பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/583

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 573


(வி.) வரியிறைக் கொள்ளும் அரசனாகத் தோன்றி பிறப்பினால் உண்டாந் துக்கங்களையும், மூப்பினாலுண்டாந் துக்கங்களையுங் மரணத்தா லுண்டாங் துக்கங்களையுங் கண்டு சகிக்காது இத்துக்கநிவர்த்திக்கானவழி ஓன்றிருக்க வேண்டுமென்று உணர்ந்து இறைவனது நிலையா சுகபோகங்கள் யாவையும் விடுத்து, விருப்பு, வெறுப்பென்பதற்று, நல்வினை தீவினையென்பதை மறந்து, நாமரூபமென்னுந் துவிதபாவனையழிந்து, மெய்ப்பொருளுணர்ந்து, பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு வகைத் துக்கங்களும் ஒழிந்து சாதுயர் நீக்குந் தலைவன் தவமுநியெனத் தோன்றி, தான் கண்ட காட்சியையும் அநுபவத்தையும் மக்களுக்கு உலகநீதியாயோதி, உண்மெய்பொருளை உணர்ந்து ஒடுங்கவைத்தவராதலின் அவ்விறைவனது பொருளைச் சார்ந்து புகழ் பெற்றோருக்கு இருவினையும் ஒழியுமென்னும் அநுபவக்காட்சியால் வழி நூலாசான் கூறியதன்றி, சார்புநூலோருள் யாப்பருங்கலை உரையாசிரியர் குணசாகரனார் “பூந்தண் சினைமலர் மல்கியப்பொழிப்பிண்டி வேந்தன் புகழ்பரவாதவர் வினைவெல்லார், அதனால் அறிவண்நடியிணைப் பரவிப் பெருகவர் யாவரும் பிறவியிநெறியே”.“முருகவிழ் தாமரைமலர் மேன் முடியிமை யோர் புடைவரவே வருசினநாதருமறை நூல் வழி பிழையாமனமுடையார், (இருவினை) போய்விழமுனியா தெதிரிய காதியையறியா, நிருமலராயருவினராய் நிலவுவர் சோதியினிடையே” என்றும், வீரசோழிய உரையாசிரியர் பெருந்தேவனார், “அருள்வீற்றிருந்த திருநிழற்போதி முழுதுணர் முநிவநிற் பரவுதுந் தொழுதக, வொருமனமெய்தி (யிருவினைப்) பிணிவிட முப்பகை கடந்து நால்வகை பொருளுணர்ந், தோங்கு நீருலகிடையாவரு, நீங்காவின்பமொடு நீடுவாழ்கெனவே,” எனுந் தாட்டாந்தத்துடன் அரசனையே இறைவனெனக் கூறியவற்றிற்குப் பகரமாக ஞானக்கொம்மி" அரசகுலத்திலுருவாகி அம்பரமான வெளிதனிலே புரச மரத்திலொடுங்கி நின்றான் அவன் பொருளைப் பாரடி ஞானப்பெண்ணே” என்றும் நெஞ்சறி விளக்கம், “அரியதோர் அரசன் மைந்தன் அவனியிலுதித்து முன்னாள், பெரிய பேரின்பஞானம் பெருவதே பெரிதென் றெண்ணி, உரிய வேதாந்தவுண்மெயுரைக்கு மாசானுமாய, தெரியொணா நாகைநாதர் சீர்பதம் போற்று நெஞ்சே” என்றும், பட்டினத்தார், “மானார் விழியைக்கடைத்தேரி வந்தனன் வாண் குருவுங், கோனாகி வந்தென்னைக் குடியேற்றுக்கொண்டனன் குற்றமில்லை, போனாலும் பேரிருந்தாலு நற்பேரிதுபொய்யன்று காணானாலுமிந்த உடலோடிருப்ப தருவெறுப்பே” என்றுங் கூறிய குரு அரசனேயாதலின் இறைவனென்னு மொழி புத்தரையே குறித்ததென்பதுபோன்ற விரிவு.

6.பொறிவாயி லைந்தவித்தான் பொய்தீ ரொழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்வார்.

(ப.) பொறிவாயில் - பஞ்சபொறிகளின் வழியே, ஐந்து - அவா ஐந்தினையும், அவித்தான் - அடக்கினவனது, பொய்தீர் - பொய்யை யொழிக்கும், ஒழுக்கம் - நற்றவமாம், நெறிநின்றார் - நிலையில் நின்றவர்கள், நீடு வாழ்வார் நித்தியசுகம் பெறுவார்களென்பது பதம்.

(பொ.) ஐம்புல நுகர்ச்சியால் ஆசை கொண்டு உழலும் பொய்யாகியத் தோற்றத்தை அவித்து மெய்யாய ஐம்பொறிவொடுக்கத்தின் நின்றவரது நெறியில் ஒழுகுவோர் நீடு வாழ்வார்களென்பது பொழிப்பு.

(க.) ஐம்பொறியின் வாயலிற்செல்லும் பொய்த்தோற்றங்களாகிய ஆசைகள் ஐந்தினையும் அவித்து ஆமைபோலுள்ளடங்கி மெய்கண்ட தேவனாம் புத்தரது நல்லொழுக்க நெறியில் நின்று அவரது சாதனத்தைப் பின்பற்றியவர்கள் என்றும் அழியா நீடிய வாழ்க்கைப் பெறுவார்களென்பது கருத்து.

(வி.) கண்ணினாற் பார்த்தப் பொருட்களின்மீதே ஆசைகொண்டலை தலும், மூக்கினால் முகர்ந்த வாசனைகளை நாடி ஆசைகொண்டலைதலும், செவியினாற் கேட்ட மொழிகளில் ஆசைகொண்டலைதலும், நாவினால் உரிசித்த பொருட்களின்மீது ஆசைகொண்டலைதலும், தேகம்சுகித்த போகத்தை