பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/514

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

504 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சூளாமணி

மிக்கெரி சுடர்முடி சூடிவேந்தர்க / டொக்கவரடி தொழத்‌ தோன்றுந்தோன்றலா
யக்கிரிபெருஞ்சிறப்‌ பெய்தியாயிடை / சக்கரப்பெருஞ்செல்வன்‌ சாலைசார்த்ததே.

சீவகசிந்தாமணி

கினவுனர்‌ கடந்த செல்வன்‌ செம்மல ரகலநாளை.

1. அன்னையும்‌ பிதாவும்‌ முன்னறி தெய்வம்‌

அன்னையும்‌ - தாயாரும்‌, பிதாவும்‌ - தகப்பனாரும்‌, முன்‌ - ஆதியாகவும்‌ முன்னிலையாசவும்‌, அறி - காணக்கூடிய, தெய்வம்‌ - கடவுளர்களென்பதாம்‌.

அதாவது குழவியாகத்‌ தோன்றியகால்‌ அமுதூட்டி சீராட்டியவளும்‌ அ௮ன்னமூட்டி பாராட்டியவளுமாகிய தாயாரும்‌, சேயையுந்‌ தாயையும்‌ ஆதரித்து வந்த தந்தையும்‌, காப்பு, இரட்சையிரண்டிலும்‌ முதற்கடவுளாகத்‌ தோன்றியுள்ளபடியால்‌ அவர்களையே கண்ணிற்கண்ட முதல்தெய்வமென்று கூறியுள்ளாள்‌.

2. ஆலயந்தொழுவதுசாலவுநன்று

ஆலயம்‌ - முதல்தெய்வமாகக்‌ காணுந்‌ தந்தை தாயரை மனோவமைதிபெற, தொழுவது - வணங்குவது, சாலவும்‌ - எக்காலும்‌, நன்று - சுகமென்பதாம்‌.

அதாவது தந்‌தை தாயரை தெய்வமாகக்‌ கொண்டவன்‌ அவர்கள்‌ காப்பையும்‌, இரட்சையும்‌ நன்றியறிந்து அவர்க்‌ கன்பான ஆதரணை இதயத்து ஊன்றி வணங்கியும்‌ அவர்களை அன்புடன்‌ போஷித்தும்‌ வருவானாயின்‌ அச்செயலைக்‌ கண்ணுற்றுவரும்‌ இவனது மைந்தனும்‌ அன்னை தந்தையரை தெய்வமெனக்‌ கொண்டு ஆலயந்தொழுதுவருவான்‌. அங்ஙனமின்றி அன்னையையும்‌, பிதாவையும்‌ அன்புடன்‌ போஷித்தும்‌ ஆலயம்பெறத்‌ தொழுவதைவிடுத்து கல்லையுஞ்‌ செம்பையுந்‌ தொழவேண்டுமென்பது கருத்தன்றாம்‌.

பட்டினத்தார்‌

சொல்லினுஞ்‌ சொல்லின்முடிவிலும்‌ வேதச்‌ சுருதியிலும்‌
அல்லினு மாசற்ற வாகாயந்தன்னிலு மாய்ந்துவிட்டோர்‌
இல்லினும்‌ அன்பரிடத்திலு மீசன்‌ இருப்பதல்லால்‌.
கல்லினுஞ்‌ செம்பிலுமோயிருப்பானென்‌ கண்ணுதலே.

கடவுளந்தாதி

வீண்பருக்‌ கெத்தனைச்சொன்னாலும்‌ பொய்யது மெய்யென்றெண்ணார்‌
மாண்பருக்குப்‌ பொருளாவதுண்டோ மதுவுண்டு வெறி
காண்பரைக்‌ கும்பிட்டு கல்லையுஞ்‌ செம்பையுங்‌ கைதொழுது
பூண்பவர்‌ பாதக பூதலத்தொல்லை பிடித்தவரே.

என்று மகாஞானிகள்‌ கூறியுள்ளவற்றை நாம்‌ பின்பற்றவேண்டியதன்றி அஞ்ஞானிகளின்‌ கருத்தை பின்பற்றலாகாதென்பது கருத்து.

பாலி பாஷையில்‌ ஆலயமென்றும்‌, ஆவிலயமென்றும்‌, மனோலய மென்றும்‌ வழங்கும்‌ வாக்கியங்கள்‌ மூன்றும்‌ ஒருபொருளைத்தரும்.

ஒளவைக்குறள்‌

வாயுவழக்க மறிந்து செறிந்தடைங்கில்‌ / ஆயுட்‌ பெருக்கமுண்டாம்‌.
வாயுவினாலய வுடம்பின்‌ பயனே / ஆயுவி னெல்லையது.

3. இல்லறமல்லது நல்லறமன்று

இல்லறம்‌ - மனையாளுடன்‌ கூடி வாழும்‌ வாழ்க்கையில்‌ மனமொத்து வாழ்தலே நல்லறமெனப்படும்‌, அல்லது - அவ்வகையல்லாதது, நல்லறமன்று - நல்லற மென்பதற்று பொல்லறமென்று கூறுதற்கேதுவுண்டாம்‌.

இல்வாழ்க்கையில்‌ மனயாளனும்‌, மனயாட்டியும்‌ மனமொத்து வாழ்தலே இல்லறமென்னும் நல்லறமாவதுடன் இகவாழ்க்கையிலும், சுகவாழ்க்கைப் பெறுவார்களென்பது கருத்து.

மனமொத்துவாழும்‌ இல்லாளின்‌ வாழ்க்கைப்பெற்றவன்‌ துறந்த: பெரியோர்களுக்குந்‌, துறவாசிரியோர்களுக்கும்‌, மறந்திரந்த மக்களுக்கும்‌