பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/551

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 541


அவ்வகையாக செத்தமாடெடுப் போமென்னும் இழிந்த செயலைக் கூறியபின்னர் “சாதியில் உயர்ந்தவன்கா ணென்னும்” செய்யுள் தோன்றுமோ.

“செத்ததோர் மாடெடுப்போமென்னும் வாக்கியத்தை அவரே கூறியிருப்பாராயின்” சாதியை சொல்லுகிறேனெனும் பாட்டின் வரிசையில் சேர, சோழ நாட்டிலுள்ள பாவிகள் செத்தமாட்டை தின்னும்படி வதைத்தார்களென்று சத்துருக்களின் செயலைத் துக்கித்துக் கூறுவாரோ.

செத்தமாடெடுப்பது யாதார்த்தமாயின் உலகவுற்பத்தித் தருவில் சீவ செந்துக்களை வதைத்து அதன் மாமிஷங்களைப் புசிக்கலாகாதென்று கூறுவரோ, ஒருக்காலுங் கூறியிருக்கமாட்டார்.

“நான் அந்தஸ்துள்ள சீவனமுள்ளவன் என்றொருவன் கூறி மலமெடுப்பது எனது தொழில் என்பானாயின்” விவேகிகள் அம்மொழியை யாதென்றேற்பர். யாவும் பராயமதப் புறட்டேயாம். வள்ளுவர் வம்மிஷவரிசையில் பூர்வத்தில் நிறைவேறியும் தற்காலம் நிறைவேறிவந்தும், அச்செய்யுளிலும் இருக்குமாயின் விவேகிகள் யாவரும் ஒப்புக்கொள்ளுவர்.

முற்காலத்திலும் இராது தற்காலத்திலும் இராது, ஞானவெற்றி என்னும் 1500 செய்யுளிலுமிராது, நூதனமாகச் சேர்த்துள்ளதை விவேகிகள் ஏற்பரோ ஒருக்காலும் ஏற்கமாட்டார்கள்.

ஏற்பவர்கள் யாரெனில், சாராயத்தைப் பூராயமாகக் குடித்து ஆட்டு மாமிஷம், மாட்டு மாமிஷம், பன்றி மாமிஷம் முதலியதைத் தின்று மதோன்மத்தராகத் திரிபவர்களே ஏற்றுத் தூற்றித் திரிவர். அத்தகையோர் வார்த்தைகளை நீங்கள் ஏற்காது அசுத்த புசிப்பாம் மதுமாமிஷங்களை அகற்றி சீவிக்கக் கோறுகிறோம்.

ஞானவெற்றியிலுள்ளப் பொய்ப்பாடல் யாவுமிராது சுத்தப்பிரிதியைக் கூடியசீக்கிரம் அச்சிட்டு வெளியிடுவோம்.

3:40, மார்ச் 16, 1910

9. பஞ்ச காவியங்களில் ஒன்றாகிய குண்டலகேசி

இக்காவியத்துள் நமக்கு ஒன்பது பாடல் கிடைத்துள்ளது. இதனை நோக்கும் அன்பர்பால் மற்றும் இச்செய்யுட்கள் வேறு கிடைத்திருக்குமாயின் உதவிபுரிய வேண்டுகிறோம்.

கடவுள் வாழ்த்து

முன்றான் பெருமெக்குணின்றான் முடிவெய்துகாறும் நன்றே னினைந்தான் குணமொழிந்தான் தனக்கென்
றொன்றானு மில்லான் பிறர்க்கே யுறுதி சூழ்ந்தா
நன்றே யிறைவ னவன்றாள் சரணங்கணன்றே.

அவையடக்கம்

நோய்க்குற்ற மாந்தர் மருந்தின் சுவை நோக்குகில்லார்
தீக்குற்ற காதலுடையார் புகைத் தீமெயோரார்
போய்குற்ற மூன்று மறுத்தான் புகழ் கூறுவேற் கென்
வாய்க்குற்ற சொல்லின் வழுவும் வழு வல்லவென்றே.

தீவினை யச்சம்

வாயுவினை நோக்கியுள மாண்டவய நாவா
யாயுவினை நோக்கியுள வாழ்க்கையதுவேபோற்
றீயவினை நோக்குமியல் சிந்தனையு மில்லாத்
தூயவனை நோக்கியுள துப்புரவு மெல்லாம்

.

புணர்ச்சிவிழையாமெய்

அனலென நினைப்பிற் பொத்தி
யகந்தலைக் கொண்டகாமக் கனலினை யுவப்ப நீராற்
கடையற வலித்து மென்னார் நினைவிலாப் புணர்ச்சி தன்னால்
நீக்குது மென்று நிற்பார் புனலினைப் புனலினாலே
யாவர் போகாமெய் வைப்பார்.