பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 / அயோத்திதாசர் சிந்தனைகள்


தந்தை தாய் பந்து மித்திரர் திரவியம் வீடுவாசல் முதலிய யாவற்றும் நிலையற்ற தாதலின் அதனை நீங்கள் நிலையென்று நம்பாமல் எச்சரிக்கையில் நடவுங்கள், எச்சரிக்கையில் நடவுங்கள்: காமக்குரோத வஞ்சின முதலிய திருடர்கள்.

உங்கள் தேகங்களுள் நுழைந்துஞான மென்னும் இரத்தினத்தை அபகரிக்கும் வழிதேடுகிறார்கள் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் எச்சரிக்கையாயிருங்கள் எச்சரிக்கையாயிருங்கள்!

ஆசையென்னும் பாசத்தால் கட்டுப்பட்டு பூர்வகருமானு சாரத்தினால் பல சிந்தனையுள்ளவர்களாய் ஆயுளைக் குறைத்துக் கொள்ளுகிறீர்கள். இனியேனும் அவ் வகையாசாபாசத்தில் அதியவாக் கொண்டழுந்தாமல் எச்சரிக்கையாயிருங்கள், எச்சரிக்கையாயிருங்கள்!

பிறப்பதுந்துக்கம் இறப்பதுந்துக்கம் பொருளை சம்பாதித்துந் துக்கம் அதைக்காத்தலுந் துக்கம் அது அழிதலுந்துக்கம் இத்துக்கமானது மாறாமல் அடிக்கடி நேர்ந்துக்கொண்டிருக்கின்றது. இதற்குக் காரணம் சமுசாரம் என்னும் பெருங் கடலாதலின் எச்சரிக்கையாயிருங்கள், எச்சரிக்கையாயிருங்கள்!

என்று நிதமும் போதித்துவந்த வாக்கியங்களை அரச வாக்கியம் என்றும், மடாதிப் குருவாக்கியம் என்றும், உயர்ந்த நீதிவாக்கியம் என்றும் கொண்டாடி சுத்தசீலமுற்றது மன்றி திருப்பாணரை என்றும் மறவா தியானத்தில் வைத்திருந்தார்கள்.

அக்கால் மதக்கடைப் பரப்பி சீவனஞ்செய்வோர் இடுக்கங்களினால் புத்தசங்கத்தோர் நசிந்து பலவிடங்களிற் குடியேறிவிட்டபோது அவர்கள் வியாரங்களைக் கைப்பற்றிக்கொண்டு தங்கடங்கள் மதக் கோவில்கள் என்று மாற்றிக் கொண்டதுமன்றி சங்கத்தோர்களையும் பறையர்களென்று தாழ்த்தி விலகவைத்தவர்கள் ஆதலின், திருப்பாணர் சிறப்பையும் அவர் நீதிகளை மறவாமலிருந்தக் குடிகளின் மனதையும் மாற்றுவதற்காய் திருப்பாணர் என்னும் ஓர் பறையனிருந்தான், அவன் ஊரைக்காவல் வரும்போது சில நீதிகளைச் சொல்லிவந்ததுமன்றி எங்கள் சுவாமிக்கும் அன்பனாகிவிட்டபடியால் ஆழ்வார்களில் ஒருவனாகத் திருப்பாணாழ்வார் என மாற்றி அப்பெயரின் ஆதரவைக் கொண்டு தங்கள் மதக்கடையைப் பரப்பிவிட்டார்கள்.

சிவசமயத்தோரென்பவர் நந்தன் என்னும் புத்ததன்ம அரசனைப் பறையனென்று தாழ்த்தி சிலக் கட்டுக்கதைகளை ஏற்படுத்திவிட்டது போல் விஷ்ணு சமயத்தோர் என்பவர் பாணவம் மிஷத்தரசனை திருப்பாணரென்னும் பறையனென்று தாழ்த்தி சிலக் கட்டுக்கதையை ஏற்படுத்திக் கொண்டார்கள்.

புத்த தன்மத்தைச் சார்ந்த அரசர்களையுஞ் சங்கத்தோர்களையுந் தாழ்த்தி அவர்கள் சரித்திரங்களையும் மாறுபடுத்தியதுமன்றி புத்தசங்கத்தோர் நூற்களிலுள்ள வாக்கியங்களையும் மாறுபடுத்தி வைத்திருக்கின்றார்கள்.

பாகுபலி நாயனார், மார்க்கலிங்க பண்டாரம் இவர்கள் கைகளிலிருந்த ஏட்டுப்பிரிதிக்கும் மணிமேகலை, நன்னூல், சீவகசிந்தாமணி, வீரசோழியம் மற்றுமுள்ள சமணர் நூற்களில் சாக்கையர் சாக்கையர் என்னும் வார்த்தைகள் அன்னியரிடமுள்ள நூற்களில் சாவகர், சாவகர் என்று எழுதிவைத்திருக்கின்றார்கள். மலர்கலியுலகத்து மலர்கலியுலகத்து என்னும் வாக்கியங்களை மலர்தலையுலகத்து மலர்தலையுலகத்து என மாற்றி வரைந்துவைத்திருக்கின்றார்கள்.

அடியிலுள்ளப் பாடல்களின் பேதங்களாற் காணலாம். பாகுபலி நாயனார், மார்க்கலிங்க பண்டாரம் இவர்களேட்டுப்பிரிதிகள்.

மணிமேகலை

சாக்கைய ராளுந் தலைத்தார்வேந்தன் / ஆக்கையுற்றுதித்தன னாங்கவன்றானென.
நெடியோன் குன்ற வாரசாரண / ரடியார்தான வமரர்களுலகக்
காவல்கொண்ட கற்பகசீலன் / மாவலிபெருமான் சீர்புகழ் திருமகள்
சிதாதகை யென்னுந் திருத்தகுதேவி / போதவிழ்பூம்பொழில் புகுந்தனன்புக்தி.

அன்னியர் கையேட்டுப் பிரிதிகள்.

சாவகமாளுந் தலைத்தார்வேந்த / னாவயிற்றுதித்தன னாங்கவன்றானென
நெடியோன் குறளுரு வாகநிமிர்ந்து / தன்னடியிற்படி யடக்கியவந்தா