பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 / அயோத்திதாசர் சிந்தனைகள்

வீரசோழியம்

போராக்க ரோரைவர்க்கற வமிழ்தம் பொழிந்தனையே
ஆரமிழ்த்தமணி நாகர் குலமுய்ய வருளினையே.

பாலி பாஷையில் நாகரென்றும் யீபுரு பாஷையில் இசரேல் என்றும் தற்காலம் சீனர் என்றும் வழங்கும் ஓர் கூட்டத்தாருக்கு உண்டாயிருந்த இடுக்கங்களை அகற்றி ஆதரித்த புத்தபிரானைக் கொண்டாடும் கூட்டத்தார் நாகைநாதர் வியாரமென்றும் ஓர் கட்டிடங்கட்டி புத்ததன்ம சங்கமென்னும் மும்மணிகளை ஆனந்தமாகக் கொண்டாடி வந்தார்கள்.

அதுபோல் வேலாங்கண்ணியம்மன் வியாரத்திலும் அம்மனாலோதியக் கொன்றுத் தின்னாமை என்னும் நோன்பையும் வாக்குக்காப்பு, மனோக்காப்பு, தேகக்காப்பு என்னும் மூவிரதங்களையும் அநுஷ்டித்துவருங்கால்,

தேகத்தால் யாருக்கேனும் ஓர் தீங்குசெய்து அத்தீவினையால் தங்களுக்கு ஓர் தீங்குண்டாகுமாயின் அம்மன் விரதத்தைக் கடந்து உபச்சாரத்திற்கு அங்கப்பிரதட்சணஞ் செய்துவந்து வேற்கண்ணி வியாரத்துள்ள பிட்சுணிகளை வணங்கி ஏழைகளுக்கு அன்னதானம் வஸ்திரதானங்கள் செய்தும்,

தந்நாவைக் காக்காமல் ஒருவரை வைதும் வடுக்கூறியும் வஞ்சித்தும் பொய்புகன்றுங் கெடுத்தத் தீங்கினால் தனக்குண்டான தீவினைகளை உணர்ந்து வெள்ளியினாலேனும் பொன்னினாலேனும் கம்பிசெய்து குற்றஞ்செய்த தந்நாவுக்கலகிட்டு மோனத்துடன் வேற்கண்ணி வியாரம் வந்து பிட்சுணிக்களை வணங்கி நாவினால் செய்த குற்றங்களை விளக்கி அலகையும் தட்சணையையும் அதிபதிகளிடம் கொடுத்து அன்னதானம் வஸ்திரதானங்கள் செய்தும்,

தன்மனதைக் காக்காமல் போனப்போக்கில் விட்டு ஒருவரைக் கெடுத்தும் வஞ்சித்தும் காமவெகுளி மயக்கங்களைப் பெருக்கியுஞ் செய்த தீங்குகளினால் தனக்குண்டாய தீவினைகளையுணர்ந்து வஞ்சகத்தால் பொஞ்சித்தப் பொருட்களை வியாரத்துட் கொண்டுவந்து பிட்சுணி யதிபர்களிடம் அளித்து முப்பத்திரண்டு அறங்களையும் பரவச்செய்து வந்தார்கள்.

இத்தகைய தன்மர் ஆட்சியநிரைவில் குறைவு தோன்றி கொள்ளைநோய்கண்டு பாலபருவமுற்றப் பெண்களேனும் பிள்ளைகளேனும் பிராணவவத்தையில் இருக்குங்கால் தாய்தந்தையர்கள் ஆண்பிள்ளை அதியவத்தையிலிருக்குமாயின் அரசமரத்தடியிலிருந்து அருளறம் விளக்கிய ஆதி தேவனை சிந்தித்து குழவி சுகமுற்றவுடன் துவராடையணிந்து ஆண்டவனுக்கடிமை என்று ஆண்பிள்ளைகள் மடத்திற் சேர்த்துவிடுவதும் பெண்பிள்ளை அதியவத்தையில் இருக்குமாயின் வேம்புமரத் தடியிலிருந்து வேதவாக்கியங்கள் மூன்றையும் விளக்கிய விண்ணவர் முதல்வியை வணங்கி குழவி சுகமுற்றவுடன் மஞ்சள் சரட்டில் ஓர் பொன் பொட்டைக் கோர்த்து கழுத்தில் கட்டி மஞ்சளாடை உடுத்தி அம்மனுக்கு அடிமையென்று பெண்கள் வியாரத்தில் விடுத்து ஞானசாதனம் அடையும்படிச் செய்து அரச தருவென்றும், இந்திரவிழா என்றும், வேம்பு திருவென்றும், அம்மன் விழா என்றும் கொண்டாடி நீதிமார்க்கத்தை நிலைபெறச்செய்து வந்தார்கள்.

உள்ளத்துண்டா மூழதுகண்டோர் / கள்ளத்துண்டக் கைப்பொருள் கொண்டும்
அங்கங்கொண்ட வகவினைகண்டோர் / துங்கங்கண்ட தூளிலுருண்டும்
கலகமுண்டுக் காவாநாவில் / அலகுமிட்டு வம் மைகாவ
லூருள்ளாயி தீபங்கண்டும் / பேருள்வேயின் கண்ணிவியாரம்
போற்றியம்மை பொன்னடி வணங்கி ! யேற்றியெண்ணான் கறமது முந்தை
உண்டி யீய்ந்து உயிரை யோம்பர் / பண்டைகாலப் பாங்கென்றெண்ணி
கூழு மாவுஞ் சோறிங்கொண்டு / யேழைக்கங். கீய்ந்து வளர்ந்தும்
ஊழ்வினையற்று வுள மகிழற்கு / சூழறமென்றே சூட்சியென்றுந்
தேம்பு மாறி தீக்குறிகண்டோர் / வேம்படியம்மை வியாரம் விடுத்து
ஞானசங்கை நாடொரும் வினவி / மோனவரம்பை முற்றுமெழுப்பி
அண்ணலறத்தையருளி / பண்ணவளறத்தை பகர்ந்தனன் பார்த்தன்.

- 1:14; செப்டம்பர் 14, 1907 –

ஔவையார்கோவில் எங்குளதென்று அறிய வேண்டியவர்கள் மாயூரம் முத்துப்பேட்டை ரயில் பண்டி ஸ்டேஷனிலிருந்து தென்கிழக்கில் 7-வது