பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/485

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 475

22. பருவத்தே பயிர்செய்

பருவத்தே - அந்தந்த தானியங்கள் விதைக்கக்கூடிய காலங்களுக்குக் காத்திருந்து, பயிர் - தானிய விளைவை, செய் - விதைக்க வேண்டு மென்பதாம்.

காரணம் கைப்பொருளுண்டாயின் வேண்டியபோது தானியங்களை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் வேண்டியபோது பருவமென்னும் விளைவுக்குத்தக்கக் காலங்களை வாங்க இயலாது. ஆதலின் பூமியைத் திருத்தி பயிரிடும் ஒவ்வோர் வேளாளனும், பயிர்களை விளைக்கக்கூடிய காலங்களை எதிர்பார்த்திருந்து விளைவிக்க வேண்டும் என்பது கருத்து.

கம்பர் ஏறெழுபது

பருவத்தே கார்த்து நிலம் பண்படுத்தி பயிர்செய்து
உருவத்தாலாயபயன் வுழுதுபயிர் செய்தளிக்கும்
பருவத்தான் வேளாளன் பக்குவத்தா லுல கோம்பும்
திருவத்தான் கோலதையுந் தேற்றுங்கோல் தாக்கோலே.

23. மண்பறித் துண்ணேல்

மன்றுபறித்துண்ணேலென்பது மற்றுமோர் ஓலைப்பிரிதி மூலபாடம்.

மண் - அன்னியனுடைய பூமியை, பறித்து - அபகரித்து, உண்ணேல் அதில்விளை பொருளை புசியாதே யென்பதாம்.

மன்று - அன்னியர்பொருளை, பறித்து - அவர்களை யறியாது வவ்வி, உண்ணேல் - புசியாதே யென்பது மற்றும் பாடம்.

இவ்விரண்டுவாசகங்களும் அன்னியனுடைய பொருளையோ, அவனது பூமியையோ, அவனை அறியாது மோசத்தினாலும் களவினாலும் அபகரித்துண்பது அக்கிரமமாதலின் சுத்ததேகத்தை சோம்பலினாலும், களவினாலும், வஞ்சினத்தாலும், வளர்க்காதே என்பது கருத்து. ஈதன்றி அன்னியன் பொருளை அபகரித்து அதினால் சீவிப்போனை மற்றவர்கள் அறிந்தபோது அவனை நெருங்கி சினேகிக்கமாட்டார்கள், அவனே வந்த போதினும் வஞ்சகனென்றஞ்சி தூரவே விலகுவார்கள்.

மேருமந்திர புராணம்

தானத்திற் குறித்துமன்று தன்கிளைக்கீயியற்சால
வீனத்து ளுய்க்கு நிற்கு மெச்சத்தை யிழக்கப்பண்ணும்
மானத்தை யழிக்குந் துய்க்கு மற்றவர்க் கடிமையாக்கு
முனத்து நரகத்துய்க்கும் பிறன்பொரு ளுவக்கின்மாதோ.

24. இயல்பலாதன செயேல்

இயல்பு - தன்னளவில், அலாதன - செய்யக் கூடாதவற்றை, செயேல் - நீ செய்யாதே யென்பதாம்.

அதாவது தன்னா லியலாததும், தான் முன்பின் பாராததும், தன் அனுபவத்தில் வாராததுமாகியச் செயலைச் செய்வதானால் தேகத்தைக் கஷ்டப்படுத்துவதன்றி திரவியத்தையும் நஷ்டப்படுத்தி விடுமென்றுணர்ந்து ஞானத்தாய் இயல்பில்லாதச் செயலை செய்யேல் என்று கூறியுள்ளாள்.

ஒரு மனிதன் ஒருமணங்கு பாரம் ஏற்றக்கூடிய இயல்பு அனுபவமிருக்குங்கால் அவன் இயல்பை உணராது இரண்டு மணங்குள்ள பாரத்தை எடுத்துச் செல்லவியலுமோ ஒருக்காலும் இயலாது. எடுக்கலா மென்னுந் திண்ணத்தால் எடுத்துச்சென்று கால்கழுத்து முறிந்துவிழுவது திண்ணமாகும். ஆதலின் இயலுவதைச் செய்து இயலாததை யகற்ற வேண்டும் என்றுரைத்தது.

25. அரவமாட்டேல்

அரவம் - சீரலுள்ள விஷப் பாம்புகளை, ஆட்டேல் - மற்றவர்கள் மிரளுவதற்காக விளையாடிக் காட்டாதே யென்பதாம்.

துஷ்டர்களின் சவகாசமும், குடியர்களின் இணக்கமும், பாம்புகளின் பழக்கமும், எவ்வகையானுந் துன்பத்திற்கு ஆளாக்கி விடும். ஆதலின் கெட்டவஸ்து வென்றறிந்தும் இதனை அருந்தலும் கொடிய ஜெந்துக்களென்று