பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/524

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

514 / அயோத்திதாசர் சிந்தனைகள்

33. சேமம்புகினுஞ் சாமத்துறங்கு

சேமம் - சுகசீர், புகினும் - அடைந்திருப்பினும், சாமத்து - ஐந்து நாழிகைவரையினும், உறங்கு - நித்திரை செய் யென்பதாம்.

அதாவது யாதாமோர் தொழிலுமின்றி சுகசீரடைந்திருப்பினும், சோம்பலால் அதிக ஒறக்கத்திற்கு இடந்தரல் ஆகாதென்பது கருத்து.

34. சையொத்திருந்தா லையமிட்டுண்

சையத்தோர் - தன்னையறியும் சாதனைநிலையோர், இருந்தால் - தோற்றுவாராயின், ஐயம் - அவரொடுக்கத்தை யறிந்து, இட்டுண் - முன்பு அவருக் கன்ன மளித்து நீ யுண்பா யென்பதாம்.

பாலியில், சைவர், தன்னை ஆராய்வோர், சைனர், சினமற்றோர், தன்னை யறிந்தோரென்னப்படும்.

அகப்பேய்சித்தர்

சைவமாருக்கடி யகப்பே தன்னையறிந்தவர்க்கே ,
சைவமானவிட மகப்பே தாணாக நின்றதடி.

35. சொக்கரென்பவ ரத்தம்பெறுவர்

சொக்கர் - சகல பாசபந்தங்களையுங் களைந்த சுயம்பு, என்பவர் - என்று சொல்லத் தகுந்தவர், அத்தம் - நிருவாணமென்னு முத்தி நிலையை, பெறுவர் - அடைவர் யென்பதாம்.

அதாவது சருவ குற்றங்களையும் அகற்றியவர், களங்கமற்ற நெஞ்சினர், மனமாசு ஒழிந்தவர், சுயம்பு, சொக்கர் என்று சொல்லும்படியான நிலையை வாய்த்தவர்கள் அத்தமாம் வீடுபெற்று பிறவி துக்கத்தை ஒழித்தவர்கள் என்பது கருத்து.

சுயம்புநிலையால் புத்தரை சொக்கநாத ரென்றும், பிறவியற்ற நிலையால் புத்தரை அத்தனென்றும் வழங்கிவருகின்றார்கள். அதுகொண்டே நமது ஞானத்தாய் அகக் களிம்பற்று சொக்கமானவர் அத்தம் பெறுவரென்று கூறியுள்ளாள். சொக்கமென்னு மொழி சுவர்க்க மென்னும் மொழியினின்றும், அத்தமென்னும் மொழி முடிவாம் வீடுபேற்றினின்றும் தோற்றியவைகளாம்.

36. சோம்பரென்பவர் தேம்பித்திரிவர்

சோம்பர் - யாதொரு தொழிலுமற்ற சோம்பேரி, என்பவர் - என்றழைக்கப்பெற்றவர்கள், தேம்பி - துக்க மதிகரித்து, திரிவர் - அலைந்து கெடுவாரென்பதாம்.

அதாவது மனித உருவெனத் தோன்றி ஓர் தொழிலின்றியும், யாதாமோர் முயற்சியின்றியும் தேகத்தை அசையாது சோம்பலில் இருத்தியுள்ளவன் உண்ண உணவிற்கும், உடுக்க உடைக்குமின்றி வீதிகடோருந் திரிந்து பசியின் கொடூரத்தாலும், துக்கவிருத்தியாலும் நலிந்து கெடுவான். ஆதலின் ஒவ்வோர் மனிதனும் சோம்பலின்றி தேகத்தை வருத்தி சம்பாதித்துண்பதே மனித தோற்றங்களுக்கு அழகாதலின் ஒவ்வோர் மனிதனும் தனக்குள்ள முயற்சியையும், உழைப்பையும் நோக்காது சோம்பித்திரியலாகாதென்பது கருத்து.

37. தந்தைசொன்மிக்கமந்திரமில்லை

தந்தை - தன்னையீன்ற தகப்பனும், தனக்கு நீதிவழிகாட்டியுள்ள சற்குருவாகிய தகப்பனும், சொன் - சொல்லிய மொழிகளுக்கும், சுருதி வாக்கியங்களுக்கும், மிக்க - மேலான, மந்திரம் - ஆலோசினை, இல்லை - வேறில்லை யென்பதாம்.

அதாவது சற்குருவின் திரிபேதவாக்கியங்களாம் நீதிநெறி ஒழுக்கங்களைத் தழுவிவந்த தனது தந்தையால் சொல்லக்கொடுத்துவரும் புத்திக்கும், ஆலோசினைக்கும் மேற்பட்ட மந்திரங்கள் யாது மில்லையென்பது கருத்து.

மற்றப்படி கள் குடியனாகுந் தந்தையும், களவாடுந் தந்தையும், அப்பா கொஞ்சங் கள்ளுக்குடி, அய்யா அவன் பொருளை அபகரித்துவாவென்று சொல்லுஞ் சொற்களை மந்திரங்களாகும் ஆலோசினைகளென்று ஏற்கப்