பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/565

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 555


"மங்கலஞ்சொல்லெழுத்தெண்ணியதானம் வருமிருபாற், பொங்கிய வுண்டிவருணம் பகுத்திடி நாட்பொருத்தந், தங்கியநாட்கதி யெண்கணமென்று தமிழ்தெரிந்தோ, ரிங்கிவை பத்து முதல் மொழியாமென் றியம்புவரே" இவ்வகைப் பாடுவதில் அமுதெழுத்து அமைத்துப் பாடவேண்டியதே சிறப்பென்பதுவிதி.

"மதித்த க ச த ந ப மவ்வொடுவவ்வு, முதித்தமைந்த நாற்குற்றியிருந் - துதித்தமுதென், றாதிமொழிக்குந்தசாங்கத் தயலுக்குந், தீதில வேயென்றார் தெரிந்து” என்னுந் தசாங்கத்துள் உண்டி பொருத்தமே அமுதெழுத்துக்களையும் நஞ்செழுத்துக்களையும் விளக்குகின்றபடியால் யாப்பிலக்கணங்கற்ற பெரியோருக்கே நஞ்செழுத்தென்னுந் தீராவிட அட்சரங்களும், அமுதெழுத் தென்னுந் தமிழட்சரங்களுங் கண்டு அப்பாஷைக்குத் திராவிடமென்றும் தமிழென்றும் வழங்கலாயினர்.

தீராவிடமென்னு மொழியே குறுக்கல் விகாரத்தால் திராவிடம் திராவிடமென வழங்கலாயிற்று.

திராவிடமென்பதே தமிழென்பதற்குச் சூத்திர ஆதாரங்கள் இருப்பதுடன் வடநாட்டோரும் சிங்களதேசத்தோருந் தமிழை திராவிடபாஷையென்றும், தமிழ் பாஷைக்குரியோரை திராவிடர்களென்றும் வழங்கி வருவதை நாளது வரையிற் காணலாம்.

இத்தேசப்பெயரையும் வேதாகம புராணங்களையும் கடவுளர்களையும் புறட்ட ஆரம்பித்துக் கொண்டவர்கள் திராவிடமென்னும் பாஷையையும் புறட்டப்பார்க்கின்றார்கள். அப்புறட்டு தமிழினுக்குரியோர்முன் பிறழாவாம்.

6:26, டிசம்ப ர் 4, 1912

21. தமிழ் கவிகள்

வினா: நமது தமிழ் நாட்டுள் வழங்கும் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி எனக் கூறுகின்றார்களே அவ்வகைக் கவிபாடுவோர் தற்காலம் இருக்கின்றார்களா, அவர்கள் யார், எவ்வகையாகப் பாடுவோருக்கு அப்பெயர்கள் பொருந்தும் என்பது அடியேனுக்கு விளங்காதிருத்தலால் அவற்றை நமதரிய தமிழனில் விளக்கி ஆட்கொள்ளும்படி வேண்டுகிறேன்.

தி.நா. பாலகிருஷ்ணன். மதுரை,

விடை: தற்காலமுள்ள விவேகிகள் யாவரும் தமிழையும் அதன் சுவையையும் ஓம்பாது விடுத்து ஆங்கில பாஷையையே பெரும்பாலும் அனுசரிக்க முயன்றுவிட்டதினால் தமிழ் பாஷையினது மணமும் செய்யுட்களின் சிறப்பும் மறைந்து இன்னார்தான் ஆசுகவி, இன்னார்தான் மதுரகவி, இன்னார் தான் சித்திரகவி, இன்னார்தான் வித்தாரக்கவியெனக் குறிப்பிட்டுக் கூறுவதற்கு ஆளில்லாமற் போய்விட்டது. இப்புலமெயோர் சிறப்புக்கள் யாவும் புத்ததன்மம் இத்தேசத்திற் பரவியிருந்தவரையில் சிறப்புற்றோங்கி, அஃது மறைந்தபின்னர் வித்வ அமிசையோர் சிறப்பும் மறைந்தே நிற்கின்றது.

இவற்றுள் கற்றுணர்ந்த பெரியோரை வடமொழியில் வித்வான்கள் என்றும், தென்மொழியில் புலமெயோர் என்றும் வழங்கிவந்தார்கள். அவர்களுள் ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவியென்னும் நான்கினையும் பாடவல்லவரை "கவி" என்றும், பொருள் விளங்காமொழிகளை பொருள் விளங்க செவ்விய நடையில் விவரித்துப்பாடுவோரை "கமகன்" என்றும், தொடுத்த காரிய காரணங்களை உபமான உபமேயங்களால் விளக்கி எதிரிகளது கொள்கைகளைத் தடுத்து தனது கொள்கையை மேற்கொள்ளபாடுவோரை "வாதி" என்றும், அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கின் விவரங்களையும் தெளிவுற போதித்து வாய்மெயையூட்டி சத்தியதன்மத்தில் நிலைக்கச் செய்வோரை "வாக்கி" என வகுத்திருக்கின்றார்கள்.

இவற்றுள் ஆசுகவிபாடும் விதிகள் யாதெனில்:- எதிரி யொருவன் ஒருபொருளைச் சுட்டிக்காட்டி அதன் செயல் விளங்கப் பாடவேண்டு மென்றவுடன் அதன் குணாகுணப் பொருளை விளக்கி, பாவணி பிறழாது