பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 / அயோத்திதாசர் சிந்தனைகள்

ஞானவெட்டி

விட்டகுறைவருமளவு முபதேசங்காண் / மெய்யுடலுந் தளர்ந்து புவி மேலுநோக்கி
தட்டழிந்து விழும்போது வோதிவைத்த / சாத்திரத்தைக் கணப்போது முறைக்கபோமோ
எட்டிரண்டு மறியாதார் குருக்களாமோ / என்னையினிப்பறையனென்று தள்ளலாமோ
மட்டமரும் பூங்குழல்வா லாம்பிகைப்பெண் / வங்கிஷத்திலுதித்த சாம்பவனும் நானே.

என்று மொழிந்த இறையறச்செல்வி / குன்றா மொழியின் குறிப்பை யறிந்தோர்
மாறியாற்று மகமாயென்று / கூறி மன்னோர் குடி கடன்பால்
வீரு சிம்ம மரவோ டானை / யூரு சூழ்ந்த விடுக்கங் கண்டு
சிந்தை நிரைத்த செல்வக் கிழத்தி / யந்தர மெழுவி யருள்வடிவாகி
நின்றப் பேற்றை யுணர்ந்த வரயர் / குன்றாக் குறையால் கோடமுற்றார்
வாலை யம்பிகை மகிழுளங்கொண்டு / வேலின் கண்ணி விரவியென்தாய்
நிம் நீழல் நிரைக மலத்து / உம்பர் போற்ற வுரவீற்றிருந்து
ஆலமர்ச் செல்வ னருளிய பிடக / சீல மூன்றின் திடநிலையாகு
முத்த தத்துவ மெய்மெயோதி / சுத்த சாதத் தூய நிலையாம்
நோன்பு மூன்றி னுட்பங் காட்டி / ஆன்ற விரதக் காப்பு மருளி
தான் சென்றோங்கு சமாதி கால / மான்ற வுலகோர்க் கூறுகவென்று
பருகடகத்துப் பதினெண் பாநாள் / உருகதிர் வார முற்ற பூரணை
சிகிரி தீப சிற்சுக சோதி / பாகிமுக முற்றப் பாங்கை கண்டோர்
அம்மை வல்லி யவ்வை யறத்தி / உம்மை பிறிந்து முலகத் துய்வோ .

- 1:12; செப்டம்பர் 4, 1907 –

பொங்கு மாறி யாற்றிய வடிவை / எங்கு கண்டு விரைஞ் சுவதென்தாய்
உந்தன் காவலூருமுளத்து / முந்து காக்கு முன்னவளாயின் –
உச்சி சோதி யோங்கி வளர்ந்து / பிச்சமருள்க பெருமுதல் வாணி
என்று மிக்க வேக்கமுறுகால் / பின்னும் வல்லி பகிர்முகசோதி
நந்தாதிப நற்சுக மோங்கி / எந்தாய் வளர்ந்து யேகமுற்றாள்
உற்ற யாக்கைக் குரியோர் நிமித்தர் / பெற்ற மன்னராவர் கைகொண்
டீமச்சுடலை யிட்டு பூதிச் / சாமக்காவிரி நீர்விளையாடி
இல்ல மெங்கு மாதி தேவியை / வல்லி வாணி மகமா யென்றும்
பாடி பாடி பல் பெயரிட்டு / நீடு வாழ்க நிரை குலதேவி
சேரியெங்குஞ் சிறப் பறைவித்து / நூரிபொங்கல் நோன்புநூற்றி
யெங்குமெண்ணான் கறமது கொண்டு / பொங்குஞ்சோற்றுக் கும்பநாட்டி
வரியோர்க்கூட்டி மநக்குறையாற்றி / உரியவிரத முளத்தி லூன்றி.

அன்னதானத்துக்காகும் பதார்த்தங்களை சேகரித்து அம்மன் பரிநிருவாணமுற்ற வேம்பு மரத்தடியில்வந்து பொங்கல்வைத்து எல்லோர் சோற்றையும் ஒரு போராகக் குவித்து ஏழைகளைப் பூர்த்தியாக சாப்பிடவைத்து அவரவர்களில்லங்களுக்கு அனுப்பிவிட்டு விவேகிகள் ஒன்றுகூடி அம்மன் பாலபருவமாதலின் வாலையென்றும், சகலமுந் தெரிந்தவளாதலின் அவ்வை என்றும் இளந்தேகியாதலின் பச்சையம்மன் என்றும், அதிரூபியாதலின் வடிவுடையம்மன் என்றும், குணக்குடியாதலின் மனோன்மணி என்றும், வேல்போன்று பிரகாசமுற்றக் கண்ணுடையவளாதலின் வேற்கண்ணி, வேலாங்கண்ணியென்றும், கவிபாடும் பாணர் நிலையுற்றமெயின் வாணி என்றும், சரமாகும் வாசியைத் தன்வசந் திருப்பிக்கொண்டமெயின் சரசுவதி என்றும், தாமரை புட்பாசனத்தில் வீற்றிருந்தமெயின் கமலாசனி என்றும், இராகத்துவேஷ மோகத்தை அகற்றினவளாதலின் திரிபுராந்தகி என்றும், முப்பத்தி ரண்டறங்களையும் விவரித்து சற்குருவின் தருமத்தைப் பரவச் செய்தவளாதலின் அறச் செல்வி என்றும், அவரவர்கள் இதயத்துள்ள இருளை அகற்றினவளாதலின் பகவதி என்றும் இஸ்திரீகளுக்குள் முதல் தேவியாக விளங்கினமெயின் ஆதிதேவி என்றும், சிரசினுச்சியிற் தீபம்போல் பிரகாசித்தமெயின் நந்தாவிளக்கென்றும்,

சூளாமணி

மௌவன் மலர்வேய்ந்து மது நாறு மணியைம்பாற்
கொவ்வைதுயில் கொண்ட துவர்வாய்க் கொடியோடொப்பா
டெய்வ மணநாறு திருமேனிபுறங்காக்கு
மவ்வையரோடெய்திமுத லவ்வையடி சேர்ந்தாள்.

மணிமேகலை

சிந்தாதேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே நா மிசை பாவா