பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் / 589

- தன்மத்தைச் செய்யாது மறந்துவிடுதலினும், கேடு - சீர்கேடு, இல்லை - வேறொரு கேடுமில்லை யென்பது பதம்.

(பொ.) தன்மத்தைவிட வேறொரு சுகாதாரமுங் கிடையாது. அதனை மறந்திருப்பதைவிட வேறொரு கேடுங் கிடையாதென்பது பொழிப்பு.

(க.) பொருளாசையற்று சருவ உயிர்களின் மீதும் அன்பு பாராட்டி தன்மம் புரிதலே தனது சுகச்சீருக்கு ஆதாரமென்றும் பொருளாசை யுற்று, சீவகாருண்ய மற்று, லோபியெனத் திரிவதே சகல சுகக்கேடுகளுக்கும் ஆதாரமென்பதூஉங் கருத்து.

(வி.) மக்கள் அவாவின் பெருக்கத்தால் ஈகையற்று பாசபந்தக் கட்டுக்களாம் வாணமுற்று மாறாப்பிறவியிற் சுழன்று தீரா துக்கத்தை அநபவித்துவருதலே பெருங்கேடாக முடிவதும், மக்கள் அவாவினையொழித்து ஈகைநிலைத்து பாசபந்தக்கட்டுக்களை அறுத்து நிருவாணம் பெற்று பிறவியென்னும் சமுத்திரத்தைக் கடந்து சதாசுகத்தில் நிலைக்கச்செய்வதுமாய அறத்தினது வலியையும் அதனது மெலிவையும் ஆராய்ந்தறிந்த மேலோர் தன்மத்தை விட வேறொரு சுகவழியும் இல்லையென்றும் அதனை மறத்திலினுங் கேடு மற்றொன்று மில்லையென்றுங் கூறியுள்ளவற்றிற்குப் பகரமாக அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் "குறைக்கருமம் விட்டுரைப்பிற்கொள்ளவுலவா, அறக்கரும மாராய்ந்து செய்க - பிறக்கடைக்கோ, நெஞ்சே மாப்பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத் துஞ்சாத்துயரந்தரும்." என்றும், "ஈட்டியவொண்பொருளு மில்லொழியும் சுற்றத்தார், காட்டுவாய் நேரே கலுழ்ந்தொழிவர் - மூட்டு, மெரியினுடம்பொழியும் ஈர்ங்குன்ற நாட, தெரியி னறமே துணை" எனக் கூறியுள்ள சார்பே போன்றவிரிவு.

3. ஒல்லும் வகையா லறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

(ப.) ஒல்லும் வகையால் - தன்ம நூலையுணர்ந்தவழியால், அறவினை - தன்மச்செயலை, யோவாதே - மறவாமல், செல்லும்வாய் - கூடியவரையில், யெல்லாம் - சோர்வுறாது. செயல் - செய்யவேண்டு மென்பது பதம்.

(பொ.) மக்கள் அற நூலை வாசித்தவழியால் தங்களாலியன்றவரையில் தன்மத்தை மறவாது செய்யவேண்டுமென்பது பொழிப்பு.

(க.) தங்களால் தன்மநூற்களை வாசித்தளவிலும், அறவுரைக் கேட்ட அளவிலும், தனக்குள்ளவரையிலும், தன்னாற்கூடியவரையிலும் அன்புகொண்டு அறவினைச் செய்யவேண்டுமென்பது கருத்து.

(வி.) முநிவரால் ஓதிவைத்துள்ள முதநூலை உணர்ந்தவகையால் அறச்செயல்களை என்றும் மறவாது நற்கடைபிடியிலும், நல்லூக்கத்திலும், நல்வாய்மெயிலும் நின்று சோர்வின்றி தன்மத்தைச் செய்யக் கூடியவரையில் செய்யவேண்டுமென்று வரைந்துள்ளவற்றிற்குப் பகரமாக அறநெறிச்சார ஆக்கியோன் முனைப்பாடியார் “இன்சொல்விளை நிலமா யீதலே வித்தாகி, வன்சொற் களைகட்டு வாய்மெ யெருவட்டி, அன்புநீர் பாய்ச்சி அறக்கதி ரீன்றதோர், பைங்கூழ் சிறுகாலைச்செய்” என்றும், மகாபுராணம் "கருமபூமியிற் புன்முதற் பிறப்பெலாங்கடந்து, பொருவின் மானிடத்தொழிலுடன் பிறந்தருள்பூத்து, மருவுகண்டுயிலிளமெ மூப்பொரி இத்தருமத்தி, னுரிமெயிற் செய்து மென்றிட லயம்புரிந்தோங்கும்" என்றும், "போதமேவியகாதை கேட்டிருந்தவம்புரியா, ரேதமேவிய நரகத்தினழுந்துவரியம, னாதி நாட்டொடர்ந்தற்றமே நோக்குவனதனாற், பேதையீரறம்புரிந்திடு மெனமறை பேசும்” என்று கூறியுள்ளவைகளே அறநூலை உணர்ந்து செய்யும் அறச்செயல் களென்பது விரிவு.

4.மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.

(ப.) மனத்துக்கண் - உள்ளத்தினிடத்தே, மாசிலனாதல் - களங்க மற்றவனென்று, பிற - அன்னியரால் கண்டறிவதற்கு, ஆகுல - ஆனந்தத்துடனும்,