பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 2, ஞான அலாய்சியஸ்.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

600 / அயோத்திதாசர் சிந்தனைகள்


(வி.) இல்லறத்தையே நல்லறமாகக்கொண்டு இறந்தோரை இடு காட்டிற்கும், துறந்தார்க்குத் துணையாகவிருந்து தூயநிலையடைதற்கும், துறவாது ஆதுலநிலையுற்றோர்க்கு உண்டி கொடுத்தும் உயிர்பிச்சை அளித்தாதரிக்குங் கருணையுடையோளாய் கணவனையே கடவுளாகக் கருதுங் கற்புடையவளாய இல்வாழ்க்கைத்துணைவி ஒருவளிருப்பாளாயின் அவளில்லத்தில் சகலபாக்கியங்களும் நிறைந்திருக்கும். இல்லாள்நீலியும், இடும்பியும், லோபியும், கற்பற்ற பாவியுமா யிருப்பாளாயின் அவளில்லத்தில் சகல பாக்கியங்களும் நிறைந்திருப்பினும் நிர்பாக்கியவதி யென்னும் நிட்டூரத்தாற் கழிந்த மாணாக்கடை யடைவனென்பதற்குச் சார்பாய் அறநெறிச்சாரம் “நெறுங்குபெய்தாக்கிய கூழாரவுண்டு, பிறங்கிருகேட்டொடுபன்றியுமவாழும், அறஞ்செய்து வாழ்வதே வாழ்க்கைமற்றெல்லாம் வெறும்பேழை தாழ்க்கொளீ இயற்று" என்னும் ஆதாரங்கொண்டு கற்புங் கருணையுமமைந்த வாழ்க்கைத்துணையே துணையென்றும் மற்றுமில்லாள் துணைவாழ்க்கைக்குக் கேடென்பது விரிவு,

4.பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னுந்
திண்மெயுண் டாகப் பெறின்.

(ப.) பெண்ணிற் - பெண்களுள், கற்பென்னும் - பதுமினியென்னும், திண்மெயுண்டாகப் - திறமெயுடையாளை, பெறின் - வாழ்க்கைக்குத் துணையாகப் பெற்றவனுக்கு, பெருந்தக்க யாவுள - இவளினும் பெறவேண்டிய வேறு சம்பத் துளவோ வென்பது பதம்.

(பொ.) கற்பிற்கு இனியாளை தனது இல்வாழ்க்கைத் துணையாக சேர்த்துக்கொண்டவனுக்கு இவளினும் வேறொரு தக்கப் பொருளுளவோ என்பதுபொழிப்பு.

(க.) நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு, சீலம், கருணை இவைகள் நிறைந்த கற்புடையப் பெண்மணியை ஒருவன் தனது இல்வாழ்க்கைத் துணைவியாகத் தேடிக்கொள்ளுவானாயின் அவ்வில்லிற்கு அவளினும் பெருத்த சம்பத்து வேறுளவோ என்பது கருத்து.

(வி.) கணவனுக்கு இனியவளாயுள்ள சம்பத்து, கணவனுக்கு எதிர்மொழி கூறாசம்பத்து, மாமி ஆதுலர்பால் மிருதுமொழி பேசுஞ் சம்பத்து, தனது கணவன் உறவின் முறையோரையே தனது உறவின்முறையோராகக் கருதி அவர்களை ஆதரிக்குஞ் சம்பத்து, நாணத்தையே ஆபரணமாகக்கொள்ளுஞ் சம்பத்து, அச்சத்தையே ஆடையாக அணையுஞ் சம்பத்து, தன்வீட்டின் சங்கதிகளை அன்னியர் வீடுகளுக்குக் கொண்டுபோகா சம்பத்து, அன்புங் கருணையுமே ஆதாரமாகக் கொண்டுள்ள சம்பத்தாம் கற்பு நிறைந்த பெண்மணி வாழ்க்கைக்குத் துணையாவளேல் அவ்வில்லிற்கு அவளினும் வேறு சம்பத்துளவோ என்பதற்குச் சார்பாய் அறநெறித்தீபம் "அச்சமொடு நாணமட மரிய பயிர்ப்புடையாளாய், இச்சையறு ஞானநிதி யினியமொழி கற்புநிலை, அச்சுருவா மாணியதா அமைந்தவளே வாழ்க்கைபெறில், நிச்சயமா மில்லிற்கு நேருநித வேறாமோ” என்னும் ஆதாரங்கொண்டு கற்பிற்கினியவள் இல் வாழ்க்கைபெறில் கணவன் தேடவேண்டிய வேறு சம்பத்து இல்லையென்பது விரிவு.

5.தெய்வந் தொழஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.

(ப.) தெய்வந் - தெய்வத்தை, தொழாஅள் - வணங்கமாடடாள், கொழுநற் - தனது கணவனையே தெய்வமென, றொழுதெழுவாள் - வணங்கிக் துயிலெழுபவள், பெய்யெனப் - தூவவேண்டுமென, பெய்யு - தூஉம், மழை - துளிர் நீரென்பது பதம்.

(பொ.) தன்னைக் காக்கும் தெய்வம் வேறொன்று வணங்காது தனது கணவனையே காக்குந்தெய்வமென வணங்கி துயிலெழுந்து கற்பின் நிலை நிற்பவள் பெய்யென்றால் மழை பெய்யுமென்பது பொழிப்பு.