பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/572

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

562 / அயோத்திதாசர் சிந்தனைகள்

எனும் பெயரை அளித்து அவனது தொழிலாம் ஓதல், ஓ துவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றலெனக் குறிப்பிட்டுள்ளார்கள். இவையே பௌத்தர்களது கூட்டத்துள் வழங்கிவந்த சமணநீத்தோர் பெயராகும். அப்பெயரே தற்காலத்திலுள்ள சாதித்தலைவர்கள் வைத்துக்கொண்டு அடுப்பூதுவோனும் அந்தணன், சாதமெடுத்து ஓடுவோனும் அந்தணன், மலமெடுக்கச்செய்யும் முதலாளியும் அந்தணன், மரித்தப்பிணங்களை அறுத்து சோதிப்போனும் அந்தணன், தோல்கடை சொந்தக்காரனும் அந்தணன், கள்ளுக்கடை கணக்காப்பிள்ளையும் அந்தணன், சாராயக்கடை சம்பிரதியும் அந்தணன், பெண்களைக் கூட்டிப்போவோனும் அந்தணன், பெண்சாதிப் பிள்ளைகளுடன் இல்லறசுகம் அநுபவிப்போனும் அந்தணனென வழங்கிவருவதாயின் அந்தணனென்னும் மொழியின் சிறப்பும் அதன் அந்தரார்த்தமும் மக்களுக்கு விளங்குமோ. இம்மேறையே அரசனது தொழிலையும், வணிகனது தொழிலையும், வேளாளனது தொழிலையும் உள்ளப்பெயர்களைக்கொண்டு அதன் பொருட்களையும் தற்கால இம் மொழிகள் மாறுபட்டு பிழை கொண்டுள்ளப் பொருட்களையும் விளக்குவதாயின் வீணே விரியுமென்றஞ்சி விடுத்துள்ளோம்.

பொய்யாய சாதிபேதச்செயலால் அனந்த மொழிகள் பொருள் பேதப்பட்டுள்ளதன்றி அவர்கள் மதக்கடை பரப்பி சீவிக்கும் சமயங்களினாலோ பூர்வத் தமிழ்மொழிகள் அனந்தமாகப் பொருள் கெட்டு வழங்கிவருகின்றது.

எவ்வகையா லென்னில் பெளத்தர்களதுகாலத்தில் அறிவின் பெருக்காம் ஞானவிருத்தி எவ்வகையால் உண்டாமென்னும் வினா எழுவில் சரியாக்கிரியை யோகத்தால் ஞானமுண்டாம் என்னும் விடைபகர்வதுண்டு. அதாவது சரியானவழியில் கிரியை ஓர்தொழிலை நடத்துவதாயின் யோகமென்னும் அதிர்ஷ்டபாக்கியமுண்டாம். அதனால் ஞானமென்னும் அறிவு விருத்தி பெறுமென்று தொழிலின் விருத்திக்காக பௌத்தர்கள் கூறிவந்த நீதிமொழி களாகும் மதக்கடை பரப்பி சீவிக்கும் அந்தண வேஷதாரிகளுக்கு அப்பொருள் விளங்காது. சரியையென்றால் கல்லுசாமி கட்டைசாமிகளுக்குப் புஷ்பமிட்டுக் கும்பிடுத லென்றும், கிரியையென்றால் கல்லுசாமி கட்டைசாமி முன்னின்று மந்திரஞ் ஜெபித்தலென்றும், யோகமென்றால் மூச்சையடக்குதலென்றும் மொழிக்கு உற்றபொருளைமாற்றி தங்கள் மனம் போனவாறு வழங்கி வருகின்றார்கள்.

நூதனமாய சாதிபேதத்தால் அனந்தமொழிகள் மாறுபட்டுள்ளதன்றி சமயபேதத்தால் தமிழ்மொழிகளின் பொருட்கள் அனந்தமாக மாறுபட்டிருக்கின்றது. ஈதன்றி சருவசாதியோரும் சருவசமயத்தோரும் வழங்கிவரும் மொழிகளுள் ஓர் கூட்டத்தோர் ய, ர, ல, வ, ழ, ள என்னும் இடையெழுத்து அட்சரந்தழுவி சிலர் வாழைப்பழம், கோழிக்கரி என்றும், சிலர் வாளைப்பளம், கோளிக்கரி என்றும்; சிலர் வாயப்பயம், கோயிக்கரியென்றும் எழுத்திலட்சணம் ஒட்டிப் பேசுவதை இலக்கணலட்சணமறியாம் பேதைகளிற் சிலர் ஏளனஞ் செய்வார்கள். பெரியசாதி என வேஷமிட்டுள்ளோ னொருவன் “நேக்கு” இப்தாபஞ்சமே தெரியாதென்று கூறுவானாயின் “நேக்கு” என்னு மொழிக்குப் பொருள் தெரியாவிடினும் அவன் கூறும் மொழியை சிறப்பாக ஏற்றுக் கொள்ளுவார்கள். அவனைச்சார்ந்த மற்றொருத்தி என்னாம் படியானாளம் பவருவானென்று கூறுவாளாயின் 'ஆம்படியான்' என்னுமொழிக்கும், 'னாளம்ப' வென்னு மொழிக்கும் பொருள்தெரியாவிடினும் அவள் கூறும் மொழியை சிறப்பாக ஏற்றுக்கொள்ளுவார்கள். இவ்வகையாய வழக்கமான நூதன மொழிகளையுங் கலந்து தமிழ் மொழிகள் மாறுபட்டிருக்கின்றது. சாதிபேதச் செயலாலும் சமயபேதச் செயலாலும் தென்மொழிப் பொருட்கள் அனந்தமாக மாறுபட்டிருப்பதுடன் தங்கள் தங்கள் சாதிவேஷத்திற்குஞ் சமய வேஷத்திற்குந் தக்கவாறு வடமொழியினது சிறப்பையும் அதன் பொருட்களையும் மிகுபடக் கெடுத்தே வைத்திருக்கின்றார்கள். அவைகளின் சுருக்கமாவது ‘பிராமணன்’ என்பது பிரம்மணமாம் சிறந்தநிலைபெற்று ‘யமகாதகா’ மரணத்தை ஜெயித்துக் கொண்டவனுக்குரிய பெயராம். அத்தகையான சிறந்தபெயரை குட்டம்பிடித்துச்