பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/428

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

418 / அயோத்திதாசர் சிந்தனைகள்


புத்தரது ஆதிவேதம் முற்றிற்று

29. புத்தரது ஆதிவேத விளக்கம்

சவ்வபபாபஸ்ஸ அகரணம்பாபஞ் செய்யாதிருங்கோள்
குஸலஸ வுபசம்பதா இதயத்தை சுத்திசெய்யுங்கோள்
சசித்தபரியோதபனம் நன்மெய்க் கடைபிடியுங்கோள்
யேதங் புத்தானுசாசனம்

இவ்வாக்கியங்கள் மூன்றும் மூன்று பேதமாயுள்ளபடியால் திரிபேதவாக்கியங்கள் என்றும், திரிவேதவாக்கியங்கள் என்றும், இதுவே சீர்திருத்த ஆதிபீட வாக்கியங்களானபடியால், திரிபிடகவாக்கியங்கள் என்றும், வரிவடிவ அட்சரமில்லாது ஒலிவடிவாய் ஒருவர் சொல்லவும் மற்றொருவர் கேட்கவுமாயிருந்தபடியால் வரையாக் கேள்வி திரிசுருதி வாக்கியங்கள் என்றும், விசேஷித்த ஞானம் அமைந்துள்ளபடியால் திரிரத்தினங்கள் என்றும், ஆதிமக்கள் சீர்திருத்த முப்பிரிவாக்கியங்களாயிருந்த படியால் முதநூலென்றும், ஆதிவேதமென்றும், உடனுக்குடன் விளங்காத அபரியப் பொருட்களாயிருந்த படியால் அருமறைகள் என்றும் வழங்கி வந்தார்கள். இம்முதநூலாம் ஆதிவேதத்தை போதித்தவர் புத்தரே என்பதற்கு ஆதாரம்

நன்னூல்

வினையினீங்கி விளங்கிய வறிவின் / முனைவன் கண்டது முதநூலாகும்

அருங்கலைச்செப்பு

என்று முண்டாகி யிறையால் வெளிப்பட்டு / நின்றது நூலென்றுணர்

சீவக சிந்தாமணி

ஆதிவேதம் பயங்தோய்நீ யலர்பெய்மாரி யமர்தோய் நீ
நீதிநெறியை யுணர்ந்தோய் நீ நிகரில்காட்சிக் கிறையோய் நீ
நாதனென்னப் படுவோய் நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன்
பாதகமலந் தொழவெங்கள் பசையாப்பவிழப் பணியாயே.

சூளாமணி

ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை / போதியங் கிழவனை பூமிசை யொதுங்கினை
போதியங் கிழவனை பூமிசை யொதுங்கிய / சேதியஞ் செல்வனின் றிருவடி வணங்கினம்.

திரிபேதவாக்கியங்களாம் திரிபிடகவாக்கியங்கள் வரிவடிவ அட்சரங்களில்லாது வரையாக்கேள்வியாம் திரிசுருதிவாக்கியங்களாய் இருந்தபடியால் மக்கள் மனதிற் சரிவறப்பதியாமல் மலைவுற்றிருப்பதையுணர்ந்த பகவன் விம்பாசார அரசனை அணுகி மகடபாஷை வடமொழி வரிவடிவட்சரங்களையும், திராவிடபாஷையாம் தென்மொழி வரிவடிவட்சரங்களையும் உண்டுசெய்து உடலினதுச் செயலையும் உயிரினதுச்செயலையும் உணர்ந்து உண்மெயாம் மெய்ப்பொருள் உணர்வான் வேண்டி உயிரெழுத்து மெய்யெழுத்தென்னு மட்சரங்களையும் வல்லினம், மெல்லினம், இடையினமென்னு மதனதன் சத்துவங்களையும், ஒருமெய், பன்மெயென்னும் பாகுபாடுகளையும், அதனதன் வேற்றுமெகளாம் விகற்பங்களைத் தெள்ளறவிளக்கி மொழிதலாக்கி விம்பாசாரவரசனது தேசத்திலுள்ள ஓர் கன்மலையை சீர்திருத்தி திரிவேதமொழிகளைத் தழுவிய தசசீலங்களாம் பாரதப்பத்தை வரைந்து சகடபாஷை, திராவிடபாஷை கற்றுத்தேறும் ஒவ்வொருவர் மனதிலும் பதியச்செய்து விட்டார்.

சகடபாஷை : வடமொழி புத்தபிரானால் இஃது பாணினியாருக்கு போதிக்கப்பட்டது.

திராவிட பாஷை : தென்மொழி புத்தபிரானால் இஃது அகஸ்தியருக்குப் போதிக்கப்பட்டது.

இவ்விருமொழியும் புத்தபிரானால் போதித்துள்ளதென்பதற்காதாரம்.

பூர்வம் இத்தேசக்குடிகள் யாவரும் புத்தபிரானை இந்திரரென்றே கொண்டாடிவந்தார்கள். அதற்குக் காரணம் மெய், வாய், கண், மூச்சுச், செவியென்னும் ஐயிந்தியங்களை வென்ற வல்லபங் கொண்டேயாம். இந்திர