பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடைந்தபின்னர் தன்மெய்ப்போல் ஏனைய மக்களும் அச்சுகத்தை அடைந்து நித்திய வாழ்க்கையைப் பெறுவான்வேண்டி சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழினையும் ஏற்படுத்தியுள்ளார். அஃதெவ்வா றென்னில், உடலுயிரென்னும் உண்மெய், புறமெய் இவற்றினை கண்டடைவதற்கே வரிவடிவாம் அட்சரங்களை வகுத்து உயிரெழுத்தென்றும், மெய்யெழுத்தென்றும், ஆவியென்றும், உடலென்றும், நஞ்செழுத்தென்றும், அமுதெழுத்தென்றும், இவ்வெழுத்துக்களுக்கெல்லாம் ஆதி எழுத்தாயது அகார பேருயிரென்றும் வகுத்து அவ்வட்சரங்களை வாசித்துணர்ந்து கலை நூல் தெரிந்தபின்னர் தனதுடலுயிரினது பாகுபாடுகளைக் கண்டு தனக்குள்ள நஞ்சாகும் இராகத் துவேஷ மோகங்களை சேரவிடாதகற்றி தனக்குள்ள அமுதாகும் சாந்தத்தைப் பெருக்கி அகராட்சரமாகியப் பேருயிராம் அண்ணாவினால் உண்ணாவின் அமுதுண்டு அழியா பாக்கியத்தனாகி புறமெய் அகற்றி உண்மெய்யில் நிலைத்து நன்மெயாம் தன்மகாய ததாகதனாகின்றான்.

இராகத் துவேஷ மோகங்க ளுடைத்தாய தேகமே தின்மெ யுடைத்தாய தென்றும், சாந்தம், அன்பு, ஈகைக ளுடைத்தாய தேகமே நன்மெயுடைத் தாயதென்றுங் கூறப்படும். இத்தகைய செயல்கொண்டே தெய்வப்பெயர் வகுப்பில் “கடவு, டே, முநி, நன்மெய்ப்பே” ரென வகுத்துள்ளார்கள். உயிர்மெய் யெழுத்தினது ஆதாரங்களைக்கொண்டே உடலுயிரின் பாகுபாடுகளையும் அதனதன் குணாகுணச் செயல்களையும் ஆய்ந்து நன்மெய்க் கடைபிடிப்பதற்கே.

சீவப்பிராணிகளை துன்பஞ்செய்யாமெய், எக்காலும் பொய்சொல்லா மெய், அன்னியர்பொருளை அபகரிக்காமெய், அன்னியரது தாரத்தை இச்சிக்காமெய், மயக்கமுள்ள மதுபானங்களை யருந்தாமெய், ஆகிய சுத்த தேகிகளாக வாழும்படி வகுத்து வைத்திருக்கின்றார்கள். சுத்ததேகியாய வாழ்க்கைப்பெயரே நன்மெய்ப்பெய ரென்னப்படும்.

இவற்றுள் அட்சரமெய்யையும், உடலையும், அட்சர உயிரையும், உண்மெய்யையும், அட்சர எண்பகுப்பையும், எண்குணத்தையும், அட்சரவுடலுயிர் முப்பதினையும், உடலுயிரினது குணம் முப்பத்திரண்டையும், அட்சர புணர்ச்சி விகாரங்களையும், உடலுயிர் புணர்ச்சியின் கேடுபாடு களையும், அகரவட்சர பேருயிரின் குறிப்பையும், நாவினது நால்வாய்மெய் சிறப்பினையும் ஆய்ந்துணருவோருக்கே உண்மெய் புறமெய் என்பதின் விகற்பங்களும், நன்மெய் தீமெயென்னும் பேதாபேதங்களும் நன்குவிளங்கும்.

புத்த தன்ம இலக்கியங்களையும், புத்த தன்ம இலக்கணங்களையும் உணர்ந்தவர்களுக்கே இவ்வட்சரபேதங்கள் நன்குவிளங்குமேயன்றி ஏனையோருக்கு விளங்காவாம்.

நல்-நோக்கம் - நன்னோக்கம் என்பது நற்காட்சியைப் பொருந்தியதாகும்.

நல்-முயற்சி - நன்முயற்சி என்பது நல்லூக்கத்தைப் பொருந்தியதாகும்.

நல்-நூல் - நன்னூலென்பது நல்லறிவை

விருத்திசெய்யுங் கலை நூலில் ஒன்றாகும்.

நல்-மெய் - நன்மெ யென்பது களங்கமற்ற உண்மெயாம் தன்மகாயங்களில் ஒன்றதாகும்.

இத்தகைய சிறந்த ஞானார்த்தத்தைக் கொடுக்கக்கூடிய பகுபத மொழியை நன்மையென வரைவதாயின், நல்லஞ்சனம், நல்கருப்பு, நல்லாடு எனும் பொருளைத்தருமெயன்றி “கடவுடே முநிநன்மெய் ப்பே” ரென்னும் ஞானார்த்தந் தருமோ ஒருக்காலுந் தாராவாம்.

இத்தியாதி மொழிபேதங்களுக்குள்ளும் “பொம்மை” யென வழங்கு மொழிக்கு இலக்கணந் தெரிந்துகொள்ளுவார்களாயின் நன்மெயென்னு மொழியினது இலக்கணம் நன்கு விளங்கிப் போம்.

அதாவது, “பொம்மெய்” என்பதற்கு இலக்கணம் பொய்மெயென்று கூறப்படும். அதாவது மண்ணினாற் செய்த பொய் தேகம், மரத்தினாற் செய்த பொய்தேக மென்பதாகும். இத்தனையே பொம்மை, பொம்மையென