பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

416 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அவர் பிறந்தநாள் கொண்டாட்டத்தையும், மாசி மாத பருவத்தில் அவர் துறவடைந்தநாள் கொண்டாட்டத்தையும், பங்குனிமாத பருவத்தில் அவர் நிருவாணமாம் காமனை ஜெயித்தக் கொண்டாட்டத்தையும், மார்கழிமாத பருவத்தில் அவர் சுயஞ்சோதியாய் பரிநிருவாணமுற்ற வானந்தத்தையும் கொண்டாடி நீதிநெறியில் நிலைக்கவேண்டுமென்று ஓர் கூட்டத்தார் பிரிந்தார்கள். இவர்களே மகாயன பௌத்தக் கூட்டத்தோர்களானார்கள்.

பகவன் பரிநிருவாணமுற்ற அயனமாம் ஆறாவது மாதத்திலிக் கூட்டங்கள்கூடி மேற்கூறி முடிவுகளை செய்தபடியால் வருடந்தோரும் பன்றியை எய்யவேண்டுமென்னும் கூட்டத்தோர் ஈனாயன பௌத்தர்களென்றும், அவ்வகைப் பன்றி எய்யப்படாதென்னும் கூட்டத்தோர் மகாயன பௌத்தர்களென்றும் அழைக்கப்பெற்றார்கள்.

தேவர் கோன் வாழ்க தென்புலத்தோர் வாழ்க
மூவா முதல்வன் மும்மணியும் வாழ்க
காவாது காக்கங் கருணா வுபாஸக
ராவலோர் வாழ்க வவர்சுக மோங்கவே.

சூளாமணி

மூவடிவினாலிரண்டு சூழ் சுடருநாண முழுதுலகமுடியெழின் முளைவயிரநாற்றித்
தூவடிவினாலிலங்கு வெண்குடையினீழற்சுடரோயுன்னடி
போற்றிச் சொல்லுவதொன்றுண்டாற்
சேவடிகடாமரையின் சேயிதழ்கடீண்டச்சி வந்தனவோ சேவடியின் செங்கதிர்கள்பாயப்
பூவடிவுகொண்டனவோ பொங்கொளிகள்சூழ்ந்து புலங்கொளாவாலெமக்கெம்
புண்ணியர்தங்கோவே

கருமாலை வெவ்வினைகள்காறளர நூறிக்கடையிலாவொண்
ஞானக்கதிர்விரித்தாயென்று
மருமாலை நன்னெறியைமுன்பயந்தா என்றுமடியே முன்னடி பரவுமாறறிவதல்லாற்
றிருமாலே தேனாருமரவிந்தமேந்துந் திருவணங்குசேவடியாய் தேவாதிதேவ
பெருமானே நின்பெருமெ நன்குணர மாட்டார்பிணங்குவார்தம்மை வினைப்
பிணக்கொழிக்கலாமே

ஒளியாகி உலகாகி நீவிரிந்தாயென்கோவுலகெலாநின்னொளியினுள்ளடங்கிற்றென்கோ
வளியாரவுலகநீயாள்கின்றாயென்கோ வம ருலகுதானின்ன
தடியடைந்ததென்கோ
விளியாதமெய்ப்பொருளை நீவிரித்தாயென்கோ நீவிரித்தவாறே மெய்ப்பொருள்
விரிந்ததென்கோ
தெளியாமலில்லை நின்றிருவடி கண்மெய்மெதெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்கலாமே.
களியானை நாற்கோட்டத் தொன்றுடையசெல்வன் கண்ணொராயிரமுடையான் கண்
விளக்கமெய்து
மொளியானை ஊழிமுதலானானை ஒங்கியுல களவுமாகி உயிர் தமக்குறுகண்செய்யா வளியானையாரழலஞ்சோதிவாய் சூழ்ந்தவருளாழியானையிணையடி பரவுவார்கட் கெளியானை எந்தைபெருமானை ஏயல்லா லிறையாக
வீங்கொருவரெண்ணுமாறென்னே
தெருளாமெயால் வினவற்பாலதொன்றுண்டு திருவடிகள் செம்பொனாரரவிந்தமேந்த, விருளாழியேழுலகுஞ் சூழொளியின் மூழ்க விமையாத செங்கண்ணினிமையோர் வந்தேத்த
உருளாழியானுமொளிமணி முடிமேற்கைவைத்தொருபாலில் வரவுலகநின்னுழையதாக.
வருளாழி முன் செல்லப் பின்செல்வதென்னா வடிப்படாதாய்நின்றவகன்ஞாலமுண்டோ

வானோர் தமுலகுடையமானீலவண்ணன் மகிழ்ந்திறைஞ்சு
மாலையணிமணிமுடி மேல்வைகா
ஊனாருமறவாழியோடைமால் யானையுடையான்ற ஒளிமுடியின் மேலுரையோநிற்கத்
தேனாருமரவிந்தஞ் சென்றேந்தும் போழ்து திருவடிகள்
செந்தோடு தீண்டாவேயாகி
லானாவிம்மூவுலகுமாளுடைய பெம்மானடி யுறுவாரின்மெதாமறிவுண்டதன்றே

தேனருளி மந்தாரச் செந்தா மந்தாழ்ந்து திரளரைய செம்பவளம் வம்பாக வூன்றி வானருளி மாணிக்கச் செங்கதிர்கள் வீசி மதிமருட்டும் வெண்குடையோர்
மூன்றுடையவாமன்
யானருள வேண்டியடியிணை பணியும் போழ்துமிமையவர் கோனாயிரச்
செங்கணான் வந்து
தானருளுமாறென்று தாழ்பணியும் போழ்துந் தகை யொன்ற தேலிறைமைதக்க
தேயேன்றே

விண்டாங்கவெவ்வினைவெரூ உதிரநூறிவிரிகின்ற மெய்ஞ்ஞானச்
சுடர்விளக்கு மாட்டிக்