பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/575

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 565

இவைகள் யாவையும் உணர்ந்துள்ளவர்களே ஆராய்ந்து பதிப்பிக்கின் யாவிலு மேலாமென்றே கூறுவோம்.

6:40, மார்ச் 12, 1913

27. முதற்குறள்

வினா: நமது தெய்வப்புலமெய் திருவள்ளுவநாயனாரியற்றிய திரிக்குறள்-பரிமேலழக ருரைசெய்தது.

"அகர முதல வெழுத்தெல்லா
ஆதிபகவன் முதற்றேயுலகு."

என்றும், கவிராஜ சக்ரவர்த்தியே நீவிருரைசெய்தது:

“அகரமுதல வெழுத்தெல்லாம்
ஆதிபகவன் முதற்றே யுலகு.”

என்றும் இருக்கின்றமெயால் இவ்விரண்டிற்கும் பதம் சரியாயிருந்தாலும் உரை மாறுபட்டிருக்கின்றது.

3-வதாக-புதுப்பேட்டை ஸ்ரீமாந் ந. பாலகிருஷ்ணம் பிள்ளை , தாமியற்றிய “பிரிவாற்றாப் பரிவுறுநிலை” என்கின்ற சரமகவியின் முகப்பில்;

“அகரமுதலவெழுத்தெல்லாம்
ஆதி யுகர முதற்றே யுலகு."

என்று பதிப்பித்திருக்கின்றமெயால் இது புராதனகாலத்தில் உண்டான குறளோ அன்றேல் ஆரியர்களாகிய வன்நெஞ்ச அஞ்ஞானிகளால் ஏற்படுத்திய கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்றோ என்று விளங்காதிருக்கின்றமெயால் இம்மூன்றின் செய்யுட்களின் சங்கையை நிவர்த்திக்கக் கோறிநிற்கின்றனம்.

தா. ஷண்முகம், புதுப்பேட்டை

விடை: தற்காலந் தோன்றியுள்ள நூதன சாதியோரும், நூதன மதத்தர்களும் திரிக்குறளைத் தங்களுடைய மதத்திற்கு உரியனவென்றும், எங்கள் மரபின் சார்பினதென்றும் மாளா வழக்கிட்டுவருவது சாலநிலையாம். காரணமோவென்னில் புத்ததன்மத்தினின்றே சருவமதங்களுஞ் சகல வேதங்களும் தோன்றியுள்ளது கொண்டு வழிநூலாந் திரிக்குறளை எம்மதெம்ம தெனக் கூறத்துணிந்ததுமன்றி புத்ததன்ம சீலநிலை அறியாது செய்யுட்களையும் மாறுபடுத்திவருகின்றார்கள்.

நாயனார் திரிக்குறள் கடவுளென்னும் புத்தர் சிறப்பு முதற்செய்யுள் "அகரம் முதல் எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு" என வரவேண்டுமே யன்றி இவற்றிற்கு மாறாயுள்ளவை யாவும் பிழையேயாம். செய்யுள் தோன்றிய விதியும் அதன் கருத்து அறியாதார்க்கு முதநூற்றொடர்பும், வழிநூற் சுவையும், சார்புநூற் குணமும் விளங்கவே விளங்காவாம். முதல் வழி சார்பென்னு முத்திரிபில் "முதநூலுணர்ச்சி முற்றவறிந்தோ , ரிதவழிநூலி னின்பைமுகப்ப, ரதனது சார்பேயகலவிரிந்து, யிதயகளங்கை யறுப்பதுமாமே" என்னுங் காக்கை பாடிய விதியே போதுஞ்சான்றாம் ஆகலின் மேற்கூறிய செய்யுளுக்கு மாறு கொண்டன யாவுந் தப்பரை தப்பரையேயாம்.

7:3, ஜுன் 25, 1913

28. முத்தமிழ் திராவிடம்

வினா : முத்தமிழ், திராவிடம் என்னும் மொழிகள்யாவும் பௌத்தர்களால் தோன்றியதா, நூதனா மதஸ்த்தவர்களால் தோன்றியதா. பௌத்தர்களால் தோன்றியதென்னில் அதன் ஆதாரத்தையும் உதாரணத்தையும் விளக்கியருளல் வேண்டும். நூதன மதஸ்தர்களுடையதாயின் எம்மொழி ஆதாரங்கொண்டு அவ்வகை வழங்கி வருகின்றார்களென்பதையுந் தெள்ளற விளக்கி அடியேனைப் புனிதனாக்கவேண்டும்.

குருமணி, சேலம்

விடை : அம்மொழிகள் யாவும் பௌத்தர்கள் நாவில் வளர்ந்ததேயன்றி நூதன மதஸ்த்தர்பால் தோன்றியதன்றாம். அதனந்தரார்த்தமறிய நூதன