பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/443

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 433

பொருளென்னவென்று கேட்டால் அதன் விவரத்தை நூலாதாரங்கொண்டு விளக்குவதைக் காணேன். இதன் விவரத்தை எமக்கும் ஏனையோருக்குங் களங்கமற விளக்குமாறு மிகு வணங்கிக் கேட்டுக்கொள்ளுந் தங்கள் அடிமை.

வீ. அந்தோணி. கொளம்பு

விடை: ஆன்மமென்னும் மொழி மகடபாஷையின் உற்பவமேயாம். ஆன்மமென்பதின் பொருள் புருஷனென்னப்படும். பாலி நிகண்டிலும் பாணினியார் சகடபாஷை இலக்கணத்திலுங் காணலாம். பஞ்சஸ்கந்தங்கள் சரிவர அமைந்து மானிடனெனப் பாடியாடி உலாவும் புருஷவடிவிற்கே ஆன்மனென்றும் ஆத்துமன் என்றும் வழங்கலாயினர். புருஷனென்னும் தோற்றம் இல்லாவிடத்து ஆன்மனென்னும்பெயரும் இல்லையாகும். புருஷதோற்றம் உண்டாயவிடத்து ஆன்மனென்னும் மொழியுந் தோன்றும். உடலுயிரெனும் வேற்றுமெ மொழியை ஒன்றித்து ஆன்மனென ஆயிற்று.

உடலுயிர் ஒற்றுமெய நயத்தால் ஒன்றென்றும் வேற்றுமெ நயத்தால் மலைவுற்றும் பிரிதலால் அவ்வகை மலைவுறாது வழங்கற்கு மகடபாஷையில் ஆன்மனென்றும், சகடபாஷையில் புருஷனென்றும், திராவிடபாஷையில் மனிதன் என்றும் வழங்கலாயினர்.

உலகில் மக்களெனத் தோன்றி மாறா பிறவியிற் சுழன்று தீராக்கவலையில் உழலும் வரையில் ஆன்மமென்னும் பெயரும் வழங்கிக்கொண்டே வரும். மனிதனுக்குள்ள சகல பற்றுக்களுமற்று இதயசுத்தமுண்டாகி தோற்றும் பொருட்கள் யாவும் அனித்தியம் புருஷவுருவமும் அனித்தியமென்னும் அநித்ய, அனான்மனான போது நிருவாணமடைகின்றான். அன்றுமுதல் அவனுக்கு ஆன்மனென்னும் பெயரற்று அமலன், அசரீரியென்னும் பிறவியற்ற நிலையை அடைகின்றான். பிறவி அறாது துக்கத்திற் சுழலும் வரையில் ஆன்மனென்னுந் தோற்றப்பெயருண்டு. பிறவியற்றபோது தோற்றுஞ் செயலுமற்று ஆன்ம பெயரும் இல்லாமற்போம். இதுவே ஆன்மமென்னும் மொழியி னுற்பவமும் அதன் தோற்றச்செயல்களுமென்னப்படும். இதையே தோற்ற முண்டாயவிடத்து ஆன்மனென்றும் தோற்றமுண்டாகாவிடத்து அனான்மனென்றும் வழங்கலாயினர்.

- 6:28; டிசம்பர் 18, 1912 –

94.அல்லாசாமி பத்து நாளைய துக்க சிந்தனாகாலத்தை பயித்தியக்காரக் கோலஞ் செய்வதென்னை

மகமதியரென்னும் மகாமதியர்களாம் விவேக புருஷர்களின் சீர்திருத்தக் குறைவேயாகும். அதாவது விசேஷமாக அவர்களது குருபரம்பரையில் மரித்த சிலமகான்களின் சரித்திரமாக விளங்குகின்றது. அவர்களில் ஒருவரை சத்துருக்கள் நெருப்பிலிட்டு வதைத்தபோதினும் யாதாமோர் உபத்திரவமன்றி ஆனந்தமாய் நெருப்பினின்று வெளிவந்ததாகவும் தெரியவருகின்றது. அவர்களது ஞானநெறி அறியாத சத்துருக்கள் மேலும் மேலும் உபத்திரவஞ்செய்தபோது ஓர் கிணற்று நீரிலேயே சமாதியடைந்து தேகம் ஒருவருக்கும் அகப்படாமல் போனதாகவும் விளங்குகின்றது. அத்தகைய மக்கள் நீரில் மூழ்கும்போது தனதுகையால் என்னை துன்பஞ்செய்ய ஆரம்பித்த நீவிர் யாவரும் சுகமாயிருங்கோளென்று ஆசிகூறி கையை உள்ளடக்கிக் கொண்டாரென்றும் அச்சரித்திரக்காரரால் கூற நன்கு விளங்குகின்றது.

இத்தகைய பேரறிவாளராம் மகான்களது காலத்தை மகமதியர் மிக்க அமைதியுடன் அன்புடனுமிருந்து அவர்களது துன்பத்தை நினைத்து துக்கித்து பத்துநாளும் ஆனந்த தியானத்திலிருந்து அவர்கள் பெயரால் ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானஞ்செய்து அத்திருநாளைப் பெருநாளாகக் கொண்டாடி வருவார்களாயின் அவர்கள் நித்தியானந்த சுகவழியைக் கண்டடைவதுடன் தங்களது சந்ததியோர்களும் சுகவாழ்க்கையில் நல்லறிவும் விளங்கி மகான்களது ஆசியும் பெறுவார்கள்.

அங்ஙனமின்றி பக்தியில் நிறைந்து மறைந்தோர் காலத்தை பத்துநாளைய பயித்தியக்காரக் கோலமாக்கி வீணான கூச்சலுக்கும் சண்டைகளுக்கும் ஏதுவை