பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/537

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 527

ஔவையார் அருளிச் செய்த மூன்றாம் வாசகம்

காப்பு

வெற்றி ஞான வீரன் வாய்மெய் / முற்று மறிந்தோர் மூதறிவோரே.

ஞானவெற்றி - அறிவில் ஜெயமுற்றவனாகும் வாலறிஞனாம். வீரன் அதிதீவிரனெனப்புகழ்ப்பெற்ற புத்தபிரானா லோதிய, வாய்மெய் - மெய்வாக்கியங்கள் நான்கையும், முற்றும் - முழுவதும், அறிந்தோர் - தெரிந்துக்கொண்டவர்கள், மூதறிவோரே முற்றுமுணர்ந்த பேரறிவாள ராகுமென்பதாம்.

அதாவது நூன்முகத்து சதுர்முகன் ஓதிய நான்கு வாய்மெயாம் துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவக் காரணம், துக்க நிவாரணமென்னும் சதுர்வித சத்தியங்களையும் குறைவற உணர்ந்தவர்களெவரோ அவர்களே முற்றும் உணர்ந்தவர்களென்பது கருத்து.

நறுந்தொகைநான்கு

பற்றாமுலகப் பற்றினை யறுத்து / பொற்றாமரையிற் பரந்தவன் பகர்ந்த
நறுந்தொகை தன்னால் நற்றமிழ் தெரிந்து / குற்றங்களைவோர் குறைவிலாதவரே.

பற்றாமுலகம் - உலகபாசபந்தக்கட்டாகும், பற்றினை - பாசக்கயிற்றினை, அறுத்து - துண்டித்து, பொற்றாமரையில் - பதுமாசனத்தில், பரந்தவன் - வீற்றிருந்தவன், பகர்ந்த - ஓதிவைத்த, நற்றமிழ் - சிறந்த தமிழ்பாஷையை, தெரிந்து - கற்று, நறுந்தொகையாம் - வாய்மெய் நான்கினையும் உணர்ந்து, தன்னால் - அதனாதரவால், குற்றங்களைவோர் - இராகத் துவேஷமோக மென்னுங் குறுந்தொகையாம் முக்குற்றங்களை யகற்றினோர், குறைவிலாதவரே - சுகவாரிக்கொப்பாம் சகல சுகமும் பொருந்த வமைதியுற்று வாழ்வார் களென்றவாறு.

திரிக்குறள்

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார் / நிலமிசை நீடு வாழ்வார்.

சிலப்பதிகாரம்

அருக ரறிவனருகற்கல்லதென் / இருகையுங்கூடி யொருவழிக் குவியா
மலர்மிசைநடந்த மலரடிக்கல்லதென் / தலைமிசை யுச்சி தானணி பொறாது.

ஞானவாசிஷ்டம்

புண்டரீக வாதனத்தில் / புத்தன் போல் உத்தரமுகனாய்.

1. எழுத்தறிவித்தவன் இறைவனாகும்

எழுத்து - வரிவடிவாம் அட்சரங்களை, அறிவித்தவன் - ஓதிவைத்தவன், இறைவனாகும் - குடி.கள் பால் வரியிறைக் கொள்ளும் ஓரரசனேயாகும்.

அவ்வரசன் யாரென்பீரேல் வீரவாகு, குலவாகு, இட்சுவாகென்னும் சக்கிரவர்த்திகள் மரபிற்றோன்றிய சித்தார்த்தி திருமகனேயாகும். இவ்விறைவன் காலத்தில் பாலிபாஷை வரிவடிவாம் எழுத்துக்களின்றி ஒலிவடிவாம் சப்த மொழியும், அம்மொழிகளோ ஒருவர் சொல்லவும் மற்றொருவர் கேட்கவுமான சுருதிகளாயிருந்தது.

இறைவன் உலகபாசத்தைத் துறந்து அவலோகிதரென்றும், ஐயிந்திரியங் களைவென்று இந்திரரென்றும், நிருவாணநிலை அடைந்தபோது சகலமுந் தன்னிற்றோன்றிய விளக்கத்தால் தான் சுருதியாக ஓதியுள்ள திரிபீடவாக்கியம், திரிபேத வாக்கியமென்னும் கன்மபாகை, அறுத்தபாகை, ஞானபாகையாகிய மூன்று அருமொழிகளும் மறைந்துபோமென்று உணர்ந்து மகடபாஷையாம் பாலியினின்று சகடபாஷையாம் சமஸ்கிருந்தாட்சரங் களையும், திராவிட பாஷையாம் தமிழட்சரங்களையும் இயற்றி வரிவடிவாய்க் கற்களில் வரைந்து கல்வியைக் கற்பித்ததுகொண்டு எழுத்தறிவித்தவன் இறைவனாகு மென்று வற்புறுத்திக் கூறியுள்ளாள்.

தொல்காப்பியம்

மங்காமரபி னெழுத்து முறைகாட்டி / மல்குநீர் வரைப்பினிந்திர னரைந்த