பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/490

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

480 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கொள்ளுவாயாயின், கைவிடேல் - அவற்றை நழுவ விடாதே யென்பதாம்.

அதாவது நீவிர் புசித்த அவுடத்தினால் வியாதி நீங்கிவரும் குணத்தை சுகநிலையில் காண்பாயாயின் அதை கைவிடாமல் புசிப்பாயாக.

புசித்துவரும் பதார்த்தங்களில் சுகநிலை தோற்ற, குணமுண்டாயின் அவற்றையும் கைவிடேல்.

நீவிர் ஆதுலர்க்கு அளிக்கும் அன்னதானத்தாலும், அறஹத்துக்கு அளிக்கும் போஷிப்பினாலும், அன்னியரைக் காக்கும் ஆதவினாலும், உமக்குண்டாய சுகுணநிலையால் உற்றச் செயலைக் கைவிடேல்.

உம்மால் மற்றவர்களுக்குப் போதிக்கும் நற்போதக விருத்தியால் தாமும் அப்போத நிலையினின்று சொற்சுக்குணங்காண்பீராயின் அவற்றையும் கைவிடேலென்பதாம்.

தனக்கும், பிறருக்கும் சுகுண முண்டாகச் செய்தல் நியாயகுணமும், தனக்கும் பிறருக்கும் அசுகுணம் உண்டாகச் செய்தல் தீயகுணமுமாதலின் எக்காலும் தீயகுணங்களை அகற்றி நியாய குணங்களை நிறப்புவதே நீதிநெறியினிலைகளாம் நீதிநெறி நிறைந்தவர்களையே மக்கள் எக்காலும் நாடிநிற்பர்.

அறப்பளீசுரசதகம் - குணங்காண் குறி

கற்றோர்களென்பதை சீலமுடனே சொலுங் கனவாக்கினா
லறியலாம்
கற்புளோரென்பதை பார்க்கின்றபார்வையொடு கானடையினாற் காணலாம்
அற்றோர்களென்பதனை யொன்றினும் வாரா வடக்கத்தினா லறியலாம்
அறமுளோரென்பதைப் பூததயையென்னுநிலையதுகண்டு தானறியலாம்
வித்தோங்கு பயிரை கிளைத்துவரு துடியினால்
விளையுமென்றே யறியலாம்
வீரமுடையோரென்ப தோங்கிவரு தைரிய விசேஷத்தினா லறியலாம்
அத்தர் குணத்தினால் குலநலந் தெரியலாம் அண்ணலெம தருமெய்மதவேள்
அநுதினமு மனதிநினை தருசதுர கிரிவளரறப்பளீ சுரதேவனே.

தனக்குண்டாய குணத்தையும், ஏனையோர் குணத்தையும் ஆராய்ந்து அதன் சுகுணத்தை அறியவேண்டில் ஓர் குடும்பத்தையே குலமென்று கூறுவர். அக்குடும்பத்தோர் ஊர்குடி கெடுப்போரும், வஞ்சினத்தோருமாயிருப்பார்களாயின் அக்குடும்பத்தில் பிறக்கும் பிள்ளைக்கும் அத்தீயகுணங்கள் உண்டாகும்.

அத்தகைய தீயகுணங்களாலும், செயல்களாலும் அவர்கள் அடையும் துக்கத்தின் பேரவாவாலும் கண்டறியலாம்.

மூதுறை

நீரளவே யாகுமாம் நீராம்பல் தான்கற்ற / நூலளவே யாகுமாம் நுண்ணறிவு - மேலைத்
தவத்தளவே யாகுமாம் தான்பெற்ற செல்வங் / குலத்தளவே யாகுங் குணம்.

குலமென்னும் ஓர் குடும்பத்தில் வஞ்சின மிகுத்திருக்குமாயின் அக்குலத்து சிறுவர்களுக்கும் அக்குணமே மிகும் குலமென்னும் ஓர் குடும்பத்தில் பொய்யும், பொறாமெயும் நிறைந்திருக்கின் அக்குலத்து சிறுவர்களுக்கும் அக்குணமேமிகும்,

குலமென்னும் ஓர் குடும்பத்தில் பொருளாசை, குடிகெடுப்பு, களவு மிகுந்திருக்குமாயின் அக்குலத்து சிறுவர்களுக்கும் அக்குணங்களே மிகும். (சில வரிகள் தெளிவில்லை)

37. கூடிப்பிரியேல்

கூடி - ஒருவரை நேசித்து, பிரியேல் - அவரைவிட்டு நீங்காதே என்பதாம்.

அவரவர்களுக்குள்ள தீயகுணங்களையும் நியாயகுணங்களையும், நன்காராய்ந்து நியாயமிகுத்தோர்பால் நேயம்புரிந்து அவர்களைக் கூடிப்பிரிவதாயின் தீயகுணநிலையே நியாய குணத்தோடு நிலைக்கவிடாது அகற்றியதென்பது கருத்தாகும்.

ஆதலின் நல்லோரை அடுத்து அவர்களுடன் கூடி நல்லுணர்ச்சி மிகுங்கால் அவர்களை விட்டுப் பிரியேலென்று கூறியுள்ளாள். (சிலவரிகள் சிதைந்து போயின)

38. கெடுப்பதொழி

கெடுப்பது - மற்றோர்குடிக்கு கேடுண்டாக்குதலை, ஒழி - அகற்றிவிடும் என்பதாகும். கெடு எண்ணத்தையும் கெடு தொழிலையும் ஒழித்து வாழ