பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 369


கசீனா 10, அசுப 10, அநூஸதி 10, பிம்மாவிஹாரா 4, அறப 4, ஆஹேயேபடீகுலாசஞ்ஞா 1, ஸநூதாது வாவே டானங் 1, மொத்தம் = 40

கசீனா - 10 : பதவீ கசீனா, அப்போ கசீனா, தேஜோ கசீனா, வாயோ கசீனா, நீலா கசீனா, பீதா கசீனா, லோஹிதா கசீனா, ஒடத கசீனா, ஆலோகா கசீனா, ஆகாசா கசீனா.

அசுபா - 10 : உதுமாதகங், விய்நிலாகங், உப்யோகங், விசித்தகங், விய்காய்தகங், வெக்கிடகங், ஹடாவிஹிதகங், மோஹிதகங், புழூவகங், அட்திகங்.

அனூஸடி : புத்தாநூஸடி, தம்மா நூஸடி, ஸங்கா நூஸடி, சீலா நூஸடி, சாகங் நூஸடி, தேவதா நூஸடி, உபாஸமா நூஸடி, மரணா அநூஸடி, காயகாத நூஸடி, அனபானா நூஸடி.

பிம்மவிஹாரா - 4. : மித்தா, கருணா, முதிதா, உபேக்கா.

அறபா - 4. : அகாஸசஞ்சாயதனா, விஞ்ஞானாஸன்யாயதனங், ஆகேஸஞ்ஞாயதனங், நீவசஞ்ஞாயதனங்.

ஆஹேயேட்டீலோசஞ்ஞா - 1. ஸதூதாதுவாவேடானங் - 1.

கசினா - 10 : பதவி கசீனா. அப்பு கசீனா, தேய்வு கசீனா, வாயு கசீனா, கருநீல நிற கசீனா, மஞ்சள் நிற கசீனா, செந்நிற கசீனா, வெண்ணிற கசீனா, வெளி கசீனா, ஆகாச கசீனா.

அசுபா - 10 : ஊதலிட்ட பிணம், நீலவர்ணமான பிணம், அழுகின பிணம், சின்னாபின்னப்பட்ட பிணம், கொந்தினதும் கடிக்கப்பட்டதுமான பிணம், சிதறிகிடக்கும் பிணம், அடிக்கப்பட்டு சிதறிகிடக்கும் பிணம், இரத்தம் சிந்திக்கொண்டிருக்கும் பிணம், புழுக்கள் நிறைந்திருக்கும் பிணம், எலும்புக்கூடு பிணம் ஆகிய இவைகள் 10-வித அசுபங்கள்.

அநூஸடி - 10 : பகவனைப்பற்றி, தன்மத்தைப்பற்றி, சங்கத்தைப்பற்றி, சீலங்களைப்பற்றி, நிஷ்பக்ஷபாதத்தைப்பற்றி, தெய்வ நிலையைப்பற்றி, மரணத்தைப்பற்றி, தேகத்தைப்பற்றி, மூச்சை உள்ளுக்கிழுப்பதும் வெளிக்கு விடுவதைப்பற்றி, சாந்தத்தைப்பற்றி தியானித்தலே 10-வகை அநூஸடிகள்.

பிம்மாவிஹாரா - 4. : அன்பு, சிநேகம், ஆனந்தம், விருப்பு வெறுப்பின்மெ, இவைகள் நான்கும் பிம்மாவிகாரமென்னப்படும்.

அறப - 4. : அளவற்ற ஆகாஸ ராஜ்யம், அளவற்ற சித்த ராஜ்யம், நேசமற்ற ராஜ்யம், திருஷ்டியும் திருஷ்டியற்ற ராஜ்யம்.

ஆகாரம் நல்லவை கெட்டவையென நினையாத தியானம் - 1.

பூதங்களைப்பற்றிய தியானம் - 1.

ஓ! சகோதிரர்களே! பதவி கசீனா அல்லது பிருதிவியின் தொடர்பைப்பற்றி தியானித்தல் எப்படி என்பீரேல்:- சகோதிரன் ஒருவன் உலகப் பொருட்களின் பேரில் அவாக்கொண்டு அந்த அவாவை விலக்க சக்தியற்றவனாய் இருப்பானாகில் இந்த பதவி கசீனங்களைப்பற்றி தியானித்தல் வேண்டும். எப்படியெனில் :- ஒரு சகோதிரன் ஒருவசதியானவிடத்திற்குச் சென்று அங்கு தங்கி களி மண் சிறிது கொணர்ந்து அதிலுள்ள கற்களையும் புற்களையும் எடுத்துவிட்டு அக்களிமண்ணால் ஒரு வட்டவடிவமான பீடம் செய்து அதன்பின்னர் தனது தேகத்தை சுத்தஞ்செய்தவனாய் அப்பீடத்தினெதிரில் மனவொடுக்கத்துடன் உட்கார்ந்து அப்பீடத்தை உற்றுநோக்கி இது பிருதிவி கசீனா, இது (பதவி கசீனா, இது பதவி கசீனா ) என ஆழ்ந்து தியானித்து சற்று பின்கண்ணை மூடிக்கொண்டு (இது பதவி கசீனா) என தியானித்து அதன்பின் ஏனையப் பொருட்களையும் பார்த்து (இது பெருத்த பிருதிவி, இது பெருத்த பிருதிவி) என ஒருமனப்பட்டுவிடுகின்றான்.

ஓ! சகோதிரர்களே! ஒரு சகோதிரன் தியான நடையில் வர ஆரம்பிக்கும் போதே ஒரு பாதரட்சையும், ஒரு ஊன்றுகோலை உடைய வனாயிருக்க வேண்டும்.

ஏனெனில் தியானத்திலிருந்து ஏதோ புறப்பொருள் காட்சியில் சற்று நீங்குவானாயின் திரும்ப கால் சுத்தஞ்செய்துக்கொண்டு மறுபடியும் தியானஞ்செய்ய வருவானாகில் மத்தியில் காலங்கழிந்துவிடும். சகோதிரன்