பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/555

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 545

வடமொழி, தென்மொழிகளின் ஆக்கியோன் யாவரென்பதை திவாகரம், நிகண்டு, தொல்காப்பியம், வீரசோழியம், சிலப்பதிகாரம் முதலிய நூற்களால் தெள்ளறத் தெளிந்துக் கொள்ளலாம்.

தென்மொழியில் நஞ்செழுத்தென்றும், அமுதெழுத்தென்றும் இருவகை அட்சரங்களுண்டு. அவற்றுள் நஞ்செழுத்துக்களின் ஆதாரங்கொண்டு தீராவிடமென்றும், அமிர்தவெழுத்துக்களின் ஆதாரங்கொண்டு தமிழென்றும், இருபெயர்கள் உண்டாயிற்று. இவ்விரு பெயர்பெற்ற பாஷையை அகஸ்தியரால் தென்னாட்டிற் பரவச்செய்தபோதினும் மிகுப் பிரபலமாகப் பரவச்செய்தவள் புத்தசங்க பிக்குணியாகி அம்பிகையென்றும், அறச்செல்வியென்றும், பெயர் பெற்ற ஒளவையேயாகும். அவ்வம்மன் தமிழ் நூற்களுக்கு ஆதரவாயிருந்து மேலும் மேலும் பரவச்செய்தவர்கள் சேர, சோழ, பாண்டியனென்னும் மூவரசர்களே ஆவர். இத்தமிழ்ச் செல்வியை கலைபரவும் அமுதூட்டி செய்யுள் சீராட்டி செந்தமிழ் தாராட்டி, அட்சரா லட்சணங்களாம் ஆபரணம் பூட்டி ஆனந்தமாக வளர்த்துவந்தவர்கள் சமண முநிவர்களாகும் புத்தசங்கத்தோர்களேயாவர். ஆதலின் சிவனென்னும் பெயர்பெற்று தமிழினை உண்டு செய்த வரும் புத்தர், அவற்றை மேலும் மேலும் பலகலைகள் தோன்ற விருத்தி செய்தவர்களும் பௌத்தர்களேயாகும். இதற்குமாறுபட்ட சிவனது யதார்த்த சரித்திரம் அவரது பிறப்பு வளர்ப்புடன் வேறேதேனும் இருக்குமாயின் சரித்திர ஆதாரம், சிலாசாசன ஆதாரம், செப்பேட்டின் ஆதாரங்களுடன் வெளிவரலாம்.

4:14, செப்டம்பர் 14, 1910

13. திரிக்குறளில் உள்ள காமத்துப்பால்

மயிலை எப்.எம் என்னும் அன்பரே, தாம் வினவிய சங்கை விசேஷித்ததேயாம். ஆயினும் தாம் வினவியுள்ள நாயனார் திரிக்குறளிலுள்ளக் காமத்துப்பாற் செயல் மெய்யா பொய்யா என்பதை உணராது வினவியது வீணேயாம். அதாவது, சிற்றின்பமென்னும் காமிய நிலை சகல மக்களுக்கும் இயல்பில் தோன்றும் இன்பமென்னப்படும். அத்தகைய இன்ப நுகர்ச்சி சருவ மக்களுக்கிருந்தும் அதன் புலநிலையறியார்கள். புலன் தென்படலாம், பேரின்பம் பெற்ற தென்புலத்தோரே அவற்றை அறிவர்.

ஆதலின் தென்புலத்தோராம் நாயனார் காமத்துப்பாலாம் சிற்றின்ப நுகர்ச்சியைத் தெள்ளற விளக்கிப் பேரின்பத்தைத் துலக்குவதற்காய் கண்ணும், மூக்கும், செவியும், நாவும், உடலும், ஓர் பெண்ணுருவை நாடி வெளிதோன்றி நுகர்வது சிற்றின்ப நுகர்ச்சியாதலின்,

கண்டுகேட்டுண்பிர்த் துற்றறியுமைம்புலனு
மொண்டொடி கண்ணேயுள.

வென்றும் யேக சிற்றின்பத்தில் யேகபாவனையாய் வெளிதோன்றியது போல் ஐம்புலனும் யேக பேரின்பத்தில் யேகபாவனையாய் உள்ளடங்குமாயின் தாமரைக்கண்ணனுலகாகும் புத்தேளுலகில் சிற்றின்பத்திற்கு மேலாய பேரின்பத்திற் சதா சுகிப்பனென்று கூறுவதற்காய்

தாம் வீழ்வார்மென்றோட் டுயிலினினிதுகொ
றாமரைக்கண்ணா னுலகு.

காமமீறி ஐம்புலனால் ஓடிய கண் அவ்வைம்புலனும் ஒடுங்கிய பேரின்ப சுகத்தையும் ஆற்றலையும் விளக்கியிருக்கின்றார்.

பொறிவாயிலைந்தவித்தான் பொய் தீரொழுக்கம்,
நெறி நின்றார் நீடுவாழ்வார்.

காமத்தால் சிற்றின்பம் நுகர்ந்து சீர்கெடுவதினும் என்றுமழியா பேரின்பம் நுகர்ந்து நித்திய வாழ்வடைவதே அழகாதலின் சிற்றின்பத்தை செவ்விதில் விளக்கி பேரின்பம் அளாவும் போக்கில் விடுத்திருக்கின்றார். உள்ளதை உண்மெய்க்குத்தாரமாய் விளக்குவதே புத்ததன்மமாகும். உள்ளது ஒன்றிருக்க இல்லாததைக்கூட்டிப் பொய்யை மெய்போல் பேசுவது அபுத்ததன்மமாகும். கொக்கோகரும் மதனனூலாரும் உலகமக்கள் நோயின்றி வாழ்க நூலெழுதினார்கள். அவர்கள் கருத்தை உணராது காவிய விருப்பம் மிகுத்து கெட்டு