பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/539

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 529

பல்லுயிரெலாந் தன்னுயிர்க்கு நிகரென்றே பகுத்தல் குற்றங் களைத்தல்
துடிபெறு தனக்குறுதி யானநட்பகையின்றி சுகுணமொடு கல்வியறிவு
தோலாத காலமிட மறிதல்வினை வலிகண்டு துஷ்ட நிக்கிரக சௌரியம்
மடைவுபெறு செங்கோனடத்திவருமன்னர்க்கு வழுவாத முறைமெ யிதுகாண்
மயிலேறிவிளையாடு குகனேபுல் வயநீடு மலைமேவு குமரேசனே.

6. வாணிபர்க்கழகு வளர்பொருளீட்டல்

வியாபாரிகளுக்கு அழகு யாதெனில், ஒன்றைக்கொடுத்து மற்றொன்றை மாறுவதில் மிக்கச் செட்டுடையவனாயிருந்து எக்காலத்தில் எச்சரக்கைப் பிடித்துக் கட்டவேண்டியதென்றும் எச்சரக்கை நில வரத்திலும் தராசுகோணா நிலையிலும் தன்செலவழிவுபோக சொற்ப லாபத்திலும் விற்று பொருளை வளர்த்து சருவசீவர்களுக்கும் உதவியுள்ளோராக விளங்குதல் ஒன்றைக்கொடுத்து மற்றொன்றைப்பெறும் வாணிபர்களுக்கு சிறப்பென்பது கருத்து.

குமரேச சதகம் - வணிகரியல்

கொண்டபடி போலும் விலைபேசிலாபஞ்சிறிது கூடிவர நயமுறைப்பார்
கொள்ளுமொரு முதலுக்கு மோசம்வராதபடி குறுகவே செலவு செய்வார்
வண்டப்புரட்டர்தான் முரிவந்து பொன்னடகு வைக்கினுங் கடனீய்ந்திடார்
மருவுநாணயமுளோர் கேட்டனுப்புகினுமவவார்த்தையிலெலாங்கொடுப்பார்
கண்டெழுதுபற்றுவர வதனில்மயிர்பிளவுபோற்கணக்கி லணுவேனும்விடார்
காசுவீணிற் செலவிடா ருசிதமானதற்கனதிரவியங்கள் விடுவார்
மண்டலத் தூடுகன வர்த்தகஞ்செய்கின்ற வணிகர்க்கு முறைமெயிதுகாண்
மயிலேறி விளையாடு குகனேபுல் வயநீடு மலைமேவு குமரேசனே.

7. வேளாளர்க்கழகு வுழுதூண் விரும்பல்

பூமியை திருத்தி பயிர்செய்கிறவர்களுக்கு அழகு யாதெனில், நஞ்சை பூமியை உழுது பயிரிடுங்காலம் ஈதென்றும், புஞ்சை பூமியை உழுது பயிடுங்காலம் ஈதென்றும் நன்காராய்ந்து தான் மழையைவேண்டி ஆகாயத்தை நோக்குவதுபோல் சருவசீவர்களும் தானியத்தை வேண்டி வேளாளனை நோக்குகிறபடியால் பூமியின் பலனைக் கருதுங்கால் ஈகையைப்பெருக்கி சருவசீவர்கள் மீதும் இதக்கமுடையவனாய் ஆதரிக்குஞ்செயலிலிருப்பதே வேளாளர்சிறப்பென்பது கருத்து.

ஏரெழுபது

வெங்கோபக் கலிக்கடந்த வேளாளர் விளை வயலுட்
பைங்கோதி முடிதிருந்த பார்வேந்தர் முடி திருந்தும்
பொங்கோதக் களியானைப் போர்வேந்தர் நடத்துகின்ற
செங்கோலைத் தாங்குங்கோ லேரடிக்குஞ் சிறுகோலே.

8. மந்திரிக்கழகு வரும்பொருளுரைத்தல்

ஆலோசனை கர்த்தனுக்கு அழகு யாதெனில் தனதரசனுக்கு அரிய வாக்கியங்களை விளக்கி தேசத்தை சீர்திருத்தலும் வருங்காலசெயல்களையும் போங்காலச் செயல்களையும் ஆராய்ந்து சேர்க்கவேண்டியவற்றை சேர்த்தும், அகற்றவேண்டியவற்றை அகற்றியும் ஆண்டுவருவதே சிறப்பென்பது கருத்து.

9. தந்திரிக்கழகு தன் சுற்றங் கார்த்தல்

தன்னில் திறமுள்ளவர்களுக்கு அழகு யாதெனில், அத்திறத்தால் தனது சுற்றத்தோரை கார்த்தலே சிறப்பென்பது கருத்து.

10. உண்டிக் கழகு விருந்தோடுண்டல்

உண்ணும்படியான புசிப்புக்கு அழகு யாதெனில், விருந்தினருடன் அன்புடன் புசித்து அன்னத்தாலவர்களைப் போஷிப்பதே சிறப்பென்பது கருத்து.

11. பெண்டீர்க் கழகெதிர் பேசாதிருந்தல்

பெண்களுக்கு முக்கிய அழகு யாதெனில், தனது கணவன் கூறும் வாய் மொழிகளுக்கு எதிர்மொழி கூறாமல் இட்ட ஏவலை இன்பொடு செய்தலே சிறப்பென்பது கருத்து.