பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/541

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 531

22. கொண்டோரெல்லாம் பெண்டிரு மல்லர்

குடும்பத்திற்கு வேண்டுமென்று கொண்டப் பெண்கள் யாவரும் குடும்பிகளாகமாட்டார்கள். காரணம், சிலப்பெண்கள் குடும்பத்தைக் கலைக்கும் வேர்ப்புழுவாகத் தோன்றுவார்கள்.

23. அடினுமாவின்பால் சுவை குன்றாது

பசும்பாலினை சுண்டக்காச்சினும் அதனது சுவையானது குன்றாது என்பது கருத்து.

24. சுடினுஞ் செம்பொன் றன்னொளி கெடாது

சாம்புன தமாம்பொன்னை நெருப்பிலிட்டு மேலும் மேலும் உருக்கினும் அதன் பிரகாசங் குறையமாட்டாதென்பது கருத்து.

25. அரைக்கினுஞ் சந்தணந் தன்மண மாறாது

சந்தனக்கட்டையை நீர் வார்த்து உரைக்கினும் அதன் பரிமளம் மாறாது என்பது கருத்து.

26. புகைக்கினுந் தண்கடல் பொல்லாங்கு கமழாது

குளிர்ந்த சமுத்திர நீரை புகையெழக் கொளுத்தினும் கொடியநாற்ற மெழாது என்பது கருத்து.

27. கலைக்கினுந்தண்கடல் சேறாகாதே

குளிர்ந்த கடல்நீரை எவ்விதங் கலைக்கினும் சேறு காணமாட்டாது. காரணம், அதனதன் செயலும், குணமும் அதனதன் நிலையிற் காணும். அதனால்,

28. பெருமெயும் சிறுமெயுந் தன் செயலாமே

ஓர் மனிதனைப் பார்த்து இவன் பெரியோன் மேன்மகனென்று கூறுவதும், மற்றொருவனைப்பார்த்து இவன் சிறியன் கீழ்மகனென்று கூறுவதும் அவனவன் நற்கரும துற்கருமக் கூற்றாதலின் சகலமும் தன் செயலாலாவதென்பது கருத்து.

29. சிறியோர் செய்த சிறுபிழையெல்லாம்
பெரியோராயின் பொறுப்பதுகடனே

சிறியோராரும் அறியாப் பிள்ளைகள் செய்தக் குற்றங்களை பெரியோராகும் விவேகிகள் பொருப்பதே இயல்பாகும்.

30.சிறியோர் பெரும்பிழை செய்தனராயின்
பெரியோரப்பிழை பொறுத்தலு மரிதே

சிறியோரென்னும் அறியாப்பிள்ளைகள் ஆயினும் பெருங்குற்றங்களைச் செய்து விடுவார்களாயின் அப்பிழையை பெரியோர்கள் பொறுக்கமாட்டார்கள் என்பது கருத்து. அதனால்

31. வாழிய நலனே வாழிய நலனே

ஒவ்வோர் மக்களும் நல்வாழ்க்கையாம் நன்மார்க்க நடையில் ஒழுகவேண்டியதே நலனாதலின் வாழிநலனே என்று வற்புறுத்திக்கூறியுள்ளாள்.

32. நூறாண்டுபழகினு மூர்க்கர் கேண்மெய்
நீர்க்குட்பாசிபோல் வேர்க்கொள்ளாதே

மூர்க்கனெனக் கூறும் பெயர்பெற்ற தேகியுடன் நூறுவருடம் பழகியிருப்பினும் நீரின்மேற் படர்ந்துள்ள பாசைபோல் ஒட்டாநேயத்தில் இருப்பானன்றி நீரினுள் வேரூன்றும் விருட்சம் போல் நிலைக்காக் கேண்மெய் என்பது கருத்து.

33. ஒருநாட்பழகினும் பெரியோர்கேண்மெய்
இருநிலம்பிளக்க வேர்வீழ்கும்மே

பெரியோராகும் விவேகமிகுத்த மேன்மக்களிடம் ஒருநாட் பழகினும்