பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமயம் / 37

மையிலிலிருக்கும் வண்டுறைவாள் மாறியம்மன் ஒளவையார்க் கோவிலென்று கல்வெட்டில் எழுதியிருக்கும் அவற்றாலும் அடியிற் குறித்துள்ள பாடலாலுந் தெரிந்துக்கொள்ளலாம்.

ஔவையார் துதி ஒருபோகுமயங்கிசைக் கொச்சகக்கலிப்பா

மாமேவு சோனாட்டு வளஞ்சேரியும் பளநாட்டுத்
தேமேவுவண்டுறைவாள் சேரியெனுந் திருப்பதியில்.

அராகம்

மூதுரையென்றிசைக்கு நின்சொன் முது மறையை நிகர்ப்பதுதான்
யாதுரை யென்றிசைப்பனினி யெவனுரைக்குமி வ்வுலகம்
செல்வழியீதெனஞாலந் தெளிந்திட நீமுனமுறைத்த
நல்வழியே வழியாக நான் மறையு நடக்குமால்,
மிருதிநூ லாகம் நூல் விளம்புவவெலாமுன நீ
கருதியருள் புரிந்துரைத்த கல்லூறியறவுரையால்
எவ்வயினு மெனையவரு மிசைப்பதிடை நிகழ்த்து மொழி
ஒளவையர்வசன மிதென்றறியாதா ருளரேயோ.

இவ்வகை அன்பும் அமைதியும் ஆற்றலுமுற்ற தன்மராட்சியத்தின் வட எல்லை குமானிடர்தேசத்தில் ஓர்வகை மிலேச்ச சாதியார் வந்து குடியேறி யாசக சீவனஞ் செய்துக்கொண்டு வஞ்சினத்தாலும் மித்திர பேதத்தாலும் புத்த தருமங்களை மாறுபடுத்திவந்ததும் இல்லாமல் புத்த தருமத்தைச் சார்ந்தவர்களையும் தாழ்த்தி நிலைகுலையச் செய்யுங்கால் மகமதிய துரைத்தனத்தார் வந்து குடியேறி மிலேச்சர்களின் மித்திரபேதத்தால் மகமதியர்கள் செய்துவந்த இடுக்கண்களுக்கஞ்சி திரிசிரபுறத்திலும் நாகை நாட்டிலுமிருந்து புத்ததருமத்தைப் பரவச்செய்துவந்த தமிழ் வித்துவான்களாகும் பாணர்களும் யாழுடன் இசைகலந்து பாடும் யாழ்ப்பாணர்களும் இலங்கை முதலிய தீவுகளுக்குக் குடியேறினவர்கள் நீங்கலாக மற்றக்குடிகள் மகமதியர் மதத்தைத் தழுவியும் நின்றுவிட்டபடியால் நாகைநாட்டு நாகைநாதர்வியாரத்திருந்த பொன் சிலைகளைத் திருடிகொண்டுபோய் விற்பனைச்செய்து ஸ்ரீரங்கத்துள்ள புத்தமடத்தை மாறுபடுத்தி வேறுவகைக் கட்டிடங்களையும் மதில்களையுங் கட்டிக்கொண்டார்கள்.

இதன்மத்தியில் போர்ட்ச்கீய துரைத்தனத்தார் வந்து குடியேறிய போது வேற்கண்ணி அம்மன் வியாரமும் பாழடைந்து நிலைகுலைந்திருந்தும் வருடந்தோரும் ஆடிமாத பௌர்ணமியில் அம்மனை தெரிசிக்கும்படி தூர தேசங்களிலிருந்து வருங் குடிகள் வழக்கம்போல் வந்தும் திகைத்து நிற்பவர் களைக் கண்ட போர்ட்ச்சுகீய குருக்கள் அதேயிடத்தில் தங்கள் மதக்கோவில் ஒன்றைக்கட்டி அம்மனை சிந்திக்கும்படிச் செய்து அம்மன்பெயரால் தட்சணை வருந் திரவியங்களை தன்மஞ்செய்யாமல் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்கு எடுத்துக் கொள்ளுகின்றார்கள். இதன் சரித்திரபூர்த்தியைத் தெரிந்துக்கொள்ள வேண்டியவர்கள் நாகைநாதர் பொன் விக்கிரகங்களை அபகரித்துக்கொண்ட சங்கதியை சிலாசாசன பதிவின் புத்தகத்திலும் திருமங்கையாழ்வார் சரித்திரப் புத்தகத்திலும் தெரிந்துக்கொள்ளுவதுடன் வேற்கண்ணியம்மன் வியார மாறலை மேற்சொன்னபடி சிலாசாசன புத்தகத்திலும் இலங்காதீவத்து வித்தியாதன சாலையிலுள்ள போர்ட்ச்சுகீயர் சரித்திரத்திலும் தற்காலம் ஆடிமாதந்தோரும் நிரைவேறிவரும் அங்கட்பிரதட்சணவனுபவச் செயல்களினாலும் தெரிந்துக் கொள்ளலாம்.

புத்த, தன்ம, சங்கமென்னும் திரிமணிகளையே திரிசிரமாகக் கொண்ட திரிசிரபுரத்தில் ஸ்ரீ அரங்காமடம் என்றும் அழகாமடம் என்றும் வழங்கிய இந்திரவியாரமும் நாகப்பட்டிண நாகை நாதர் வியாரமும் அம்மன் வியாரமும் மாறுபட்டது போல, தென்னிந்தியாவிலுள்ள இந்திரவியாரங்களையும் அரசு விழாக்களையும் அம்மன் உற்சாகங்களையும் பலவகையில் மாறுபடுத்திக் கொண்டு தன்மத்தைச் சாதித்து வந்தவர்களையும் தாழ்ந்த சாதியாக வகுத்துத் தங்களைச் சார்ந்தவர்களுக்குப் போதித்து வந்ததுமல்லாமல் குடியேறி