒர்வகை வியாதியினாலோ, புசித்துள்ள பதார்த்தங்களின் மயக்கத்தினாலோ நீ மயங்கி கிடப்பாயாகில் உன்னைக் காப்பாற்றி வீடுசேர்த்தும் உபசரிப்பான்.
2.உனது சொத்துக்களை கள்ளர்களேனும், மற்றவர்களேனும் வந்தபகரிக்காவண்ணம் பாதுகாப்பான்.
3.உனக்கேதோவோர் ஆபத்து நேரிட்டகாலத்தில் கூடவே இருந்து வேண்டிய தைரியத்தைக் கொடுப்பதுடன் அவ்வாபத்தினின்று மீட்கத்தக்க யேதுக்களையுந் தேடுவான்.
4.உனக்கேதேனும் உதவி வேண்டி கேட்பாயாயின் தன்னிடமில்லாவிடினும் பிறரிடத்தேனுங் கொணர்ந்தளித்து காப்பான்.

இத்தகைய நான்குவிதமாகிய உதவி புரிவோர்களாகும் நேயர்களே நல்லுள்ளத்தோர்களாகும்.

குடும்பியே சுகத்திற்குந் துக்கத்திற்கும் உதவியாயிருந்து ஆதரிக்கும் நேயர்கள் நான்குவகையாவர்.

1.உனது அந்தரங்கப் பொருளையேனும், இரகசிய வார்த்தையையேனும் வெளியிடவேண்டாமென்று கூறுவாயாயின் அவற்றை மற்றோரறியாவண்ணம் மிக்க ஜாக்கிரதையிலிருப்பான்.
2.உனக்குள்ள இரகசியச் செயல்களை யாவரிடமுங்கூறாது தன்னிடம் பதித்துக்காப்பான்.
3.தனக்கு யாது துன்பம் நேரிட்டாலும் தனது நேயனைக் கைவிடமாட்டான்.
4.நேயனுக்கோர் துன்பம் நேரிடுமாயின் தனது பிராணனைக் கொடுப்பான்.

இத்தகைய நான்குவகை நேயர்களையே துக்கத்திற்குஞ் சுகத்திற்கும் பொருந்தி ஆதரிக்கக்கூடிய சிநேகிதர்கள் என்பார்கள்.

குடும்பியே உனக்குள்ள செல்வத்தை விருத்திசெய்யும் நல்லெண்ண முள்ள நேயர்கள் நான்குவகையுண்டு.

1.உன்னைப் பாபச்செயல்களில் விழாவண்ணங் பாதுகாப்பான்.
2.தானும் நற்செயல்களையே செய்துகொண்டு உன்னையும் நற்செயலில் உலாவச் செய்வான்.