பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 373


ஆக இவ்வொவ்வொன்றும் குஸலம் அதாவது நன்மெயுடன் சேர்ந்தால் நல் பரிசம் என்றும், தின்மெயுடன் சேர்ந்தால் கெட்ட பரிஸம் என்றும் கூறப்படும். தனியாக கஸ்ஸா பரிஸம் பொதுவானதே. ஆனால் நன்மெய் சேர்ந்தவிடத்து நல்லவையாகவும், தின்மெய் சேர்ந்தவிடத்து கெட்டதுமாக மாறுகிறது.

2. அகுஸலா 14. தின்மெயான மனத்தின் சக்தி
மோஹா - மோஹம்; தோஸா - கோபம்; -
அஹிரிகா - அசுத்தத்தை இச்சித்தல்; இஸா - பொறாமெய்;
அநொத்தப்பா - வெட்கமின்மெய்; மாச்சரியா - பற்கடிப்பு;
உத்தச்ச - கலைந்த மனம்; குச்குச்சா - ஆவல்;
லோபா - துராசை; தீனா - சோம்பல்;
தித்தி - மந்த புத்தி; மித்தா - அன்பின்மெய்;
மானா - கர்வம்; விசிகிச்சா - சந்தேகம்;
இவைகள் யாவும் தின்மெயான மனத்தின் சக்தி என்னப்படும்
3. ஸோபனா 25 நன்மெயான மனத்தின் சக்தி
1. ஸோபனா சாதாரண சேதசிகம் 19
ஸட்தா - சுத்தமான சக்தி;
சட்தி - மோஹத்தின் விரோதமான சக்தி;
ஹிரி - துற்கிருத்தியத்தைச் செய்ய வெட்கப்படும் சக்தி;
உத்தபா - துற்கிருத்தியத்தைச் செய்யப்படாது தடுக்கும் சக்தி;
அலோபா - துராசையற்ற சக்தி;
அதோஸா - கோபமற்ற சக்தி;
உபேக்கா - உபேட்சை சக்தி;
கயாபஸாதி - சுத்தமான காய சக்தி;
சித்தாபஸாதி - சுத்தமான சித்த சக்தி;
காயாமுதிதா - மிருதுவான காய சக்தி;
சித்தாமுதிதா - மிருதுவான சித்த சக்தி;
காயகம்மிஞ்ஞதா - காய கன்ம சக்தி;
சித்தா கம்மிஞ்ஞதா - சித்த கன்ம சக்தி;
காயாபகுஞ்ஞதா - சோர்வடையா காய சக்தி;
சித்தபகுஞ்ஞதா - சோர்வடையா சித்த சக்தி;
காயாஸோட்கதா - ஸ்திரமான காய சக்தி;
சித்தஸோட்கதா - ஸ்திரமான சித்த சக்தி;
2. வீரதிசேதசிகம் 3.

சம்மாவாஸா - நல்வசனம், சம்மாகம்மந்தா - நற்செய்கை, சம்மா அஜீவா - நல்வாழ்க்கை

3. அபமான சேதசிகம் 2.
கருணா - கருணை சக்தி,
முதிதா - ஆனந்த சக்தி
4. பிரஞ்ஞா சேதசிகம் 1.
விவேக சக்தி.

இவைகள் யாவும் அரூப லோகத்தைச் சார்ந்தவை. 'இனி ரூப லோகத்தைப் பற்றி விளக்குவாம்.

3. ரூபம் 2- வகை

பூதரூபம் - 4 உபதய ரூபம் - 24

பூதரூபம் - 4 :

1. படவிதாது - பிருதுவியின் லட்சணம், 2. தேஜோ தாது – தேயுவின் லட்சணம் 3. அபோதாது - அப்புவின் லட்சணம் 4. வாயோ தாது - வாயுவின் லட்சணம்

உபதய ரூபம் - சுபஸம்பவமானவை

5 - வித ஸபதி.