பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/567

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 557

உரையோ இன்ன உரையென்று விளங்குவதற்கு ஆதாரமில்லாமலே விரிந்திருக்கின்றது. மணிமேகலை நூலுக்கு வேறு யாரேனும் உரையெழுதி யிருக்கின்றார்களா

பு.க. முனிநாதன். வேலூர்,

விடை: மணிமேகலையென்னும் செய்யுளே சரிவர வெளிவராமல் வரிக்குவரி மாறுதலும் மொழிக்கு மொழி பேதமுற்றும் பூர்வ ஓலைப்பிரிதி களுக்குப் பிரிதி சிதலுண்டும் போய்விட்டபடியால் அவரவர்களுக்குக் கிடைத்த மேறை அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றார்கள். கூடியசீக்கிரம் சுத்தப்பிரிதி வெளியாகும். அப்போது சரித்திரக்கோர்வையைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். மணிமேகலை என்னும் மங்கை சிற்றின்பத்தை வெறுத்து பேரின்பத்தை விரும்பிபுத்த சங்கஞ் சேர்ந்து பிக்குணியாகி ஆதி அறச்செல்வி என்றும், சிந்தாதேவியென்றும், சிந்தாவிளக்கென்றும் வழங்கிய அம்பிகா தேவியாம் அவ்வையின் ஒழுக்கத்தைப் பின்பற்றி தெய்வநிலையடைந்து பரிநிருவாண முற்றப்பின்னர் அவ்வம்மனை இத்தேசத்தோர் தேவியாகக் கொண்டாடி வந்திருக்கின்றார்கள். அவ்வகைக்கொண்டாடிவந்தவற்றை அடியிற்குறித்துள்ளப் பாடலால் காணலாம்.

கம்பருடைய புத்திரர் அம்பிகாபதி என்பவர் பாடியுள்ள செய்யுள்.

காதன்மடந்தையர் கையறுங்காலையு மெய்யகலா
மேதகுநாணு மெலியவன்றோ விழிபோலு நெய்தற்
போதவழ் மென்மலர்ப் புன்னையங்கானல்பொருந்துமிந்த
மாதவிபெற்ற மணிமேகலை நம்மெ வாழ்விப்பதே.

என சிந்தித்துள்ள செய்யுள் ஆதாரங்கொண்டு நமது தேசத்தோர் மணிமேகலா தேவியைக் கொண்டாடிவந்ததைக் காணலாம். அவ்வம்மனது கொண்டாட்டம் புத்ததன்மங்கள் மாறுபட்டு புதின மதங்கள் தோன்றிவிட்ட படியால் அம்மன் பெயர் சகலர் நாவிலும் வழங்காமலிருக்கின்றது. அதனால் தங்களுக்கு அப்பெயர் புதினமாகவும் விளங்குகின்றது. இத்தேசத்திற் பிறந்து வளர்ந்து ஜெகத்திற்கே குருவாக விளங்கிய கருணாகரக்கடவுளாம் புத்தருடைய பெயரும் அவருடைய சத்தியதன்மமும் மறைந்து அசத்திய தன்மங்கள் பரவிவிட்டபோது அவரது சங்கத்தினர் பெயர் மறைவதற்கு சான்றும் வேண்டுமோ, இல்லை. அம்மணிமேகலை என்னும் நூலுக்கு வேறொருவர் உரை எழுதியிருப்பார்களென்பதும் எமக்கு விளங்கவில்லை. ஏனென்பீரேல் தமிழ்பாஷையை மிக்கக் கற்றவரும் பௌத்த நூலாராய்ச்சியுள்ளவரும் மகா ஞானியுமாக விளங்கிய சிவப்பிரகாச சுவாமியவர்களே, மணிமேகலையென்னும் நூலிற்கு உரையெழுத எம்மால் இயலுமோவென பயந்துவிட்டிருக்க, தற்கால வித்துவான்கள் அவற்றிற்கு உரையெழுதியுள்ளாரென்பதை சங்கிக்கற்பாலதே. அவற்றுள் புத்ததன்மத்தைச்சார்ந்தக் குடும்பத்திற் பிறந்து வளர்ந்து அத்தன்ம ஒழுக்கத்தைச் சார்ந்துள்ளோர் எழுதினால் அவ்வுரையை சிலகால் ஏற்கப்பாலதன்றி ஏனைய மதத்தோர் எழுதியுள்ள உரையை சற்று சிந்தித்து ஆராயவேண்டியதேயாம். அதாவது தங்கள் புதினமதக்கூற்றை புத்ததன்மத்திற் கூட்டியுங் குறைத்து மிருப்பார்கள். அன்னோர் நூலைக் கண்ணுற்று எம்மெ வினாவுவதில் யாதுபயன். சிலகால் அமைதியுறின் சுத்தப்பிரிதி காணலாம்.

சிவப்பிரகாச சுவாமிகள் செய்யுள்

மந்தாகினியணி வேணிப் பிரான் வெங்கை மன்னவநீ
கொந்தராகுழன் மணிமேகலை நூனுட்பங்கொள்வதெங்ஙன்
சிந்தாமணியுந் திருக்கோவையு மெழுதிக்கொளினும்
நந்தா வுரையை யெழுதலெவ்வாறு நவின்றருளே.

6:29, டிசம்பர் 25, 1912

23. பதினெண் சித்தர்கள்

வினா: பதினெண் சித்தர்கள் புத்தருடைய காலத்தில் இருந்தவர்களா அல்லது பௌத்தரைச் சேர்ந்தவர்களா அல்லது ஆரியரின் காலத்திலிருந்து வந்தவர்களா. இவருள் கருவூரார் என்பவர் மோகனம், வசியம், தம்பளம், உச்சாடனம்,