பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/455

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 445


அக்காலத்தில் மாச்சிசென்னுந் தீக்குச்சி இல்லாதபடியால் நெருப்புச் சட்டியைக் கையிலெடுத்துக்கொண்டுபோய் கட்டைகளை அடுக்கிப் பிணத்தைச் சுட்டுவிட்டு வீடுவந்துசேர்ந்து மறுநாள் சுடலைக்குப் பாலெடுத்துச்சென்று உள்ள அனலை பால்கொண்டு அவித்து அஸ்திகளைப் பொறுக்கி ஆற்றிலேனும் சமுத்திரத்திலேனுங் கொட்டிவிடுவது வழக்கமாகும். மற்றக்கிரியைகள் யாவும் தற்கால மாறுதல்களேயாம். இதுவே இல்லறத்தோர் ஈமக்கிரியையாகும். புத்தசங்கஞ் சேர்ந்த துறவிகளின் கிரியைகளோவென்னில் மரணத்தை ஜெயிப்பதே புகழ்ச்சியும் மரணத்திற்குள்ளாவதே இகழ்ச்சியுமாய சாதனத் திலிருப்பவர்களாதலின் ஓரரசன் பதினாறு வயதுக்குமேல் விவாகஞ் செய்து இருபத்தொன்பது வயதளவும் சகல சுகபோகங்களையும் அநுபவித்து புத்திர வாதாரமுற்று முப்பதாவது வயதில் துறவுற்று சங்கஞ் சேர்ந்து பிறப்புப், பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு வகைத் துக்கங்களையுஞ் ஜெயிக்கும் ஞானசாதன முற்று ஆதிக்குச் சமமாம் சமாதியடைய முயலுங்கால், வீட்டிற்குங் காட்டிற்கும் மத்தியிலுள்ள சமபூமியில் ஓர் கல்லறைக்கட்டி அதனுள் கற்பூரத்தை நிறப்பி சமாதியடையுமரசன் அதனுள் உழ்க்கார்ந்து கொண்டவுடன் சதுரக் கல்லினால் அக்குழியை மூடி மண்பரப்பிவிட்டு சகலரும் அரண்மனை சேர்ந்து பதினைந்தானாள் சங்கத்தோரும் அரச குடும்பத்தோரும் ஏதொரு வாகனமும் இரதமுமின்றி கால்நடையாக நடந்துபோய் அக்கல்லரையருகே சுற்றிலும் நின்று அறஹத்தோ அறஹத்தோ என்னுஞ் சப்தமிட்டு மூடியுள்ளக்கல்லை எடுப்பார்கள். எடுத்துப்பார்க்குங்கால் சமாதியடைந்தோர் உச்சிவழிதிரந்து உடலசையாமல் நிற்குமாயின் எல்லோரும் ஆனந்தக்கூத்தாடி அறையைக்கல்லால் மூடி அவ்விடத்திலே ஓர் மடங்கட்டி அந்நாளையே தன்மகன்ம ஆதினாளாகக் கொண்டு ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானஞ் செய்து அம்மடத்திலேயே சாது சங்கஞ் சேர்த்து சமண முநிவர்களால் வருடந்தோருங் குருபூஜையை நடத்தி அன்னதானம் வஸ்திரதானஞ் செய்து வருவார்கள்.

இவ்வகையாக செய்துவந்த கட்டிடங்களே மதுரையில்மட்டிலும் புத்த சங்க மடங்கள் பன்னீராயிரக் கட்டிடங்களிருந்தவிடங்களை ஆர்ச்கிலாஜிகல் சர்வேயர்களால் கண்டுபிடித்து புத்தகங்களில் வெளியிட்டிருக்கின்றார்.

அம்மேறை சமாதியடைந்தோரை அரச குடும்பத்தோரும் சங்கத்தோரும் பதினைந்தானாள் கால்நடையிற் சென்று கல்லறை அணுகி மூடியக் கல்லைத் திறந்து பார்க்குங்கால் சமாதியடைந்தோர் உச்சவழி திறவாது சிரஞ்சாய்ந்து கிடக்குமாயின் அவ்விடம் வந்துள்ள சகலருந் துக்கித்துக் கல்லை முடிமண்பரப்பிவிட்டு வீடுசேர்ந்தவுடன் அவ்வரசனுடையப் புத்திரர் தங்கள் தந்தை மரணத்தை செயித்து ஆண்பிள்ளையென்னுங் கீர்த்தி பெறாது வீண் பிள்ளையாயினரே என்னுந் துக்கத்தால் தங்கள் மீசையை சிரைத்தும் இழிவில் அழுந்து துக்கத்திலாழ்ந்தி விடுவார்கள். மற்றவர்கள் யாவரும் அரசன் சமாதியுள்ளாரென்னும் புகழ்ச்சிக்குப் போகாமல் இறந்தாரென்னும் இகழ்ச்சி யாம் இழிவுக்குப் போனோமென ஒவ்வொருவரும் நீராடி இல்லஞ் சேருவார்கள்.

அக்கால் அரசருக்குள்ள மற்றுங் குடும்பத்தோர் சேர்ந்து முடியைக் கழற்றி எறிந்துவிட்டு மீசையைச் சிரைத்துள்ள வரசபுத்திரர்களை அணுகி உங்கள் தகப்பன் வீண்பிள்ளையாகப் போயினும் போகட்டும் ஆயாசப்படாது முப்பதாவது வயதில் நீங்கள் துறவேறி மரண ஜெயமடையுங்கோளென்று ஆசி கூறி முடிகளையெடுத்து அவரவர்கள் சிரசிலிட்டு இராட்சிய பாரந்தாங்கும்படி உத்திரவளித்து விடுவார்கள். இவைகளே பூர்வ தன்மகன்மச் செயலுள், வாகனமின்றி நடந்து செல்லுவதை நடப்பென்றும், சமாதி அறையின் கல்லெடுத்துப் பார்ப்பதை கல்லெடுப்பென்றும் அரச புத்திரர் எறிந்துள்ள முடியை எடுத்துத் தரிப்பதை முடிசூட்டலென்றும் வழங்கிவந்தார்கள்.

அத்தகைய இல்லறத்தோர் துறவறத்தோரது கிரியைகள் யாவும் தற்கால நூதன மதஸ்தர்களாலும் நூதன சாதிகளாலும் பலவகையாக மாறுதலுற்று