பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/460

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

450 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சுகவழியைத் தேடாதவன் மனிதனென்னும் பெயரற்று மிருகமென்றே எண்ணப் படுவான், ஆகலின் சுகவழியை நாடுவதே மேலாய தன்மமென்று போதான தன்மததை மேலும் மேலும் போதித்துவருவதாயின் அவன் மதுபான மயக்கமும் அற்று அறிவுந் தெளிவுற்று நாளுக்குநாள் தனது துற்செயல்களை உணர்ந்து தானே சீர்படுவதுடன் தனது சுற்றத்தோருஞ் சீரடைவார்கள் அவனைக் கண்ணுறும் ஏனயக் குடியர்களுஞ் சுகம்பெற்று நல்வாழ்க்கை அடைவார்கள்.

மற்றும் வஞ்சினத்தாலும் சூதாலும் பேராசையாலும் ஏனையக் குடிகளைக் கெடுத்து சீவிப்போனை அடுத்து உன் குடும்பம் ஒன்று பிழைக்க மற்ற குடும்பங்களை வஞ்சினத்தாலும் சூதினாலும் பேராசையினாலுங் கெடுப்பது அழகன்று, மனிதச் செயலன்று, உமக்குள்ள வஞ்சினமும் சூதும் பேராசையும் உம்மெயும் உமது குடும்பத்தையுங் காப்பதுபோல் தோன்றி அதுவே பெருங்கேட்டுக்குக் கொண்டுபோய் விடுவதன்றி மீளா துக்கத்திற்கு ஆளாக்கி விடும்.

ஆகலின் உமது இதயத்துள்ள வஞ்சினஞ்சூது பேராசை முதலிய துற்குணங்களை அகற்றி தேகம் வருந்த பாடுபட்டு உம்மெயும் உமது குடும்பத்தையும் போஷிக்க ஆரம்பிப்பீராயின் இதுவே நன்மார்க்கமென்னும் சுகவழியாகும், இவ்வழி நடப்போரே துக்கம் ஒழிந்து சுகநிலையடைவார்கள் என்னும் மெய்யறத்தை மேலும் மேலும் வற்புறுத்திப் போதித்து வருவதாயின் இதய சுத்தமுண்டாகி அவன் சுகச்சீரடைவதுடன் அவனை அடுத்தோரும் இதய சுகங்கொண்டு சுகமடைவார்கள். மனிதர்களால் போதிக்குந் தன்மத்தை மனிதர்கள் கேட்டு சீர்பெறுவதே மனுதன்மமென்னப்படும். இன்னீதி நெறிகளை எழுதி வைத்துள்ளதே மனுதன்ம நூலென்னப்படும் இந்நீதி நெறிகளுக்கு மாறாய போதனைகளையும் நூற்களையும் அதன்ம போதம் என்றும் அதன் நூற்களென்றுமே கூறப்படும். இதுகண்டு சத்திய தரும வழியில் நடப்பதே அழகாம்.

- 7:41; மார்ச் 18, 1914 –

109. வித்தைகள்

வினா: தற்காலம் இந்தியாவில் தோன்றியுள்ள மதத்தோர்களிற் சிலர் எங்கள் மதசாமிகளும் அடியார்களும் எத்தனையோ மகத்துவமானச் செயல்களைச் செய்திருக்கின்றார்கள் செத்தவர்களை எழுப்பியிருக்கின்றார்கள் உங்கள் பௌத்தமதத்தில் யாரேனும் அவ்வகையான மகத்துவங்கள் செய்ததுண்டோவெனக் கேழ்க்கின்றார்கள் அது விஷயம் எனக்கு விளங்கவில்லை.

பெ. முத்துசாமி, குடியேத்தம்.

விடை: மனிதனாற் செய்யக்கூடிய வித்தைகள் அனந்தமுண்டு அவ்வித்தைகளால் தருமம் சிறப்படையாது. மனிதனை சீலமும் ஒழுக்கமுமே சிறப்படையச் செய்யும். சித்துக்களை விளையாடியவர்கள் யாவரும் சமணமுனிவருட் சித்திப்பெற்றோர்களேயன்றி வேறொருவருங் கிடையா. அவர்களினும் மேலாய சித்துவித்தைகளைக் கையாடினோர் வேறொருவருங் கிடையாதென்பதே திண்ணம்.

இவ்வித்தைகள் யாவற்றையும் பௌத்தர்கள் வெகுவாக மதிக்கமாட்டார்கள். சீலத்தையும் ஒழுக்கத்தையுமே மேலாக மதிப்பர்.

மனிதன் அபூர்வமாய சித்துக்களை விளையாடியபோதினும் அவைகள் யாவுமோர் வித்தையென்றே புத்தபிரான் பிரதம தமிழ் மாணாக்கர் அகஸ்தியராலியற்றியுள்ள செய்யுட்களைக் காண்க.

அகஸ்தியர் விவேக தசபாரதம்

1.சோதியிலெழுந்த திருநிழல்போலும் சொல்லிடாச் சூடனல்போலும் ஆதியிலெழுந்த விருவினை விகர்ப்ப மாய்ந்தறிந் தோதவே சுத்த
நீதியிலெழுந்த வாசமுமனந்த நித்தியவினோதமாஞ் சித்தின்
வீதியிலெழுந்த விந்திரஜாலம் வித்தையென் றறிவதே விவேகம்.

2.மன்னவராதி தருமசிந்தையினால் மறுவுமெய் சுவர்க்கமென் பதமும்
கொண்ணவாரதி கோல்பழிக்குரியகுரல்மணி முதலிய பதமும்