பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

388 / அயோத்திதாசர் சிந்தனைகள்


ஐயனே! எங்கள் போஷிப்பு சமுத்திர மச்சங்களைப் பிடிப்பதும் விற்பதும், புசிப்பதுமே போஷிப்பு என்றார்கள்.

அத்தகைய நீர்வாழ் ஜெந்துக்களைக் கொன்று சீவிக்காது வேறுவகையில் சீவிக்கலாகாதோ என்றார்.

ஐயனே! எங்கள் பீடிபீடியாங் குலத்தொழில் வலைத் தொழிலேயன்றி வேறு தொழிலறியோம், யீதன்றி நீரில் வாழுங் செந்துக்களை நிலத்திற் கொண்டு வந்தவுடன் மடிந்து விடுவதனால் அவற்றைக் கொன்றாலென்ன, தின்றாலென்ன, விற்றா லென்னவாம் என்றார்கள்.

பரவர்கள் மொழியைக் கேட்ட பங்கய மூர்த்தி புன்னகைக் கொண்டு அன்பர்களே! உங்களை நீரில் போட்டு வைத்தால் சீவித்திருப்பீர்களோ என்றார்.

ஐயனே! மூச்சு திணரி மடிந்து போவோம் என்றார்கள். நிலத்தில் வாழும் உங்களை நீரில் போட்டு கொன்றாலென்ன, நீரில் வாழும் மட்சங்கள் உங்களைத் தின்றால் என்னவென்று நீங்களும் இருக்கலாகாதோ என்றார்.

ஐயனே! நிலத்தில் வாழும் யாங்கள் வலைகளைக் கொண்டுபோய் நீர்வாழும் ஜெந்துக்களைக் கொண்டு வருகிறோம். அதுபோல் நீரில் வாழும் செந்துக்கள் எந்த வலைகளைக் கொண்டு வந்து எங்களை நீரிற் கொண்டுபோய் கொல்லும் என்றார்கள்.

அவற்றை வினவிய அவலோகிதர் அன்பர்களே! நீரிலுள்ள மட்சங்களைப் பிடிக்கும் வலைகளும் உங்களிடமிருக்கின்றது. பாசபந்தமென்னும் வலைகளும் உங்களிடமிருக்கின்றது. ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள். அவ்வலையோ பேராசை என்னும் நூலைத்திரித்து பெருந்திண்டி என்னும் கயிராக்கி பொறாமெய், வஞ்சினம், சூது, களவு, கொலை, கள்ளருந்தல் காமியமென்னும் முடிகளிட்டு கோபமென்னுங் கரையோரங் குஞ்சங்கட்டி முறுக்கேறிக் கொண்டு வருகின்றது.

அவ்வகை முறுக்கேறும் வலையால் என்று சூழப்படுகின்றீர்களோ அன்றே அதில் சிக்குண்டு துக்கம் பெருகி மாளாப்பிணியாலும் முப்பாலுந் துன்பமடைந்து பிறவி என்னும் அலையால் பீடிக்கப்படுவீர்கள்.

இத்தகைய சொற்பசீவனத்திற்காக வலையேந்தி மச்சங்களை மடிப்பதினும் முத்து, பவழம், சங்கு, உப்பு இவைகளை சேகரித்து விற்பீர்களானால் அதிக சீருஞ் சிறப்பும் பெற்று பிறவியின் வலையையும் அறுத்து நிருவாணசுகமும் அடைவீர்களென்றார்.

உதயணன்காதை - மகத காண்டம்

பாடலோவாப் பழனப் படைப்பைக் / கூடு குலைக்கமுகின் கொழுநில லசைந்த
மன்றுனற்பார்க்கு (மருதந்தடீயி) / குன்றயற்பரந்த குளிர்கொ ளருவி
மருவினமாண மூதூர் / வெறிது சேரல் விழுப்பமன்றெனக்
கானவாழைத் தேனுறு கனியு / வெள்ளிலைப் பல்லின் முள்ளுடை யமுர்தமுந்
திடரலண்மரத்துத் தேம்பலாக் கனியும் / வரைதாழ் தேனொடுகா அயவிரை சூழ்ந்து
மணியு முத்து மணிபெற வயங்கி / பணிவில் பாக்கம்பயங் கொண்டு கவரா
நிறைந்திழைத்தகு நீங்காச்செல்வமொடு / சிறந்த சீர்த்திக் (குறஞ்சி) கோலிக்
கல்லென சும்மையொடு கார்தலை மணந்து / (முல்லை) முதுதிணைச் செல்வ மெய்தி
(பாலையு நெய்தலும்) வேலியாகக் / கோல மெய்திக் குறையவ ணகற்றி
(துறவிற் சிறந்த சொல்லறன் விளித்தது ) / பிறப்பற முயலும் பெரியோன் பிறந்தது
சிறப்பிடை யறாத தேசிக முடையது / மறப்பெருந் தகையது மாற்றோரில்லது
விறற்புக ழுடையது வீரியமைந்த / துலகிற் கெல்லாந் திலகம் போல்வ
தலகு வேந்த னாணை கேட்ப / தாம்பு மல்லும் பரந்துமிகை யில்லது
செல்வப் பெருங்குடி சிறந்தரை பெற்றது / நல்குர வாளரை நாடி நிற்பது
நன்பெரும் புலவர் பண்புளி பண்ணிய / புகழ்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்த
வின்னவை பிறவு மெண்ணுவாம் பிகந்த / மன்பெருஞ் சிறப்பின் (மகதனன்னாடு)
சென்று சார்ந்தனராற் செம்மலோ டொருங்கே.

அவ்வருமொழிகளை வினவிய பரவர்கள் ஆனந்தங்கொண்டு ஐயனே! உயிர்வதையின்றி சுகசீவனம் ஏதேனும் உண்டாயின் அவற்றை விளக்க வேண்டும் என்றடி பணிந்தார்கள்.

அவ்வருந்துதலைக் கேட்ட அண்ணல் அவ்விடமுள்ள ஓர் இடத்தில் சிலரை ஏற்றிக்கொண்டு ஆழியிற்சென்று நீரில் மூழ்கவைத்து முத்துள்ள மடிந்த